Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
அட்டகாசமான ஆந்திரா கத்திரிக்காய் தக்காளி சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும்
Andhra Kathirikai Thakkali Chutney Recipe in Tamil: இன்று இரவு அல்லது காலை உங்கள் வீட்டில் இட்லி அல்லது தோசை செய்யப் போகிறீர்களா? அந்த இட்லிக்கு வழக்கமாக செய்வது போன்று தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, கார சட்னி என்று செய்து போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான, அதே சமயம் ருசியான ஒரு சட்னியை செய்ய நினைக்கிறீர்களா?

உங்கள் வீட்டில் கத்திரிக்காயும், தக்காளியும் உள்ளதா? அப்படியானால் அவற்றை வைத்து அட்டகாசமான சுவையில் ஆந்திரா ஸ்டைல் கத்திரிக்காய் சட்னியை செய்யுங்கள். இந்த சட்னி இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். அதுவும் இந்த சட்னியை செய்தால் வீட்டில் உள்ளோர் வழக்கமாக சாப்பிடுவதை விட எல்லோரும் 2 இட்லி அதிகமாக சாப்பிடுவார்கள். கத்திரிக்காய் பிடிக்காதவர்கள் கூட இந்த மாதிரி சட்னி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். முக்கியமாக குழந்தைகளுக்கு இந்த சட்னி ரொம்பவும் பிடிக்கும்.
உங்களுக்கு ஆந்திரா ஸ்டைல் கத்திரிக்காய் தக்காளி சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கத்திரிக்காய் தக்காளி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- நீள கத்திரிக்காய் - 10
- தக்காளி - 2
- பச்சை மிளகாய் - 8
- புளி - சிறிதளவு
- உப்பு - தேவையான அளவு
- நறுக்கிய கொத்தமல்லி - ஒரு கைப்பிடி
- எண்ணெய் - 1 ஸ்பூன்
- சீரகம் - 1 ஸ்பூன்
- பூண்டுப் பல் - 5
செய்முறை:
- கத்திரிக்காயை நன்றாக கழுவி வட்ட வடிவில் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும்.
- முதலில் பச்சை மிளகாயை வறுத்துத் தனியே எடுத்து வைக்கவும்.
- பின் அதே எண்ணெயில், கத்திரிக்காய்கள் குழைந்துவிடாமல், மென்மையாகும் வரை வறுத்துத் தனியே எடுத்து வைக்கவும்.
- பின்னர் அதே கடாயில், தக்காளிகள் மென்மையாகும் வரை வறுக்கவும். சிறிது உப்பு சேர்த்து, மூடியால் மூடி வைக்கவும்.
- அடுப்பை அணைப்பதற்கு முன், நறுக்கிய கொத்தமல்லியைச் சேர்த்து, 5 நிமிடங்கள் வதக்கிய பிறகு அடுப்பை அணைக்கவும்.
- வறுத்த பொருட்களை ஆற வைக்கவும்.
- ஒரு மிக்சி ஜாரில், புளி, பச்சை மிளகாய், சீரகம், பூண்டு பற்கள் மற்றும் உப்பு ஆகியவற்றை எடுத்துக்கொள்ளவும்.
- பின்னர் தண்ணீர் சேர்க்காமல் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
- இதனுடன் வதக்கிய தக்காளியைச் சேர்த்து, அவை மென்மையாகும் வரை மீண்டும் அரைக்கவும்.
- பின்னர் வதக்கிய கத்தரிக்காயையும், நறுக்கிய கொத்தமல்லியையும் சேர்த்து அரைக்கவும்.
- மென்மையாக அரைக்கக்கூடாது, இந்த சட்னி கெட்டியாக மற்றும் கொரகொரப்பாக அரைத்தால்தான் நன்றாக இருக்கும்.
- இந்த கலவையை ஒரு பரிமாறும் கிண்ணத்திற்கு மாற்றவும்.
- இந்த சட்னியை அப்படியே சாப்பிடலாம், உங்களுக்கு தேவைப்பட்டால் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, உளுந்து சேர்த்து தாளித்து கிளறவும்.
- இந்த கத்தரிக்காய்-தக்காளி சட்னி இட்லி, தோசைக்கு மட்டுமின்றி சாதத்தில் பிசைந்து சாப்பிடவும் அருமையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications
