Latest Updates
-
தக்காளியும், கொத்தமல்லியும் இருந்தா.. ஒருடைம் இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 27 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம் -
செவ்வாய் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
அட்டகாசமான ஆந்திரா கத்திரிக்காய் தக்காளி சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கோடைக்கால திருமணமா? வெயிலின் தாக்கத்தில் இருந்து விருந்தினர்களைக் காக்க இந்த 5 விஷயங்களைச் செய்ய மறக்காதீங்க! -
ஆண்களுக்கு இளம் வயதிலேயே வழுக்கை விழ காரணமாக இருக்கும் முக்கிய உணவுகள் - பார்த்து சாப்பிடுங்க -
திருமண உறவில் பாலியல் வன்கொடுமை: சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அதிர்ச்சி உண்மைகள்! -
இந்த தேதியில் பிறந்த பெண்கள் அவங்க கணவரை கோடீஸ்வரராக்கும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம் -
முட்டையை இந்த மாதிரி பட்டாணியுடன் சேர்த்து குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
வாஸ்து செடிகள்: 42°C வெயிலிலும் வீட்டை ஜில்லுனு வச்சுக்கணுமா? இந்த செடிகள் இருந்தா போதும்!
வாழைக்காயை பொரியல் பண்ணாம இந்த மாதிரி கோலா உருண்டை செஞ்சு கொடுங்க... எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...!
Banana Kola Urundai Recipe in Tamil: தின்பண்டங்கள் என்றாலே கடைகளில் கிடைப்பவை தான் என்றாகிவிட்டது தற்போதைய சூழ்நிலை. குழந்தைகளும் அவற்றையே பெரும்பாலும் விரும்பி சாப்பிடுகிறார்கள். நாமும் இந்த அவசர உலகில் எளிதாக இருப்பதால் அதற்கே பழகிவிட்டோம். நாம் என்ன தான் கடைகளில் வாங்கி சாப்பிட்டாலும் குழந்தைகளுக்கு கொடுத்தாலும், அங்கு குழந்தைகளின் ஆரோக்கியம் சமரசம் செய்யப்படுகிறது.
அதனால்தான் பல பெற்றோர்கள் வீட்டில் செய்வதை பழக்கப்படுத்தி கொள்கிறார்கள். அவர்களுக்காக வீட்டில் குழந்தைகளுக்கு எளிதாக செய்து கொடுக்க கூடிய வாழைக்காய் ஈவினிங் ஸ்னாக்ஸ் எப்படி செய்வது என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
- வாழைக்காய் - 2
- பெரிய வெங்காயம் - 3
- பச்சை மிளகாய் - 3
- இஞ்சி - சிறிய துண்டு (ஒரு இன்ச் அளவு)
- பூண்டு - 6 பல்
- கறிவேப்பிலை - ஒரு கொத்து
- சோம்பு - ½ டீ ஸ்பூன்
- சீரகம் - ¼ டீ ஸ்பூன்
- பொட்டுக்கடலை - 4 டேபிள் ஸ்பூன்
- துருவிய தேங்காய் - 1 கப்
- மல்லித்தூள் - 1 டீ ஸ்பூன்
- மஞ்சள் தூள் - ¼ டீ ஸ்பூன்
- கொத்தமல்லி - சிறிதளவு
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
- வாழைக்காயின் காம்பு மற்றும் அடிப்பகுதியை நீக்கிவிட்டு 2 அல்லது
3 துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
- குக்கரில் தண்ணீர் சேர்த்து நறுக்கிய வாழைக்காய் துண்டுகளை
சேர்க்கவும்.
- அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரை மூடி வேக
வைக்கவும்.
- 5 அல்லது 6 விசில் விட்டு நன்றாக வேக வைத்து ஆறவிடவும்.
- தேங்காயை துருவியோ அல்லது நறுக்கியோ எடுத்து வைக்கவும்.
- வெங்காயத்தை தோல் நீக்கி நீளவாக்கில் நறுக்கி வைத்து கொள்ளவும்.
- வாணலியை அடுப்பில் வைத்து காய்ந்ததும் எண்ணெய் சேர்க்கவும்.
- எண்ணெய் சூடானதும் அதனுடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து
வதக்கவும்.
- அதனுடன் கருவேப்பிலை, பச்சை மிளகாய், பூண்டு மற்றும் இஞ்சி சேர்த்து
கிளறவும்.
- அதில் சோம்பு மற்றும் சீரகம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
- பின் அதில் பொட்டுக்கடலை, துருவிய தேங்காய், மல்லித்தூள், மஞ்சள்
தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வறுத்து
ஆறவிடவும்.
- வேக வைத்து ஆற வைத்த வாழைக்காயை தோல் நீக்கி நறுக்கி கொள்ளவும்.
- அதை மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்து வேறு பாத்திரத்தில்
மாற்றி வைத்து கொள்ளவும்.
- மீண்டும் அதே மிக்ஸி ஜாரில் வறுத்து ஆற வைத்த பொருட்களை
சேர்க்கவும்.
- தண்ணீர் சேர்க்காமல் நன்றாக கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
- அதை அரைத்து வைத்த வாழைக்காயுடன் சேர்த்து நன்றாக பிசைத்து
கொள்ளவும்.
- தேவைப்பட்டால் உங்கள் சுவைக்கு ஏற்ப உப்பு மற்றும் காரம் சேர்த்து
கொள்ளவும்.
- கையில் எண்ணெய் தடவி பிசைத்து வைத்த மாவை வட்டமாகவோ அல்லது
உங்களுக்கு விருப்பமான வடிவில் தயார் செய்து கொள்ளவும்.
- வாணலியை அடுப்பில் வைத்து காய்ந்ததும் பொரிக்க தேவையான அளவு எண்ணெய்
சேர்க்கவும்.
- எண்ணெய் சூடானது உருட்டி வைத்த உருண்டைகளை எண்ணெயில் சேர்த்து
பொன்னிறமாக பொரித்து எடுத்தால் சுவையான கோலா உருண்டை ரெடி!
- இதை வடை போல் தட்டி கட்லெட் போலவும் செய்து கொடுக்கலாம்.



Click it and Unblock the Notifications











