Latest Updates
-
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது...
ஆந்திரா ஸ்டைல் க்ரீன் சில்லி சிக்கன் ரெசிபி
இந்த வார விடுமுறையில் நீங்கள் ஒரு வித்தியாசமான சிக்கன் ரெசிபியை செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் ஆந்திரா ஸ்டைல் க்ரீன் சில்லி சிக்கன் செய்யுங்கள். இது சற்று காரமாக இருந்தாலும், மிகவும் சுவையாக இருக்கும்.
இந்த வார விடுமுறையில் நீங்கள் ஒரு வித்தியாசமான சிக்கன் ரெசிபியை செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் ஆந்திரா ஸ்டைல் க்ரீன் சில்லி சிக்கன் செய்யுங்கள். இது சற்று காரமாக இருந்தாலும், மிகவும் சுவையாக இருக்கும். இந்த க்ரீன் சில்லி சிக்கனை ரசம் சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும்.

உங்களுக்கு ஆந்திரா ஸ்டைல் க்ரீன் சில்லி சிக்கன் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே க்ரீன் சில்லி சிக்கன் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
MOST READ: கர்நாடகா ஸ்டைல் சிக்கன் கிரேவி
தேவையான பொருட்கள்:
ஊற வைப்பதற்கு...
* சிக்கன் - 250 கிராம்
* தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
* இஞ்சி விழுது - 1 டேபிள் ஸ்பூன்
* பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
* பச்சை மிளகாய் விழுது - 1 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
பச்சை மசாலாவிற்கு...
* கொத்தமல்லி - 1/2 கப்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
தாளிப்பதற்கு...
* நெய் - 1 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 3
* கறிவேப்பிலை - சிறிது
* சோயா சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் சிக்கனை நன்கு நீரில் கழுவி, நீரை முற்றிலும் வடிகட்டிவிட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அந்த சிக்கனில் தயிர், இஞ்சி, பூண்டு விழுது, பச்சை மிளகாய் விழுது, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு பிரட்டி, ஃப்ரிட்ஜில் வைத்து குறைந்தது 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* அதே சமயம் மிக்சர் ஜாரில் கொத்தமல்லி இலைகள் மற்றும் கறிவேப்பிலையைப் போட்டு, சிறிது சீரகத்தையும் போட்டு நீர் தெளித்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், கறிவேப்பிலை, வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் சோயா சாஸ் மற்றும் அரைத்த பச்சை மசாலாவை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். வேண்டுமானால் சிறிது உப்பு தூவி, சிக்கனை நன்கு வேக வைக்கவும். சிக்கன் நன்கு வெந்ததும், அதில் சிறிது கொத்தமல்லியைத் தூவி கிளறினால், சுவையான ஆந்திரா ஸ்டைல் க்ரீன் சில்லி சிக்கன் ரெசிபி தயார்.
Image Courtesy: archanaskitchen



Click it and Unblock the Notifications











