பிரட்டும், தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் நேரத்துல 5 நிமிஷத்துல இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க..

Posted By:

Coconut Bread Balls Recipe In Tamil: பள்ளி முடிந்து வீட்டில் பசியுடன் வரும் உங்கள் பிள்ளைகளின் பசியைப் போக்கும் வகையில் ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? எப்போதும் பஜ்ஜி, போண்டா, வடை என்று செய்து போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான சுவையுடைய ஸ்நாக்ஸ் செய்து கொடுத்து அவர்களை அசத்த நினைக்கிறீர்களா?

உங்கள் வீட்டில் பிரட் மற்றும் தேங்காய் உள்ளதா? அப்படியானால் அந்த பிரட்டையும், தேங்காயையும் கொண்டு அற்புதமான சுவையில் ஒரு மொறுமொறுப்பான ஸ்நாக்ஸ் செய்து கொடுங்கள். இந்த தேங்காய் பிரட் பால்ஸ் செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, சுவையாகவும் இருக்கும். வீட்டிற்கு விருந்தினர்கள் வந்திருக்கும் போது இப்படியான ஸ்நாக்ஸை செய்து கொடுத்தால், நல்ல பாராட்டைப் பெறலாம்.

Bread Balls How To Make Coconut Bread Balls Recipe

உங்களுக்கு தேங்காய் பிரட் பால்ஸ் ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தேங்காய் பிரட் பால்ஸ் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* பிரட் - 6 துண்டு
* தேங்காய் - 1/4 மூடி
* நாட்டுச்சர்க்கரை - 2 1/2 டீஸ்பூன்
* பாதாம் - 6
* முந்திரி - 6
* காய்ச்சி ஆற வைத்த பால் - 1 டேபிள் ஸ்பூன்
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

* முதலில் மிக்சர் ஜாரில் பிரட் துண்டுகளை சேர்த்து, நன்கு பொடித்து, ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அதே ஜாரில் தேங்காய் துண்டுகளை சேர்த்து, கொரகொரவென்று அரைத்து, அதையும் பிரட் தூளுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் நாட்டுச் சர்க்கரையை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய முந்திரி மற்றும் பாதாமை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதில் 1 டேபிள் ஸ்பூன் காய்ச்சி ஆற வைத்த பாலை ஊற்றி, சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
* பின் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து உருண்டைகளாக பிடித்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், உருண்டைகளைப் போட்டு, மிதமான தீயில் வைத்து பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான தேங்காய் பிரட் பால்ஸ் தயார்.

[ of 5 - Users]
Story first published: Wednesday, February 25, 2026, 18:10 [IST]
Desktop Bottom Promotion