Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
2027-ல் ஏழரை சனியில் இருந்து விடுபடும் ராசிகளும்.. அதில் சிக்கி தவிக்கப்போகும் ராசிகளும்.. -
தங்கத்தை விட 2 லட்சம் மடங்கு விலையுயர்ந்த உலோகம் - இதன் ஒரு கிராமை வைத்து 200 கிலோ தங்கம் வாங்கிறலாம் -
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான்
3 வாழைப்பழமும், 1 கப் ராகி மாவும் வெச்சு... குழந்தைகளுக்கு இப்படி செஞ்சு கொடுங்க.. விரும்பி சாப்பிடுவாங்க..
Banana Ragi Kolukattai Recipe In Tamil: கோடை விடுமுறை விட்டுள்ள நிலையில் குழந்தைகள் வீட்டில் இருப்பதால், எப்போதும் சாப்பிட ஏதாவது கேட்பார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே ஸ்நாக்ஸ்களை செய்து கொடுக்க பழகிக் கொண்டால், செலவு மிச்சம் அல்லவா? அதுவும் உங்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா?
உங்கள் வீட்டில் வாழைப்பழமும், ராகி மாவும் உள்ளதா? அப்படியானால் அவற்றைக் கொண்டு கொழுக்கட்டை செய்து கொடுங்கள். இந்த கொழுக்கட்டை ருசியானது மட்டுமின்றி, சத்தானதும் கூட. அதுவும் ஒல்லியாக மற்றும் எடை குறைவாக இருக்கும் குழந்தைகளுக்கு இதை செய்து கொடுத்தால், உடல் எடை கூடும்.

உங்களுக்கு வாழைப்பழ ராகி கொழுக்கட்டையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வாழைப்பழ ராகி கொழுக்கட்டை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
அரைத்து வேக வைப்பதற்கு...
* வாழைப்பழம் - 2
* தேங்காய் - 2 கைப்பிடி
* பாதாம் - 10
* ஏலக்காய் - 2
* ராகி மாவு - 1 கப்
* நெய் - 1 டீஸ்பூன்
* நாட்டுச்சர்க்கரை - 1/2 கப்
வதக்குவதற்கு...
* நெய் - 1 டீஸ்பூன்
* துருவிய தேங்காய் - 2 கைப்பிடி
* வாழைப்பழம் - 1 (பொடியாக நறுக்கியது)
* காய்ச்சிய பால் - 1 கப்
* நாட்டுச்சர்க்கரை - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் 2 வாழைப்பழத்தை போட்டு நன்கு மென்மையாக
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு பாத்திரத்தில் அரைத்த வாழைப்பழத்தை எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு அதே ஜாரில் 2 கைப்பிடி தேங்காய், 10 பாதாம், 2 ஏலக்காய்
சேர்த்து நன்கு அரைத்து, அதையும் வாழைப்பழத்துடன் சேர்த்துக் கொள்ள
வேண்டும்.
* பிறகு அதில் ராகி மாவை சேர்த்து, கைகளால் நன்கு பிசைந்து விட
வேண்டும்.
* பின் அதில் 1 டீஸ்பூன் நெய் சேர்த்து, அத்துடன் நாட்டுச்சர்க்கரையை
சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
* பின்னர் பிசைந்த மாவை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி, நடுவே அழுத்தி
இட்லி தட்டில் வாழை இலையை விரித்து, அதில் வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு அதை இட்லி பாத்திரத்தில் வைத்து, 3-4 நிமிடம் வேக வைத்து
எடுத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி
சூடானதும், துருவிய தேங்காயை சேர்த்து 1 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய 1 வாழைப்பழத்தை சேர்த்து 1 நிமிடம்
வதக்கி, காய்ச்சிய பாலை 1 கப் ஊற்றி, நாட்டுச்சர்க்கரை சேர்த்து கிளறி
ஒரு கொதி
விட வேண்டும்.
* இறுதியாக அதில் வேக வைத்துள்ள ராகி கொழுக்கட்டையை சேர்த்து கிளறி,
மூடி வைத்து 2 நிமிடம் வேக வைத்து இறக்கினால், சுவையான வாழைப்பழ ராகி
கொழுக்கட்டை தயார்.



Click it and Unblock the Notifications
