Latest Updates
-
3 கத்திரிக்காயும், 2 தக்காளியும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 13 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கேட்ட வரம் கிடைக்கும் அதிர்ஷ்ட நாளாக இருக்குமாம் -
நாளை நடக்கும் எம நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு தலைவிதி மாறும், செல்வம் பெருகும்.. -
உங்களுக்கு வெற்றி, பணம் குவியணுமா? அப்ப சாணக்கியர் கூறும் இந்த 4 காலை பழக்கங்களை வெச்சுக்கோங்க.. -
முட்டையும், குடைமிளகாயும் இருந்தா.. ஒருடைம் இத ட்ரை பண்ணுங்க.. அப்புறம் பாருங்க அடிக்கடி செய்வீங்க.. -
முகத்தில் வளரும் முடியை நீக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்குகளை அடிக்கடி போடுங்க.. -
ஜூலை 15-ல் குரு அஸ்தமனமாவதால் இந்த 5 ராசிக்கு பண மழை பொழியும், பதவி உயர்வு கிட்டும்! -
சிக்கன் மலாய் கபாப் - சிம்பிளா எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
சீரக நீர் Vs சியா விதை நீர் - இவற்றில் உடல் எடையை குறைக்க சிறந்தது எது? -
12 ஆண்டுகள் கழித்து ஜூலை 16-ல் உருவாகும் 'குரு ஆதித்ய ராஜயோகம்': இந்த 6 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்க போகுது!
செஃப் தீனா ஸ்டைல் வரகரிசி வெண் பொங்கலும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்யணும் தெரியுமா?
Chef Deena Style Varagu Arisi Ven Pongal With Coconut Chutney Recipe In Tamil: வெள்ளிக்கிழமை என்றாலே உங்கள் வீட்டில் காலையில் வெண்பொங்கல் தான் டிபனாக இருக்குமா? எப்போதும் ஒரே மாதிரி பச்சரிசியைக் கொண்டு வெண் பொங்கல் செய்து போரடித்தால், ஒருமுறை வரகரிசியைக் கொண்டு வெண் பொங்கல் செய்யுங்கள்.

இந்த பொங்கல் உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு ஏற்றது. இந்த பொங்கலுக்கு வேர்க்கடலை சட்னி பிரமாதமாக இருக்கும். முக்கியமாக இது வீட்டில் உள்ளோர் அனைவரும் கேட்டு விரும்பி சாப்பிடக்கூடியவாறு சுவையாக இருக்கும். அதுவும் குழந்தைகள் போட்டி போட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.
இந்த வரகரிசி வெண் பொங்கல் மற்றும் வேர்க்கடலை சட்னி குறித்து பிரபலமான செஃப் தீனா அவர்கள் தனது யூடியூப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். உங்களுக்கு செஃப் தீனா ஸ்டைல் வரகரிசி வெண் பொங்கலும், வேர்க்கடலை சட்னியும் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செஃப் தீனா ஸ்டைல் வரகரிசி வெண் பொங்கல் மற்றும் வேர்க்கடலை சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வரகு அரிசி - 1 கப்
* பாசிப்பருப்பு - 1/2 கப்
* தண்ணீர் - 3 1/4 கப்
* இஞ்சி - 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* மிளகு - 3/4 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* முந்திரி - 15
* கறிவேப்பிலை - 1 கொத்து
* உப்பு - சுவைக்கேற்ப
* நெய் - 4 டேபிள் ஸ்பூன்
வேர்க்கடலை சட்னிக்கு..
* வேர்க்கடலை - 200 கிராம்
* தேங்காய் - 1 பத்தை
* சின்ன வெங்காயம் - 4
* இஞ்சி - 2 சிறிய துண்டு
* வரமிளகாய் - 7
* புளி - சிறிய துண்டு
* கறிவேப்பிலை - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 3
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் வரகரிசி மற்றும் பாசிப்பருப்பை
எடுத்துக் கொண்டு, நீரை ஊற்றி, குறைந்தது 1/2 மணிநேரம் ஊற வைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின் ஊற வைத்ததை நன்கு கழுவி விட்டு, குக்கரில் சேர்த்து, அதில் 3
1/4 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 3 விசில் விட்டு
இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து பருப்பையும், வரகரிசியையும் கிளறி
விட வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும்,
மிளகு சேர்த்து பொரிய விட வேண்டும்.
* அதன் பின் அதில் சீரகம், இஞ்சி, முந்திரி, கறிவேப்பிலை ஆகியவற்றை
சேர்த்து நன்கு தாளித்து, குக்கரில் உள்ள பொங்கலுடன் சேர்த்து நன்கு
கிளறி விட்டு, மூடி வைத்து, 10 நிமிடம் வைத்து, பின் திறந்தால்
சுவையான வரகரிசி வெண் பொங்கல் தயார்.
* சட்னி செய்வதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, மிதமான தீயில்
வைத்து நன்கு வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் வறுத்த வேர்க்கடலையின் தோலை நீக்கிவிட வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வறுத்த வேர்க்கடலை, தேங்காய், 1 பத்தை
தேங்காய், சின்ன வெங்காயம், இஞ்சி, 7 வரமிளகாய், புளி, 4 கறிவேப்பிலை
இலை மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து சிறிது நீரை ஊற்றி,
கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக சட்னி தாளிக்க ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1
டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு,
3 வரமிளகாய் மற்றும் 1 கொத்து கறிவேப்பிலை சேர்த்து தாளித்து,
சட்னியுடன் சேர்த்து கலந்தால், வேர்க்கடலை சட்னி தயார்.



Click it and Unblock the Notifications