Latest Updates
-
உருளைக்கிழங்கை ஒருதடவை இந்த மாதிரி கொங்குநாடு ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க...டக்கரான சைடிஷா இருக்கும்...! -
அமெரிக்க-ஈரான் போரால் துபாயில் சரசரவென குறையும் தங்கம் விலை...இந்தியாவிலும் தங்கம் விலை குறையுமா? உண்மை என்ன? -
இந்த 4 ராசிக்காரங்க உயிரை கொடுத்தாவது குடும்பத்தை பாதுகாக்கும் ரியல் ஹீரோவாக இருப்பார்களாம்...உங்க ராசி என்ன? -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. தொப்பையும், உடல் எடையும் இருமடங்கு வேகத்துல குறையும்.. -
இன்றைய ராசிபலன் 07 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம்...! -
சனிப்பெயர்ச்சி 2026: இந்த 5 ராசிக்காரங்க ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கணுமாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
சுரைக்காயை இந்த மாதிரி பச்சடி செஞ்சு பாருங்க... இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்குமே டக்கரான சைடிஷா இருக்கும்... -
'நிறங்களின் ராஜா' என்று அழைக்கப்படும் நிறம் எது தெரியுமா? உங்களுக்கு இந்த கலர் பிடிக்குமானு சொல்லுங்க...! -
தஞ்சாவூர் கல்யாண சாம்பார் ரெசிபி... இந்த மாதிரி சாம்பார் வைச்சு பாருங்க... வீட்ல எல்லாரும் ஊத்தி குடிப்பாங்க.. -
'சீனாவின் நோஸ்ட்ரடாமஸ்' கணிப்பின் படி அமெரிக்க-ஈரான் போரில் ஜெயிக்கப் போவது யார்? போர் இப்படித்தான் முடியுமாம்
2 பீட்ரூட் இருந்தா.. இப்படி ப்ரை செஞ்சு குடுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க...
Beetroot Fry Recipe In Tamil: காய்கறிகளுள் பீட்ரூட் இரும்புச்சத்து அதிகம் நிறைந்தது. மேலும் இது இனிப்புச் சுவையை கொண்டது. இந்த பீட்ரூட்டை வெறுமனே சாப்பிடலாம். இல்லாவிட்டால் பொரியல் செய்து கூட சாப்பிடலாம். ஆனால் இது இனிப்புச் சுவையுடன் இருப்பதாலோ என்னவோ, நிறைய பேருக்கு பீட்ரூட் பிடிக்காது. வீட்டில் பீட்ரூட் செய்தால் தொட்டுக் கூட பார்க்கமாட்டார்கள்.
அப்படிப்பட்டவர்களை பீட்ரூட் சாப்பிட வைக்க வேண்டுமா? அப்படியானால் பீட்ரூட்டைக் கொண்டு ப்ரை செய்து கொடுங்கள். இப்படி பீட்ரூட் ப்ரை செய்யும் போது, பிடிக்காதவர்கள் கூட கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள். அதோடு அடிக்கடி செய்து கொடுக்குமாறும் கேட்பார்கள்.

உங்களுக்கு பீட்ரூட் ப்ரையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பீட்ரூட் ப்ரை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பீட்ரூட் - 2
* எண்ணெய் - தேவையான அளவு
* கடலை மாவு -1 கப்
* அரிசி மாவு - 1/2 கப்
* சோள மாவு - 1/2
* மிளகாய் தூள் - 1 1/2
* உப்பு - சுவைக்கேற்ப
* பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
* தண்ணீர் - சிறிது
* கறிவேப்பிலை - 1 கைப்பிடி
செய்முறை:
* முதலில் பீட்ரூட்டை எடுத்து, அதன் தோலை நீக்கிவிட்டு, பிரெஞ்சு
ப்ரைஸ் போன்று நீளவாக்கில் பீட்ரூட்டை வெட்டிக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் 1 கப் கடலை மாவு, 1/2 கப் அரிசி மாவு, 1/2
கப் சோள மாவு ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் மிளகாய் தூள், சுவைக்கேற்ப உப்பு, பெருங்காயத் தூள்
சேர்த்து கைகளால் நன்கு கிளறி விட வேண்டும்.
* அடுத்து வெட்டி வைத்துள்ள பீட்ரூட்டை சேர்த்து முதலில் நன்கு கிளறி
விட வேண்டும்.
* பின்னர் லேசாக நீரை தெளித்து தெளித்து, மாவு பீட்ரூட்டில் கோட்டிங்
ஆகுமாறு பிரட்டி விட வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி நன்கு சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் நன்கு சூடானதும், அதில் பிரட்டி வைத்துள்ள பீட்ரூட்டை
கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து எண்ணெயில் தூவி, பொன்னிறமாக ப்ரை செய்ய
வேண்டும்.
* பின் எடுக்கும் முன் சிறிது கறிவேப்பிலையை சேர்த்து ஒருமுறை கிளறி,
பின் எடுத்தால், சுவையான பீட்ரூட் ப்ரை தயார்.



Click it and Unblock the Notifications











