Latest Updates
-
மழைக்காலத்தில் மணி பிளாண்ட் செடியை இப்படி வைங்க! பணவரவு குறையாமல் இருக்க வாஸ்து ரகசியங்கள் இதோ -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சியால் ஜூன் 16 முதல் இந்த 4 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
ஜவ்வரிசி தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 11 ஜூன் 2026: இன்று உங்களின் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? -
ஜூன் 11-ல் நிகழும் 3 கிரகங்களின் அரிய சேர்க்கை: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சகல நன்மைகளும் கிடைக்கப்போகுதாம் -
விவாகரத்து இனி சுலபம்! உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு தம்பதிகளுக்குக் கொடுக்கும் நிம்மதி என்ன? -
தக்காளி இருந்தா இந்த மாதிரி ஹைதராபாத் தக்காளி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
ஹனிமூனுக்குப் பெற்றோரையும் கூட்டிச் சென்ற கணவர்! விவாகரத்து கோரி நீதிமன்றம் சென்ற மனைவி - என்ன நடந்தது? -
இந்தியாவின் ஒரு ரயில் நிலையத்தில் கூட ஏன் மருந்து கடை இருப்பதில்லை தெரியுமா? இதுக்கு இப்படி ஒரு காரணம் இருக்கா -
சாணக்கிய நீதி படி இந்த 5 விஷயங்களுக்காக பணத்தை செலவழிப்பவர்களை விட்டு வறுமை எப்பவுமே போகாதாம்
கார சட்னி, தேங்காய் சட்னி செஞ்சு போரடிச்சுடுச்சா.. அப்ப பீட்ரூட் சட்னி செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
Beetroot Chutney Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் தோசை சுடப் போகிறீர்களா? அந்த தோசைக்கு என்ன சட்னி செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? எப்போதும் கார சட்னி, தேங்காய் சட்னி, தக்காளி சட்னி செய்து போரடித்து விட்டதா?
உங்கள் வீட்டில் பீட்ரூட் உள்ளதா? அப்படியானால் அந்த பீட்ரூட்டைக் கொண்டு ஒருமுறை சட்னியை செய்யுங்கள். இந்த பீட்ரூட் சட்னி இட்லி, தோசைக்கு அருமையாக இருக்கும். மேலும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு பீட்ருட் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பீட்ரூட் சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* மிதமான அளவு பீட்ரூட் - 1 (பொடியாக நறுக்கியது)
* உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 15 பல்
* வரமிளகாய் - 5
* புளி - சிறிய எலுமிச்சை அளவு
* தேங்காய் - 1/2 மூடி (துருவியது)
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு..
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், பீட்ரூட்டை சேர்த்து 10 நிமிடம் பச்சை வாசனை
போக நன்கு வதக்கி, ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மீதி எண்ணெய்
இருந்தால், அத்துடன் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், உளுத்தம்
பருப்பு, கடலை பருப்பு சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* பின் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் வரமிளகாய் மற்றும் புளியை சேர்த்து 2 நிமிடம் வதக்க
வேண்டும்.
* பின் அதில் பீட்ரூட்டை சேர்த்து ஒருமுறை கிளறி இறக்கி குளிர வைக்க
வேண்டும்.
* வதக்கிய பொருட்கள் குளிர்ந்த பிறகு மிக்சர் ஜாரில் வதக்கிய
பொருட்களை சேர்த்து, அத்துடன் தேங்காய் மற்றும் சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து, சிறிது நீரை ஊற்றி, சற்று கொரகொரவென்று அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் போட்டு, அதில் சிறிது நீரை
ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள் மற்றும்
கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியுடன் சேர்த்து கிளறினால்,
சுவையான பீட்ரூட் சட்னி தயார்.
Image Courtesy: Apoorvas nalabagam



Click it and Unblock the Notifications