Latest Updates
-
பிச்சிக்குது விற்பனை.. ரூ.10,499 க்கு 5ஜி போன்.. 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. 15W சார்ஜிங்.. எந்த மாடல்? | Vivo T4 Lite 5G 15 Percent Discount -
முட்டையை இந்த மாதிரி பொரியல் செஞ்சு பாருங்க... டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்... ஆரோக்கியமாவும் இருக்கும்...! -
புது ATM ரூல்ஸ்.. ஏப்.1 முதல் அமல்.. 100 ரூபாயோ.. 1000 ரூபாயோ.. இதுதான் புது லிமிட்.. 3 முக்கிய மாற்றங்கள்! | New ATM Transactions Rules From April 1 -
மூன்றாம் உலகப்போர் வந்தாலும் இந்த நாடுகளில் மக்கள் பாதுகாப்பாக இருப்பார்களாம்... எந்தெந்த நாடுகள் தெரியுமா? -
Surprise Plunge in Gold & Silver Prices amid Iran War Tensions: Chennai Rates Drop further -
100 ஆண்டுக்கு பின் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகத்தை தரப்போகிறதாம்...! -
கலகத்தை உருவாக்குவதற்காகவே பிறந்த 4 ராசிக்காரங்க இவங்கதான்...ரொம்ப ஆபத்தானவங்க இவங்க...உங்க ராசி இதுல இருக்கா? -
3 கத்திரிக்காய் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு செம சூப்பரா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம்...! -
யமனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையே அடியோடு மாறப்போகுது..
அவலும், வேர்க்கடலையும் இருந்தா.. ஈவ்னிங் இந்த ருசியான ஸ்நாக்ஸ் செஞ்சு குடுங்க.. சத்தானதும் கூட...
Aval Peanut Laddu Recipe In Tamil: மாலை வேளையில் உங்கள் பிள்ளைகள் பசியுடன் இருக்கும் போது, அவர்களின் பசியை போக்க வேண்டுமா? அதுவும் சத்தான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் அவலும், வேர்க்கடலையும் உள்ளதா?
அப்படியானால், அவற்றைக் கொண்டு வாய்க்கு ருசியான ஸ்நாக்ஸ் செய்து கொடுங்கள். அதுவும் அவல் வேர்க்கடலை லட்டு செய்து கொடுக்கும் போது, அது சுவையானது மட்டுமின்றி, சத்தானதும் கூட. ஒருமுறை இந்த லட்டு செய்து கொடுத்தால், பின் அடிக்கடி செய்ய சொல்லிக் கேட்பார்கள். அந்த அளவில் இந்த லட்டு சுவையானது.

உங்களுக்கு அவல் வேர்க்கடலை லட்டுவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அவல் வேர்க்கடலை லட்டு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* அவல் - 1 கப்
* பாசிப்பருப்பு - 1/2 கப்
* வறுத்த வேர்க்கடலை - 1 கப்
* நெய் - 1 டீஸ்பூன் + 1 டீஸ்பூன்
* முந்திரி - 10
* வெல்லம் - 1 கப்
* தண்ணீர் - 1 கப்
* ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 கப் அவலை
சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுத்து இறக்கி ஒரு தட்டில் போட்டு
குளிர வைக்க வேண்டும்.
* பின் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அத்துடன் பாசிப்பருப்பை
சேர்த்து, நல்ல மணம் வரும் வரை வறுத்து இறக்கி மற்றொரு தட்டில் போட்டு
குளிர வைக்க வேண்டும்.
* பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பச்சை வேர்க்கடலையாக
இருந்தால் அதை சேர்த்து நல்ல மணம் வந்து, நிறம் மாறும் வரை வறுத்து
இறக்கி ஒரு தட்டில் போட்டு குளிர வைக்க வேண்டும். பின் அதன் தோலை
நீக்கிவிட வேண்டும்.
* அடுத்து மிக்சர் ஜாரில் வறுத்த அவலை சேர்த்து நன்கு மென்மையாக
அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதில் வறுத்து தோல் நீக்கி வைத்துள்ள வேர்க்கடலையை சேர்த்து,
சற்று கொரகொரவென்று அரைத்து, ஒரு தட்டில் போட்டுக் கொள்ள
வேண்டும்.
* பிறகு அதே ஜாரில் வறுத்த பாசிப்பருப்பை சேர்த்து நன்கு மென்மையாக
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், முந்திரியை
சேர்த்து நன்கு வறுத்து, ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு அதே வாணலியில் 1 கப் வெல்லத்தை சேர்த்து, 1 கப் நீரை ஊற்றி,
வெல்லத்தை கரைய வைக்க வேண்டும்.
* வெல்லம் கரைந்ததும், அதில் ஏலக்காய் பொடியை சேர்த்து கிளறி ஒரு
பாத்திரத்தில் வடிகட்டி எடுத்து கொள்ள வேண்டும்.
* அடுத்து அதை அடுப்பில் வைத்து, அத்துடன் பொடித்து வைத்துள்ள
பாசிப்பருப்பை சேர்த்து கட்டிகளின்றி கிளறி, 5 நிமிடம் வேக வைக்க
வேண்டும்.
* பின் அதில் பொடித்து வைத்துள்ள அவல் மற்றும் வேர்க்கடலையை சேர்த்து
நீர் வற்றி கெட்டியாகும் வரை கிளறி விட வேண்டும். பின் அதில் 1
டீஸ்பூன் நெய் ஊற்றி கிளறி இறக்கி, மூடி வைத்து குளிர வைக்க
வேண்டும்.
* கலவையானது நன்கு குளிர்ந்த பின், அந்த கலவையை உருண்டைகளாக பிடித்து,
அவற்றின் நடுவே வறுத்த முந்திரியை வைத்தால், சுவையான அவல் வேர்க்கடலை
லட்டு தயார்.



Click it and Unblock the Notifications











