Latest Updates
-
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா?
பச்சரிசியை வைச்சு இந்த மாதிரி உப்புமா செஞ்சு பாருங்க... உப்புமா பிடிக்காதவங்க கூட 2 தட்டு சாப்பிடுவாங்க...!
Arisi Upma Recipe In Tamil: பெரும்பாலான வீடுகளில் காலை உணவாக இருப்பது இட்லி, தோசைதான், ஆனால் தினமும் இவற்றை சாப்பிடுவது நிச்சயம் போரடிக்கும், சில சமயங்களில் தோசை மாவு இல்லாத சூழ்நிலையும் ஏற்படும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் குடும்பத் தலைவிகளுக்கு கைகொடுப்பது உப்புமாதான். ஆனால் பெரிய கஷ்டம் என்னவென்றால் பெரும்பாலான நபர்களுக்கு உப்புமா பிடிக்காது.
உப்புமா என்றாலே தலைதெறிக்க ஓடுபவர்கள்தான் அதிகம். உங்கள் வீட்டிலும் உப்புமாவை வெறுப்பவர்கள் இருக்கிறார்களா? அப்படியானால் அடுத்தமுறை உப்புமாவை ரவையை வைத்தோ அல்லது சேமியாவை வைத்தோ செய்யாமல் இந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள பக்குவத்தில் பச்சரிசி மற்றும் துவரம் பருப்பை வைத்து அரிசி உப்புமா செய்யுங்கள். இப்படி உப்புமா செய்யும் போது, உப்புமா பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள். இந்த பதிவில் சூப்பரான அரிசி உப்புமாவை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

தேவையானப் பொருட்கள் :
- பச்சரிசி - 1 கப்
- துவரம் பருப்பு - 1/4 கப்
- மிளகு - 2 டீஸ்பூன்
- சீரகம் - 1 டீஸ்பூன்
- தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
- தண்ணீர் - தேவையான அளவு
- உப்பு - தேவையான அளவு
- நெய் - 1 டீஸ்பூன்
தாளிக்க :
- எண்ணெய் - 1 ஸ்பூன்
- கடுகு - 1/4 ஸ்பூன்
- காய்ந்த மிளகாய் - 3
- உளுத்தம் பருப்பு - 1/2 ஸ்பூன்
- கடலைப் பருப்பு - 1/2 ஸ்பூன்
- பெருங்காயம் - ஒரு சிட்டிகை
- கறிவேப்பிலை - ஒரு கொத்து
செய்முறை:
- முதலில் பச்சரிசி, துவரம் பருப்பை மிக்ஸியில் ரவை போல் உடைத்துக் கொள்ளவும்.
- அதேபோல மிளகை மிக்ஸியில் ஒன்றிரண்டாகப் பொடித்துக் கொள்ளவும்.
- வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, கடுகு, காய்ந்த மிளகாய், உளுந்தம் பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம், உடைத்த மிளகு, பெருங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து தாளிக்கவும்.
- தாளித்த பின் அதில் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும்.
- தண்ணீர் கொதிக்கும்போது தீயை மிதமாக வைத்து, அரைத்து வைத்திருக்கும் அரிசி மற்றும் பருப்பைக் கொட்டி கிளறவும்.
- இரண்டும் பாதி வெந்த பிறகு தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி வாணலியை மூடி வைக்கவும்.
- 8 லிருந்து 10 நிமிடங்கள் குறைந்த தீயில் வைத்திருந்து அவ்வப்போது கிளறிவிடவும்.
- அடுப்பை அணைத்ததும், ஒரு ஸ்பூன் நெய்யை ஊற்றி கலந்து இறக்கி பரிமாறவும்.
- சூடான,சுவையான சத்தான அரிசி உப்புமா ரெடி.
- இந்த அட்டகாசமான அரிசி உப்புமாவிற்குக் தேங்காய் சட்னி சரியான காம்பினேஷனாக இருக்கும்.



Click it and Unblock the Notifications
