Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
ஆம்பூர் ஸ்டைல் மீல்மேக்கர் பிரியாணி - சிம்பிளா எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க..
Ambur Style Mealmaker Biryani Recipe In Tamil: மதியம் சிம்பிளா அதே சமயம் டேஸ்டியான ஒரு சமையல் செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோருக்கு பிரியாணி என்றால் பிடிக்குமா? ஆனால் சனிக்கிழமைகளில் அசைவம் செய்யமாட்டீர்களா? உங்கள் வீட்டில் மீல்மேக்கர் உள்ளதா? அப்படியானால் அந்த மீல் மேக்கரைக் கொண்டு பிரியாணி செய்யுங்கள்.
அதுவும் சாதாரண பிரியாணியை செய்யாமல், மிகவும் பிரபலமான ஆம்பூர் ஸ்டைலில் பிரியாணி செய்யுங்கள். இந்த ஆம்பூர் ஸ்டைல் மீல்மேக்கர் பிரியாணி செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருப்பதோடு, அசைவ பிரியாணியே தோற்றுப் போகும் அளவில் ருசியாக இருக்கும். முக்கியமாக இந்த பிரியாணி பேச்சுலர்கள் செய்யக்கூடிய வகையில் சுலபமாக இருக்கும்.

உங்களுக்கு ஆம்பூர் ஸ்டைல் மீல்மேக்கர் பிரியாணியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆம்பூர் ஸ்டைல் மீல்மேக்கர் பிரியாணி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* காஷ்மீரி வரமிளகாய் - 10
* மீல்மேக்கர் - 1 கப்
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* நெய் - 1 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 1 துண்டு
* கிராம்பு - 3
* ஏலக்காய் - 3
* அன்னாசிப்பூ - 1
* வெங்காயம் - 2 (நறுக்கியது)
* கொத்தமல்லி - 1/2 கைப்பிடி
* புதினா - 1/2 கைப்பிடி
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
* தயிர் - 3 டேபிள் ஸ்பூன்
* தக்காளி - 2 (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* சீரக சம்பா அரிசி - 2 கப்
* தண்ணீர் - 4 கப்
* எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் வரமிளகாயை வெதுவெதுப்பான நீரில் 10 நிமிடம் ஊற வைத்து,
பின் அதை அரைத்து பேஸ்ட் செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு பாத்திரத்தில் சீரக சம்பா அரிசியை நீரில் 2 முறை
கழுவிவிட்டு, பின் அதில் 4 கப் நீரை ஊற்றி, 1/2 மணிநேரம் ஊற வைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின்பு மீல் மேக்கரை கொதிக்கும் நீரில் போட்டு, 5 நிமிடம் ஊற
வைத்து, பின் அதில் உள்ள நீரை வடிகட்டி, பிழிந்துவிட்டு தனியாக
வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், 1 துண்டு
பட்டை, 3 கிராம்பு, 2 ஏலக்காய், 1 அன்னாசிப்பூ சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, நிறம் மாறும் வரை
வதக்க வேண்டும்.
* பின் அதில் கொத்தமல்லி, புதினாவை சேர்த்து வதக்கி, இஞ்சி பூண்டு
பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பிறகு அதில் அரைத்து வைத்துள்ள மிளகாய் பேஸ்ட்டை சேர்த்து வதக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் தயிரை சேர்த்து நன்கு வதக்கி, மீல் மேக்கரை
சேர்த்து 2 நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து
நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் அரிசி ஊற வைத்துள்ள நீரை ஊற்றி, எலுமிச்சை சாற்றினை
சேர்த்து, கொதிக்க வைக்க வேண்டும்.
* கொதி வந்ததும், அதில் ஊற வைத்துள்ள சீரக சம்பா அரிசியை சேர்த்து
கிளறி, குக்கரை மூடி, 2 விசில் விட்டு இறக்கினால், சுவையான ஆம்பூர்
ஸ்டைல் மீல்மேக்கர் பிரியாணி தயார்.



Click it and Unblock the Notifications











