கசப்பே இல்லாத பாவக்காய் உள்ளி காரம் - எப்படி செய்றது-ன்னு பாத்து செய்யுங்க.. விரும்பி சாப்பிடுவாங்க..

Posted By:

Andhra Style Paavakai Ulli Kaaram Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோர் பாகற்காய் என்றாலோ தலைதெறித்து ஓடுகிறார்களா? அப்படிப்பட்டவர்களை பாகற்காய் சாப்பிட வைக்க வேண்டுமா? முக்கியமாக பாகற்காயை சமைத்தால் கசப்பு எதுவும் தெரியக்கூடாதா? அப்படியானால் ஆந்திரா ஸ்டைல் பாவக்காய் உள்ளி காரம் செய்யுங்கள்.

இது சாம்பார் சாதம், தயிர் சாதம் என அனைத்துடனும் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். ஒருமுறை இப்படி பாவக்காய் உள்ளி காரம் செய்து கொடுத்தால், பாவக்காய் விரும்பி சாப்பிடாதவர்கள் கூட கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள்.

Andhra Style Paavakai Ulli Kaaram How To Make a Paavakai Ulli Kaaram

உங்களுக்கு ஆந்திரா ஸ்டைல் பாவக்காய் உள்ளி காரத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆந்திரா ஸ்டைல் பாவக்காய் உள்ளி காரம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிரந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* பாவக்காய் 3
* வெங்காயம் - 4 (பொடியாக நறுக்கியது)
* கடலைப் பருப்பு - 1 ஸ்பூன்
* கருப்பு உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்
* மல்லி - 2 ஸ்பூன்
* வரமிளகாய் - 7
* சீரகம் - 1 ஸ்பூன்
* புளி - 1 நெல்லிக்காய் அளவு
* துருவிய தேங்காய் - 1/4 கப்
* பூண்டு - 5 பல்
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - 2 ஸ்பூன் + 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

* முதலில் பாவக்காயை சற்று பெரிய பெரிய துண்டுகளாக வெட்டி, நடுவில் உள்ள விதைகளை நீக்கிவிட வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடலைப் பருப்பு, கருப்பு உளுத்தம் பருப்பு, மல்லி, வரமிளகாய், சீரகம் ஆகியவற்றை சேர்த்து நன்கு வறுக்க வேண்டும்.
* பிறகு அதில் புளி, துருவிய தேங்காய், பூண்டு பற்களை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பொருட்கள் அனைத்தும் நன்கு வதங்கியதும், அதை இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் பாவக்காயை எடுத்து, அதனுள் மசாலாவை வைத்து நிரப்பி, தனியாக 5 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் பாகற்காயை சேர்த்து, ஜாரில் சிறிது நீரை ஊற்றி அலசி சேர்த்து, உடனே கிளறி விடாமல், சிறிது நேரம் மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.
* பின் மூடியைத் திறந்து, பாகற்காயை கிளறி விட்டு, பின் மீண்டும் மூடி வைத்து சிறிது நேரம் வேக வைக்க வேண்டும்.
* பிறகு மூடியைத் திறந்து நன்கு கிளறி, பொன்னிறமாகும் வரை நன்கு வேக வைத்து இறக்கினால், ஆந்திரா ஸ்டைல் பாவக்காய் உள்ளி காரம் தயார்.

[ of 5 - Users]
Story first published: Saturday, January 3, 2026, 15:56 [IST]
Desktop Bottom Promotion