Just In
- 1 hr ago
விரதம் இருக்கும்போது நீங்க காபி குடிக்கலாமா? அப்படி குடிச்சா என்ன நடக்கும் தெரியுமா?
- 2 hrs ago
பெண்கள் கணவரிடம் இருக்க வேண்டுமென்று எதிர்பார்க்கும் தகுதிகள்... உங்ககிட்ட இதுல ஒன்னாவது இருக்கா?
- 4 hrs ago
சத்தான... வாழைத்தண்டு சூப்
- 4 hrs ago
சர்வதேச பெண்கள் தினத்தை எல்லா பெண்களும் எப்படி கொண்டாடலாம் தெரியுமா?
Don't Miss
- Movies
ரீமேக்காகும் முந்தானை முடிச்சு.. பாக்யராஜை சந்தித்த சசிக்குமார் வைரலாகும் போட்டோஸ்!
- News
பாமகவின் அரசியல்பயணம்: 1991 - 2021 கடந்து வந்த பாதையும் முடிந்து போன அன்புமணியின் முதல்வர் கனவும்
- Automobiles
பெங்களூரில் முதல் லே மைசன் ஷோரூமை திறந்தது சிட்ரோன்!! சி5 எஸ்யூவி காருக்கான முன்பதிவு துவங்கும் தேதி அறிவிப்பு
- Finance
இன்போசிஸ்-க்கும் தோனிக்கும் இப்படி ஒரு கனெக்ஷன் இருக்கா..?!
- Sports
ரசிகர் எனக்கூறி கொள்ளாதீர்கள்... பின்ச் மனைவியை வம்பிழுக்கும் ரசிகர்கள்... காட்டமாக வந்த பதிலடி
- Education
12-வது தேர்ச்சியா? ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பேபி பொட்டேடோ மஞ்சூரியன்
மாலை வேளையில் உங்களுக்கு சூடாகவும், சற்று வாய்க்கு ருசியாகவும் ஸ்நாக்ஸ் ஏதாவது செய்து சாப்பிட நினைத்தால், அதற்கு பேபி பொட்டேடோ மஞ்சூரியன் சரியான தேர்வாக இருக்கும். குறிப்பாக பேபி பொட்டேடோ மஞ்சூரியன் குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியதாக இருக்கும்.
உங்களுக்கு வீட்டிலேயே பேபி பொட்டேடோ மஞ்சூரியன் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியானால் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதன் செய்முறையைப் படித்து முயற்சித்துப் பாருங்கள். பின் எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பேபி பொட்டேடோ - 14
* சோள மாவு - 3 டேபிள் ஸ்பூன்
* மைதா - 2 டேபிள் ஸ்பூன்
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
* பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
மஞ்சூரியனுக்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேட் - 1 டேபிள் ஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 1/4 கப் (நறுக்கியது)
* குடைமிளகாய் - 1/2 கப் (நறுக்கியது)
* சோயா சாஸ் - 1/4 டீஸ்பூன்
* சில்லி சாஸ் - 1/2 டீஸ்பூன்
* தக்காளி சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்
* வினிகர் - 1/2 டீஸ்பூன்
* ஸ்பிரிங் ஆனியன் வெள்ளைப் பகுதி - 1 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
* ஸ்பிரிங் ஆனியன் பச்சை பகுதி - 1 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* சோள மாவு - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் பேபி பொட்டேடோவைப் போட்டு நீரை ஊற்றி, குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். விசில் போனதும் குக்கரை திறந்து, உருளைக்கிழங்கின் தோலை உரித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு சிறிய பௌலில் சோள மாவு மற்றும் நீர் ஊற்றி, சற்று நீர் போன்று கலந்து கொள்ள வேண்டும்.
* மற்றொரு பௌலில் சோள மாவு, மைதா, மிளகுத் தூள், இஞ்சி பேஸ்ட், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து, நீரை ஊற்றி, மிகவும் கெட்டியாக இல்லாமல் ஓரளவு நீர் போன்று கலந்து கொள்ள வேண்டும்.
* பின் வேக வைத்துள்ள உருளைக்கிழங்குகளை இரண்டாக வெட்டி, மாவில் போட்டு பிரட்டிக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, அதில் பிரட்டி வைத்துள்ள உருளைக்கிழங்கை போட்டு மொறுமொறுப்பாக பொரித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், இஞ்சி பூண்டு பேஸ்ட், ஸ்பிரிங் ஆனியனின் வெள்ளைப் பகுதியை போட்டு நன்கு வதக்கவும். பின் வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கவும்.
* அடுத்து அதில் குடைமிளகாயை சேர்த்து நன்கு வதக்கவும். பின் சோயா சாஸ், சில்லி சாஸ், தக்காளி சாஸ், உப்பு, மிளகுத் தூள் மற்றும் சிறிது சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி விடவும்.
* பின்பு அதில் நீரில் கரைத்து வைத்துள்ள சோள மாவை சேர்த்து ஒரு நிமிடம் நன்கு கொதிக்க விட்டு, பின் வினிகரை சேர்த்து 2 நிமிடம் கிளறவும்.
* பிறகு பொரித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு கிளறி விடவும். பின் அதன் மேல் ஸ்பிரிங் ஆனியனின் பச்சைப் பகுதியை சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான பேபி பொட்டேடோ மஞ்சூரியன் தயார்.
Image Courtesy: sharmispassions