Latest Updates
-
கோதுமை ரவா இட்லியும், தக்காளி கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
நவம்பர் 07, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 14 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
சுக்கிரதாதித்ய யோகத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
உங்க உதடுகள் கருப்பா இருக்குதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
200 கிராம் பன்னீர் இருந்தா இந்த தாபா ஸ்டைல் பன்னீர் புர்ஜி கிரேவியை செய்யுங்க - டக்கரா இருக்கும் -
1.11 லட்சத்திற்கு விற்கப்படும் இந்தியாவின் காஸ்ட்லியான தீபாவளி ஸ்வீட் - இதுல அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா? -
தீபாவளிக்கு 15 நிமிடத்தில் அதிரசம் செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சிம்ம ராசியில் குரு-செவ்வாய் சேர்க்கை: மார்ச் வரை இந்த 3 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழ்வாங்க.. -
தீபாவளிக்கு இந்த அவல் முறுக்கை செஞ்சு பாருங்க - வாரக்கணக்கில் வைச்சு சூப்பரா சாப்பிடலாம்
உடைத்த கோதுமை பாயாசம் ரெசிபி /கோதி பாயாசம் அல்லது உடைத்த கோதுமை கீர்

உடைத்த கோதுமை பாயாசம் ஒரு சுவையான ரெசிபி மட்டுமில்லாமல் ஆரோக்கியமான ரெசிபியும் கூட. அப்படியே அதன் க்ரீமி தன்மையும், நறுமணமிக்க ஏலக்காயின் மணமும் வீச நெய் சொட்ட சொட்ட தித்திக்கும் சுவையுடன் இருக்கும் இந்த பாயாசம் எல்லோருக்கும் விருப்பமான ஒன்றாகவும் இருக்கும். நமது வயிற்றை நிரப்புவதோடு உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது. குறைந்த கலோரியை கொண்டுள்ள இந்த சுவையான கீர் உங்கள் டயட் பழக்கத்திலும் கண்டிப்பாக இடம் பெற்று விடும்.
இந்த டிசர்ட் குறைந்த கலோரியைக் கொண்டுள்ளதால் சர்க்கரை
கட்டுப்பாட்டில் இருப்பவர்கள் கூட தாராளமாக இதை உண்ணலாம். ஆனால் இதன்
சுவை மட்டும் கண்டிப்பாக நம் நாவை தித்திப்பில் ஆழ்த்தி விடும்.
இந்த பாயாசத்தை கோதி ஹக்கி, ஸ்வீட் ஹக்கி, கோதி பாயாசம் என்று நிறைய
பேர்களில் அழைக்கின்றனர். தென் மாநிலங்களில் நடைபெறும் பண்டிகைகள் சுப
நிகழ்ச்சிகளில் கண்டிப்பாக இந்த பாயாசம் இடம்பெற்று விடும். குறிப்பாக
கர்நாடகாவில் இது ஒரு ஸ்பெஷல் ரெசிபி.
நமது உடலுக்கும் ஏராளமான நன்மைகளை தரும் இந்த டிசர்ட் கண்டிப்பாக
உங்களுக்கும் பிடிக்கும்.
சரி வாங்க இப்பொழுது இந்த கோதி பாயாச ரெசிபியை எப்படி செய்வது என்பதை வீடியோ மூலமும் மற்றும் செய்முறை விளக்க படத்துடனும் காணலாம்.

Recipe By: காவ்யா
Recipe Type: டிசர்ட்
Serves: 2
-
உடைத்த கோதுமை - 1 கப்
உலர்ந்த பழங்கள் (பாதாம் பருப்பு + முந்திரி பருப்பு + உலர்ந்த திராட்சை பழங்கள்) - 8-10 ஒவ்வொன்றும்
வெல்லம் - 1 கப்
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
தேங்காய் துருவல் - 1 கப்
பால் - 1/2 பெளல்
தண்ணீர் - 3 கப்
பாப்பி விதைகள் - 1 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் பொடி - 1 டேபிள் ஸ்பூன்
-
1. ஒரு பெளலை எடுத்து கொள்ளுங்கள். அதில் உடைத்த கோதுமை மற்றும் அது மூழ்கும் அளவுக்குத் தண்ணீர் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வையுங்கள். பிறகு தண்ணீரை வடிகட்டி கொள்ளவும்.
2. ஒரு குக்கரை எடுத்து கொள்ளுங்கள். அதில் இப்பொழுது ஊற வைத்த உடைத்த கோதுமையை குக்கரில் சேர்க்கவும். அதனுடன் தண்ணீர் சேர்த்து பருப்பு வேகவைப்பது போல, 3 விசில் வரும்வரை வேகவிடவும்.
3. விசில் வந்ததும் குக்கரைத் திறக்காமல் அப்படியே பத்து நிமிடங்கள் வரை ஆறவிடுங்கள்.
4. அது ஆறிக்கொண்டிருக்கும் அதே நேரத்தில், அடுப்பில் கடாயை வைத்து கசகசாவை லேசாக வறுத்து தனியே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
5. அதே கடாயில், வெல்லத்தை சேருங்கள். அதனுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொள்ளுங்கள் 10 நிமிடங்கள் வரை வெல்லம் முழுவதுமாக கரையும் வரை சூடுபடுத்தவும்.
6. வெல்லப்பாகு ரெடியாகிக் கொண்டிருக்கும்போதே ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல் மற்றும் வறுத்த கசகசாவை சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு மைய அரைக்க வேண்டும்.
7. இந்த அரைத்த விழுதை கொதித்துக் கொண்டிருக்கிற வெல்லப்பாகில் போட்டு, நன்றாகக் கலக்கவும்.
8. மூடியைக் கொண்டு மூடி மிதமான தீயில் 2-3 நிமிடங்கள் அந்த கலவையை வேகவிடவும். அதன்பின், அந்த கலவையோடு வேகவைத்த உடைத்த கோதுமையையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். நன்கு கிளறி 5 நிமிடங்கள் வரை வேகவிட்டதும் ஏலக்காய் பொடி சேர்த்து ஒருமுறை நன்கு கிளறிவிடுங்கள்.
9. அடுத்ததாக,நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை ஆகியவற்றை சேர்க்கவும். அதோடு இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து கிளறிவிட்டு,பின் கடைசியாக அதில் பால் சேருங்கள். பாலை நன்கு கலந்துவிட்ட பின், 5 நிமிடங்கள் மிதமான சூட்டில் வைத்து வேகவிட்டு இறக்குங்கள்.
10. தித்திக்கும் கோதி பாயாச ரெடி...
11. பாயாசத்தை வேறு பௌலிற்கு மாற்றி பின் பரிமாறலாம்.
- 1. பாலை காய்ச்சும் போது தொடர்ந்து கிளறிக் கொண்டே இருந்தால் கட்டிகள் இல்லாமல் இருக்கும்.
- 2. உடைத்த கோதுமையை குக்கரில் வேக வைப்பதற்கு முன் ஊற வைத்து கொண்டால் சீக்கிரமாக வெந்து விடும்.
- பரிமாறும் அளவு - 1 கப்
- கலோரிகள் - 382.20 கலோரிகள்
- கொழுப்பு - 18.61கிராம்
- புரோட்டீன் - 4.92 கிராம்
- கார்போஹைட்ரேட் - 48.68 கிராம்
- நார்ச்சத்து - 2.07 கிராம்
படத்துடன் செய்முறை விளக்கம் : உடைத்த கோதுமை பாயசம் செய்வது எப்படி
1. ஒரு பெளலை எடுத்து கொள்ளுங்கள். அதில் உடைத்த கோதுமை மற்றும் அது மூழ்கும் அளவுக்குத் தண்ணீர் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வையுங்கள். பிறகு தண்ணீரை வடிகட்டி கொள்ளவும்.
2. ஒரு குக்கரை எடுத்து கொள்ளுங்கள். அதில் இப்பொழுது ஊற வைத்த உடைத்த கோதுமையை குக்கரில் சேர்க்கவும். அதனுடன் தண்ணீர் சேர்த்து பருப்பு வேகவைப்பது போல, 3 விசில் வரும்வரை வேகவிடவும்.
3. விசில் வந்ததும் குக்கரைத் திறக்காமல் அப்படியே பத்து நிமிடங்கள் வரை ஆறவிடுங்கள்.
4. அது ஆறிக்கொண்டிருக்கும் அதே நேரத்தில், அடுப்பில் கடாயை வைத்து கசகசாவை லேசாக வறுத்து தனியே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
5. அதே கடாயில், வெல்லத்தை சேருங்கள். அதனுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொள்ளுங்கள் 10 நிமிடங்கள் வரை வெல்லம் முழுவதுமாக கரையும் வரை சூடுபடுத்தவும்.
6. வெல்லப்பாகு ரெடியாகிக் கொண்டிருக்கும்போதே ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல் மற்றும் வறுத்த கசகசாவை சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு மைய அரைக்க வேண்டும்.
7. இந்த அரைத்த விழுதை கொதித்துக் கொண்டிருக்கிற வெல்லப்பாகில் போட்டு, நன்றாகக் கலக்கவும்.
8. மூடியைக் கொண்டு மூடி மிதமான தீயில் 2-3 நிமிடங்கள் அந்த கலவையை வேகவிடவும். அதன்பின், அந்த கலவையோடு வேகவைத்த உடைத்த கோதுமையையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். நன்கு கிளறி 5 நிமிடங்கள் வரை வேகவிட்டதும் ஏலக்காய் பொடி சேர்த்து ஒருமுறை நன்கு கிளறிவிடுங்கள்.
9. அடுத்ததாக,நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை ஆகியவற்றை சேர்க்கவும். அதோடு இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து கிளறிவிட்டு,பின் கடைசியாக அதில் பால் சேருங்கள். பாலை நன்கு கலந்துவிட்ட பின், 5 நிமிடங்கள் மிதமான சூட்டில் வைத்து வேகவிட்டு இறக்குங்கள்.
10. தித்திக்கும் கோதி பாயாச ரெடி...
11. பாயாசத்தை வேறு பௌலிற்கு மாற்றி பின் பரிமாறலாம்.



Click it and Unblock the Notifications





































