Latest Updates
-
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும்
Assamese Chicken Curry Recipe in Tamil: பெரும்பாலான மக்களுக்கு ஞாயிற்றுக் கிழமை வருவதே நான் வெஜ் உணவை விரும்பி சாப்பிடத்தான். தற்போது புரட்டாசி மாதம் வந்துவிட்டதால் சிலர் அசைவ உணவுகள் சாப்பிடுவதை தவிர்ப்பார்கள். ஆனாலும் அசைவம் சாப்பிடாமல் பலரால் இருக்க முடியாது. அப்படிப்பட்டவர்களுக்குத்தான் இந்த வித்தியாசமான சிக்கன் ரெசிபி.

வழக்கமாக சிக்கன் வாங்கினால் அதை கபாப், கிரேவி போன்றவற்றைத்தான் செய்வார்கள். மிஞ்சிப்போனால் ஆந்திரா அல்லது கேரளா ரெசிபிக்களை முயற்சித்திருப்போம். எப்போதாவது வடகிழக்கு இந்திய ரெசிபிக்களை முயற்சித்துப் பாரித்திருக்கிறார்களா? இல்லையென்றால் இந்த அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன ரெசிபியை முயற்சி செய்து பாருங்கள். இந்த அஸ்ஸாம் சிக்கன் மிகவும் வித்தியாசமானதாகவும், சுவையானதாகவும் இருக்கும்.
உங்களுக்கு இந்த அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் கறியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் கறியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- அரை கிலோ சிக்கன்
- 2 உருளைக்கிழங்குக
- 2 ஸ்பூன் இஞ்சி-பூண்டு
- 3 நறுக்கிய வெங்காயம்
- 4 ஸ்பூன் எண்ணெய்
- ஒரு சிட்டிகை சர்க்கரை
- தேவையான அளவு உப்பு
- 5 வர மிளகாய்
- 3 கீறிய பச்சை மிளகாய்
- 1 ஸ்பூன் மஞ்சள் தூள்
- 2 ஸ்பூன் மிளகாய் தூள்
- 4 ஸ்பூன் தயிர்
- 1 ஸ்பூன் கரம் மசாலா
- 1 ஸ்பூன் சிக்கன் மசாலா
- அலங்கரிக்க 1 ஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லி
செய்முறை:
- சிக்கனை முதலில் நன்றாக கழுவி வைக்கவும்.
- ஒரு பாத்திரத்தில் கழுவிய சிக்கனுடன் மஞ்சள் தூள், சிக்கன் மசாலா மற்றும் மிளகாய் தூள் ஆகியவற்றைச் சேர்த்துப் பிரட்டி 20 நிமிடங்கள் வரை ஊறவைக்கவும்.
- ஒரு வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெயைச் சூடாக்கி, அதில் ஒரு சிட்டிகை சர்க்கரை, வர மிளகாய் மற்றும் நறுக்கிய வெங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து, அவை பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- பின்னர் இதை அடுப்பிலிருந்து இறக்கி சிறிது நேரம் ஆறவிடவும். பிறகு, அதனுடன் தயிர் சேர்த்து கெட்டியான விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
- பின்னர் அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெயைச் சேர்த்து, நறுக்கிய உருளைக்கிழங்குத் துண்டுகளை வறுத்து எடுக்கவும்.
- பின்னர் அதே எண்ணெயில் பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு மற்றும் கீறிய பச்சை மிளகாய் ஆகியவற்றையும் வதக்கி தனியாக எடுத்து வைக்கவும்.
- அதன்பின் அதே எண்ணெயில், ஊற வைத்துள்ள சிக்கனைச் சேர்த்து, அது பொன்னிறமாகும் வரை அதிகத் தீயில் வதக்கவும்.
- பிறகு உப்பு சேர்த்து, சிக்கனிலிருந்து எண்ணெய் பிரியும் வரை சமைக்கவும்.
- சிக்கன் பாதி வெந்ததும், வறுத்த உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம்-தயிர் விழுதைச் சேர்த்து நன்றாகக் கலந்து, 15 நிமிடங்கள் வதக்கவும்.
- கெட்டியான கிரேவி வேண்டுமென்றால் ஒரு கப் தண்ணீர் மட்டும் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும்.
- பின்னர் வறுத்து வைத்துள்ள இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் கரம் மசாலாத் தூள் ஆகியவற்றைச் சேர்க்கவும்.
- இறுதியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளைத் தூவி அலங்கரித்து அடுப்பை அணைக்கவும்.



Click it and Unblock the Notifications
