செட்டிநாடு தேங்காய் குழம்பு

நீங்கள் செட்டிநாடு ரெசிபியின் பிரியர் என்றால், அதுவும் உங்கள் வீட்டில் செட்டிநாடு ரெசிபிக்களை செய்ய நினைத்தால், சிம்பிளான செட்டிநாடு தேங்காய் குழம்பு செய்யுங்கள்.

Posted By:

தமிழ்நாட்டில் செட்டிநாடு ரெசிபிக்கள் மிகவும் பிரபலமானது. அதோடு செட்டிநாடு ரெசிபிக்கள் சுவையானதும் கூட. நீங்கள் செட்டிநாடு ரெசிபியின் பிரியர் என்றால், அதுவும் உங்கள் வீட்டில் செட்டிநாடு ரெசிபிக்களை செய்ய நினைத்தால், சிம்பிளான செட்டிநாடு தேங்காய் குழம்பு செய்யுங்கள். இந்த தேங்காய் குழம்பு, இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். அதோடு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையிலும் இருக்கும்.

 Chettinad Coconut Kuzhambu Recipe In Tamil

உங்களுக்கு செட்டிநாடு தேங்காய் குழம்பு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு தேங்காய் குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

* கடுகு - 1 டீஸ்பூன்

* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்

* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை

* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)

* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)

* பச்சை மிளகாய் - 2

* செட்டிநாடு குழம்பு மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்

* புளிச்சாறு - 2 டேபிள் ஸ்பூன்

* உப்பு - சுவைக்கேற்ப

* சர்க்கரை - 1/2 டீஸ்பூன்

* தேங்காய் - 1/2 கப் (துருவியது மற்றும் நீர் சேர்த்து மென்மையாக அரைத்தது)

* தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.

* பின்னர் அதில் வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

* பின்பு அதில் மசாலா பொடியை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

* பிறகு அதில் தேவையான அளவு நீரை ஊற்றி, உப்பு, சர்க்கரை, புளிச்சாறு மற்றும் தேங்காய் பேஸ்ட்டை சேர்த்து கிளறி, 10 நிமிடம் குறைவான தீயில் நன்கு கொதிக்க வைத்து இறக்கினால், செட்டிநாடு தேங்காய் குழம்பு தயார்.

Image Courtesy: yummytummyaarthi

[ of 5 - Users]
Story first published: Saturday, June 25, 2022, 15:51 [IST]
Desktop Bottom Promotion