Latest Updates
-
இன்றைய ராசிபலன் 21 மார்ச் 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
குரு-சந்திரன் உருவாக்கும் கஜகேசரி ராஜயோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு சகல நன்மைகளும் தேடிவரப்போகுது...! -
தமிழ்நாட்டின் ஸ்டார் அரசியல்வாதிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிட போகிறார்கள் தெரியுமா? -
தேர்தல் பிரச்சாரங்களின் போது ஏன் இளநீர் அரசியல் தலைவர்களின் விருப்பமான பானமாக உள்ளது தெரியுமா? -
கோடை வெயிலால் முகம் டல்லா, கருப்பா இருக்கா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
பாய் வீட்டு சிக்கன் பிரியாணி ரெசிபி... இந்த ரம்ஜானுக்கு இப்படி பிரியாணி செஞ்சு பாருங்க... தாறுமாறா இருக்கும்! -
வெண்டைக்காய் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி மொறுமொறுன்னு சிப்ஸ் செஞ்சு சாப்பிடுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க புரியாத புதிராக இருப்பார்களாம்... இவங்கள யாராலும் புரிஞ்சிக்க முடியாதாம்...! -
மீன ராசியில் அரிய சனி-செவ்வாய் சேர்க்கை: ஏப்ரலில் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. -
4 முட்டையும், ஒரு உருளைக்கிழங்கும் இருந்தா இப்படி முட்டை அவியலை செய்யுங்க...டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்...!
உங்க குழந்தைங்க பாதாம் சாப்பிடமாட்றாங்களா? அப்ப இப்படி சட்னி செஞ்சு குடுங்க.. விரும்பி சாப்பிடுவாங்க..
Almond Chutney Recipe: உங்க குழந்தைகளுக்கு சத்தான உணவுகளை கொடுக்க நினைக்கிறீர்களா? உங்கள் குழந்தைகள் பாதாம், பிஸ்தா, முந்திரி போன்றவற்றை சாப்பிடமாட்டார்களா? அவர்களை இந்த நட்ஸ்களை சாப்பிட வைக்க வேண்டுமா? அப்படியானால் பாதாம் கொண்டு சட்னி செய்யுங்கள்.
இந்த பாதாம் சட்னி இட்லி, தோசையுடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும். மேலும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு பாதாம் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பாதாம் சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது . அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பாதாம் - 1/2 கப்
* பூண்டு - 1 பல்
* இஞ்சி - 1/4 இன்ச்
* பச்சை மிளகாய் - 2
* கறிவேப்பிலை - சிறிது
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் பாதாமை வெதுவெதுப்பான நீரில் 15-30 நிமிடம் ஊற வைக்க
வேண்டும்.
* பின் நன்கு ஊறிய பாதாமை மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் இஞ்சி,
பூண்டு, பச்சை மிளகாய், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, நன்கு மென்மையாக
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் போட்டுக் கொள்ள
வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து
சட்னியில் ஊற்றி நன்கு கிளறி விட வேண்டும்.
* இப்போது சுவையான பாதாம் சட்னி தயார்.
Image Courtesy: naliniscooking



Click it and Unblock the Notifications











