Latest Updates
-
'சீனாவின் நோஸ்ட்ரடாமஸ்' கணிப்பின் படி அமெரிக்க-ஈரான் போரில் ஜெயிக்கப் போவது யார்? போர் இப்படித்தான் முடியுமாம் -
கவலையற்ற ஆன்மாவாக எப்போதும் மகிழ்ச்சியாக வாழ பிறந்த 4 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
4 முட்டை இருந்தா இந்த முகலாய முட்டை குருமாவை செஞ்சு பாருங்க... பைவ் ஸ்டார் ஹோட்டலில் சாப்பிட மாதிரி இருக்கும்! -
சனிப்பெயர்ச்சி 2026: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், எந்த ராசிக்கு ஆபத்தாகவும் இருக்கப்போகுது தெரியுமா? -
4 வெங்காயம் இருந்தா.. இட்லிக்கு இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப மோசமான நாளாக இருக்குமாம்...! -
கேதுவின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்... உங்க ராசி என்ன? -
ஹோட்டல் ஸ்டைல் ராயல் தேங்காய் சட்னி ரெசிபி... இந்த பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க... செமையா இருக்கும்...! -
புடலங்காய் வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க...எல்லாத்துக்கும் செம சைடிஷா இருக்கும்! -
ஆரோக்கியமான விந்தணுவின் அறிகுறிகள்... உங்ககிட்ட இந்த அறிகுறிகள் இருக்கா? செக் பண்ணிக்கோங்க...!
சிக்கனை ஒருமுறை இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் 65 செய்யுங்க... காரசாரமா நச்சுனு இருக்கும்...!
Andhra Special Chicken 65 Recipe in Tamil: அசைவம் என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது சிக்கன்தான். உங்கள் வீட்டில் அடிக்கடி சிக்கன் எடுப்பீர்களா? சிக்கன் 65 என்பது பெரும்பாலான நபர்களுக்கு பிடித்த சிக்கன் ஐட்டமாகும். எப்போதும் ஒரே சுவையில் சிக்கன் 65 செய்யாமல், ஒருமுறை ஆந்திரா ஸ்டைல் சிக்கன் 65-யை முயற்சி செய்து பாருங்கள். இந்த சிக்கன் 65 நாம் வழக்கமாக எண்ணெயில் பொரித்து சாப்பிடுவது போன்று இல்லாமல், சற்று வறுவல் போன்று இருக்கும்.
இந்த சிக்கன் 65 சாதம், பிரியாணி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். மழைக்காலத்தில் சிக்கனை நன்கு காரசாரமாக சமைத்து சாப்பிட நினைத்தால், இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைல் சிக்கன் 65 செய்து சாப்பிடலாம். இப்படி செய்யும் போது சுவை இன்னும் பிரமாதமாக இருக்கும் மற்றும் காரசாரமாக இருப்பதால் சளி பிடித்திருந்தால், அதிலிருந்து கொஞ்சம் நிவாரணமும் கிடைக்கும்.

உங்களுக்கு ஆந்திரா ஸ்டைல் சிக்கன் 65 எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆந்திரா ஸ்டைல் சிக்கன் 65 ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருள்கள்:
- எலும்பில்லாத சிக்கன் - ½ கிலோ
- தயிர் - 3 டேபிள் ஸ்பூன்
- முட்டை - 1
- இஞ்சி-பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
- கார்ன் ஃபிளவர் மாவு - 2 டேபிள் ஸ்பூன்
- மிளகாய்த் தூள் - 1½ டீ ஸ்பூன்
- மிளகுத் தூள் - ½ டீ ஸ்பூன்
- சீரகத் தூள் - ½ டீ ஸ்பூன்
- கரம் மசாலா - 1 டீ ஸ்பூன்
- கேசரி பவுடர் - சிறிதளவு (சிவப்பு நிறத்திற்காக)
- எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
- பச்சை மிளகாய் - 3
- கருவேப்பிலை - ஒரு கொத்து
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
- கொத்தமல்லி இலை - சிறிதளவு
செய்முறை:
- சிக்கன் துண்டுகளை ஒரு பாத்திரத்தில் சேர்த்து இரண்டு முறை
சுத்தமாக தண்ணீர் விட்டு அலசிக் கொள்ளவும்.
- கடைசியாக அலசும் பொழுது அதனுடன் சிறிதளவு மஞ்சள் தூள் மற்றும் உப்பு
சேர்த்து நன்றாக கழுவி எடுத்து வைக்கவும்.
- முட்டையை உடைத்து அதன் வெள்ளைக்கருவை தனியே பிரித்து நன்றாக அடித்து
எடுத்துக் கொள்ளவும்.
- அதனுடன் கேசரி பவுடர், இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், சோள
மாவு, எலுமிச்சை சாறு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு
கலந்து கொள்ளவும்.
- பின் பின் அதனுடன் கழுவி வைத்த சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்றாக
பிரட்டிக் கொள்ளவும்.
- இதை குறைந்தது ஒரு மணி நேரமாவது மேரினேட் செய்யவும்.
- வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெயை சேர்க்கவும்.
- சூடானதும் ஊற வைத்த சிக்கன் துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக பொரித்து
எண்ணையை வடிய விடவும்.
- ஒரு பாத்திரத்தில் சீரகத் தூள், கரம் மசாலா, கேசரி பவுடர், தயிர்
மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- பச்சை மிளகாய் நீளவாக்கில் இரண்டாக கீறி எடுத்து வைக்கவும்.
- மீண்டும் வாணலியை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய
விடவும்.
- பின் அதில் நறுக்கி வைத்த பச்சை மிளகாய் மற்றும் கருவேப்பிலை
சேர்த்து நன்கு வதக்கவும்.
- அதனுடன் கரைத்து வைத்த தயிர் கலவையை சேர்த்து கிளறவும்.
- கடைசியாக பொரித்து வைத்த சிக்கன் துண்டுகளை அதனுடன் சேர்த்து நன்றாக
கிளறி வேக விடவும்.
- சிக்கன் துண்டுகள் வெந்து மசாலா கெட்டி ஆனதும் கொத்தமல்லி இலை
மற்றும் மிளகுத்தூள் தூவி எடுத்தால் சுவையான ஆந்திரா சிக்கன் 65
ரெடி!



Click it and Unblock the Notifications











