Latest Updates
-
சுரைக்காய் தோசையும், முள்ளங்கி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க.. -
அக்டோபர் 10 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கடகத்தை விட்டு விலகும் குரு: விஜய் ஆட்சிக்கு ஆபத்தா? 2027-ல் நடக்கப்போவது என்ன? ஜோதிடர் கணிப்பு! -
டெல்லிக்கு முன் 139 ஆண்டுகளாக இந்தியாவின் தலைநகரமாக இருந்த நகரம் எது தெரியுமா? -
மகாளய அமாவாசைக்கு வாழைத்தண்டை இப்படி கூட்டு செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்..
வெண்பொங்கலை ஒருமுறை ஐயர் வீட்டு ஸ்டைலில் செஞ்சு பாருங்க.. சும்மா வேற லெவல்-ல இருக்கும்..
Iyer Veetu Style Ven Pongal Recipe In Tamil: தினமும் காலையில் இட்லி, தோசை சாப்பிட்டு போரடித்துவிட்டதா? அப்படியானால் இன்று வெண்பொங்கல் செய்யுங்கள். அதுவும் வழக்கமாக நீங்கள் செய்வது போன்று செய்யாமல், ஐயர் வீட்டு ஸ்டைலில் வெண் பொங்கலை ட்ரை செய்யுங்கள்.
இந்த ஸ்டைல் வெண்பொங்கல் வாயில் வைத்ததும் நழுவி உள்ளே செல்வது போன்று இருக்கும். மேலும் இது ஹோட்டலில் கொடுப்பது போன்று அட்டகாசமான சுவையுடனும் இருக்கும். முக்கியமாக இந்த ஸ்டைலில் வெண்பொங்கலை செய்தால், குழந்தைகள் விரும்பி சாப்பிடுவதோடு, வீட்டில் உள்ளோரின் பாராட்டுக்களையும் பெறலாம்.

உங்களுக்கு ஐயர் வீட்டு ஸ்டைலில் வெண்பொங்கலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஐயர் வீட்டு ஸ்டைல் வெண்பொங்கல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பச்சரிசி - 3/4 கப்
* பாசிப்பருப்பு - 1/4 கப்
* தண்ணீர் - 3 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* நெய் - 1/4 கப்
* முந்திரிப் பருப்பு - 5
* மிளகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 1 (நறுக்கியது)
* இஞ்சி - 2 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் பச்சரிசி மற்றும் பாசிப்பருப்பை
ஒன்றாக எடுத்து, அதை நீரில் நன்கு 2 முறை கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் கழுவிய அரிசியை குக்கரில் போட்டு, 3 டம்ளர் நீரில் ஊற்றி,
சுவைக்கேற்ப உப்பு சேர்க்க வேண்டும்.
* பின்பு அந்த குக்கரை அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 5 விசில்
விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். முக்கியமாக தானாக விசில் போகும் வரை
குக்கரைத் திறக்கக்கூடாது.
* விசில் போனதும், குக்கரைத் திறந்து ஒருமுறை கரண்டையால் மசித்து
கிளறி விட வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன் நெய்
ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* நெய் சூடானதும், மிளகு, சீரகம் சேர்த்து நன்கு பொரிய விட
வேண்டும்.
* பின் பொடியாக நறுக்கிய இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு
வதக்க வேண்டும்.
* அடுத்து முந்திரியை சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்க
வேண்டும்.
* அதன் பின் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து இறக்கி, குக்கரில் உள்ள
சாதத்துடன் சேர்க்க வேண்டும்.
* இறுதியாக அந்த குக்கரை ஒருமுறை அடுப்பில் வைத்து, 2 நிமிடம்
தாளிப்பு பொங்கலுடன் சேரும் அளவில் நன்கு கிளறிவிட்டு இறக்கி,
இறுதியாக 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி கிளறினால், சுவையான ஐயர் வீட்டு
ஸ்டைல் வெண்பொங்கல் தயார்.
Image Courtesy: Swasthi's Recipes



Click it and Unblock the Notifications
