Latest Updates
-
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்..
வீட்டிலேயே சுவையான பாதாம் கீர் செய்வது எப்படி தெரியுமா?
உங்களுக்கு பாதாம் கீர் ரொம்ப பிடிக்குமா? அதை எப்போதும் கடைகளில் தான் வாங்கி சாப்பிட்டிருக்கிறீர்களா? அப்படியானால் இனிமேல் அதை கடைகளில் வாங்கி சாப்பிடாமல், வீட்டிலேயே செய்து சாப்பிடுங்கள்.
உங்களுக்கு பாதாம் கீர் ரொம்ப பிடிக்குமா? அதை எப்போதும் கடைகளில் தான் வாங்கி சாப்பிட்டிருக்கிறீர்களா? அப்படியானால் இனிமேல் அதை கடைகளில் வாங்கி சாப்பிடாமல், வீட்டிலேயே செய்து சாப்பிடுங்கள். ஏனெனில் பாதாம் கீரை வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம். குறிப்பாக வீட்டில் பாதாம் கீரை கடைகளில் என்றால் அளவாக தான் சாப்பிட முடியும். ஆனால் வீட்டில் செய்தால் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். மேலும் பள்ளி முடிந்து வீட்டிற்கு பசியுடன் வரும் குழந்தைகளுக்கு பாதாம் கீர் கொடுத்தால், அவர்களின் பசி அடங்குவதோடு, உடலுக்கு சத்தானதும் கூட.

உங்களுக்கு வீட்டிலேயே சுவையான பாதாம் கீர் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பாதாம் கீர் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பால் - 1 லிட்டர்
* துருவிய பாதாம் - 1/2 கப்
* சர்க்கரை - 1/2 கப்
* குங்குமப்பூ - 1/2 டீஸ்பூன்
* ஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூன்
* ஜாதிக்காய் பொடி - 1 சிட்டிகை
செய்முறை:
* முதலில் பாதாமை சுடுநீரில் 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* ஒரு மணிநேரம் கழித்து, பாதாமின் தோலை நீக்கிவிட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். பால் கொதிக்க ஆரம்பித்ததும், தீயை குறைத்து 2 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* பின் 1/4 கப் பாலை தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பாலானது சற்று குளிர்ந்ததும், மிக்சர் ஜாரில் பாதாம் பருப்பு மற்றும் பாலை ஊற்றி, நன்கு அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் கொதித்துக் கொண்டிருக்கும் பாலில், குங்குமப்பூவை சேர்த்து 5 நிமிடம் மீண்டும் குறைவான தீயில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும்.
* பாலின் நிறம் வெளிரிய மஞ்சள் நிறத்தில் மாறியதும், அதில் சர்க்கரை மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து கிளற வேண்டும்.
* பாலானது சற்று கெட்டியானதும், அதில் அரைத்து வைத்துள்ள பாதாம் பேஸ்ட்டை சேர்த்து நன்கு கட்டிகளின்றி கிளறி விட்டு 2 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். (பாதாம் பேஸ்ட் சேர்ந்ததும் 2 நிமிடத்திற்கு மேல் பாலை கொதிக்க வைக்க வேண்டாம்.)
* பின் அதில் ஜாதிக்காய் பொடி சேர்த்து கிளறி இறக்கி, குறைந்தது 1 மணிநேரம் குளிர வைத்து பரிமாறினால், பாதாம் கீர் தயார்.
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications








