Latest Updates
-
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்..
சிம்பிளான... குடைமிளகாய் பொரியல்
நாம் கடைகளில் குடைமிளகாயை பார்த்திருப்போம். குடைமிளகாயை உணவில் அதிகம் சேர்ப்பது மிகவும் நல்லது. ஏனெனில் இதில் நோயெதிர்ப்பு சக்திக்கு தேவையான வைட்டமின் சி அதிகம் உள்ளது.
பலருக்கு மதிய வேளையில் பொரியல் இல்லாமல் சாப்பாடே இறங்காது. அத்தகையவர்கள் தினமும் புதுப்புது சுவையில் பொரியலை சாப்பிட விரும்புவார்கள். அந்த வகையில் நாம் கடைகளில் குடைமிளகாயை பார்த்திருப்போம். குடைமிளகாயை உணவில் அதிகம் சேர்ப்பது மிகவும் நல்லது. ஏனெனில் இதில் நோயெதிர்ப்பு சக்திக்கு தேவையான வைட்டமின் சி அதிகம் உள்ளது. இந்த குடைமிளகாயை பலருக்கு எப்படி செய்வதென்று தெரியாது.

எனவே தமிழ் போல்ட் ஸ்கை குடைமிளகாய் கொண்டு செய்யப்படும் ஒரு அற்புதமான எளிய பொரியலை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* குடைமிளகாய் - 2
* தக்காளி - 3
* பெரிய வெங்காயம் - 1
* குழம்பு மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* சீரகப்பொடி - 1/4 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் குடைமிளகாயை ஓரளவு நீளத் துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
* பின் வெங்காயம் மற்றும் தக்காளியையும் நறுக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
* பிறகு வெங்காயத்தைப் போட்டு சிறிது உப்பு தூவி 2 நிமிடம் வதக்கவும்.
* அடுத்து தக்காளியையும் சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கி விடவும்.
* தக்காளி நன்கு வதங்கிய பின், குடைமிளகாயை சேர்த்து, அத்துடன் குழம்பு மிளகாய் தூள், சீரகப் பொடி மற்றும் சிறிது நீர் தெளித்து, மூடி வைத்து 2 நிமிடம் வேக வைத்து இறக்கினால், சுவையான குடைமிளகாய் பொரியல் தயார்.



Click it and Unblock the Notifications











