For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கர்ப்பிணி பெண்கள் குளிர்காலத்தில் தங்களை பாதுகாத்துக் கொள்ள பின்பற்ற வேண்டியவைகள்…!

குளிர்காலத்தில் கர்ப்பிணி பெண்கள் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை உட்கொள்வதன் மூலம் அவர்களையும், அவர்களது குழந்தையையும் ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும்.

|

கர்ப்ப காலம் என்பதே பெண்களுக்கு மிகவும் சவால் நிறைந்த காலம். அதிலும், குளிர்காலம் என்றால் இன்னும் அதிக சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். பொதுவாகவே குளிர்காலத்தில் எல்லோருக்குமே சளி, காய்ச்சல், இருமல் என பல்வேறு பிரச்சனைகள் வரக்கூடும். கர்ப்பிணி பெண்கள் உடலளவில் மிகவும் பலவீனமாக உணரக்கூடிய நேரம் என்பதால் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டியது அவசியம். குறிப்பாக, கர்ப்ப காலத்தில் வலிகள் அதிகரிக்கக்கூடும். மேலும் மோசமான விஷயம் என்னவென்றால், இந்த காலகட்டத்தில் நீங்கள் மருந்துகளை எடுக்க முடியாது. எனவே, நோய்த்தொற்றுகள் ஏற்படாமல் தவிர்க்க வேண்டுமெனில் நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த உணவுகளை தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும்.

Winter Care Tips For Pregnant Women: What’s Good And What’s Bad For You

குளிர்காலத்தில் கர்ப்பிணி பெண்கள் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை உட்கொள்வதன் மூலம் அவர்களையும், அவர்களது குழந்தையையும் ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும். மேலும், குளிர்ந்த காற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள சரியான ஆடை வகைகளை தேர்ந்தெடுத்து அணிவது மற்றும் சரும வறட்சியைத் தடுக்க அடிக்கடி நீர் அருந்துவது ஆகியவை அடங்கும்.

MOST READ: கர்ப்ப காலத்தில் சிரசாசனம் செய்யும் போட்டோவை இன்ஸ்டாவில் போட்டு அசர வைத்த அனுஷ்கா... கர்ப்பிணிகள் இதை செய்யலாமா?

குளிர்கால மாதங்களில் கர்ப்பிணிப் பெண்கள் தங்களையும், தங்களது வயிற்றில் வளரும் குழந்தையையும் கவனித்துக் கொள்ள சில நிபுணர் பரிந்துரைத்த குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கிரீம்கள் மற்றும் லோஷன்களை அடிக்கடி தடவவும்

கிரீம்கள் மற்றும் லோஷன்களை அடிக்கடி தடவவும்

குளிர்காலங்களில் வீசக்கூடிய வறண்ட குளிர்கால காற்று உங்களது சருமத்திலுள்ள இயற்கையான ஈரப்பதம் மற்றும் எண்ணெய் பசைகளை நீக்கிவிடும். மேலும், உங்கள் வயிறு பெரிதாகும் போது, தோல் விரிவடையும். வறட்சியான சருமமானது விரிவடையும் போது வலிமிகுந்ததாக இருக்கும். எனவே, உங்கள் சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்க கிரீம்கள், லோஷன்கள் மற்றும் எண்ணெய்களை அடிக்கடி பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது.

நிறைய பழங்களை சாப்பிடவும்

நிறைய பழங்களை சாப்பிடவும்

உங்கள் உணவில் பழங்களை அதிகமாக சேர்த்துக் கொள்வதன் மூலம், நோய் எதிர்ப்பு சக்தி வலுவடையக்கூடும். நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகமாகவே உள்ளது. ஆரோக்கியமான நோய் எதிர்ப்பு மண்டலத்தை உருவாக்குவதில் இது நன்கு உதவக்கூடும். நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதன் மூலம் குமட்டல், வாந்து, மலச்சிக்கல் மற்றும் பிற கர்ப்பகால அறிகுறிகளையும் குறைத்திட உதவும். கீரை வகைகள், வெந்தயம், வெங்காயம் போன்ற பருவ கால காய்கறிகளை சாப்பிடுவதனால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்திடலாம்.

நிறைய தண்ணீர் குடிக்கவும்

நிறைய தண்ணீர் குடிக்கவும்

குளுமையான சூழல் எப்போதுமே அனைவரும் தண்ணீர் குடிப்பதையும் மறக்க செய்திடும். குறிப்பாக கர்ப்பிணி பெண்களுக்கு இது நல்லதல்ல. கர்ப்ப காலத்தில் ஏற்படக்கூடிய நீரிழப்பு, குறைந்த அளவு அம்னோடிக் திரவத்திற்கு வழிவகுக்கும். அதனால் குறைப்பிரசவம் ஏற்படுவதற்கான வாய்ப்பு உருவாகக்கூடும். அதுமட்டுமல்லாது, தாய் பாலின் உற்பத்தியையும் இது பாதிக்கக்கூடும். குளிர்காலத்தில் வீசக்கூடிய வறண்ட காற்று உடலில் கூடுதல் நீர் தேவையை ஏற்படுத்தும். இதனை சரிசெய்ய அதிக அளவில் நீர் குடிக்க வேண்டும். பழச்சாறுகள், இளநீர் போன்றவற்றை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.

காய்ச்சல் தடுப்பூசி போடவும்

காய்ச்சல் தடுப்பூசி போடவும்

கர்ப்ப கால காய்ச்சல் தடுப்பூசி போட்டு கொள்வதன் மூலம் உங்களையும், உங்களது குழந்தையைம் காய்ச்சலிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும். பிறந்து ஆறு மாதங்கள் வரையிலும் உங்களது குழந்தையை காய்ச்சலில் இருந்து இந்து தடுப்பூசி பாதுகாக்கும் என்கின்றனர் நிபுணர்கள். அதுமட்டுமல்லாது, இந்த தடுப்பூசி போட்டுக் கொள்ளுட் பெண்களுக்கு காயச்சலுடன் தொடர்புடைய கடுமையான சுவாச நோய்தொற்றின் அபாயத்தையும் குறைக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. கவலையே வேண்டாம். இந்த காய்ச்சல் தடுப்பூசியானது கர்ப்பிணி பெண்களுக்கு, அவர்களது வயிற்றில் வரும் குழந்தைகளுக்கு மிகவும் பாதுகாப்பானது என அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

முடி சிகிச்சையைத் தவிர்க்கவும்

முடி சிகிச்சையைத் தவிர்க்கவும்

முடி பராமரிப்பு பொருட்களில் உள்ள ரசாயனங்கள் வயிற்றில் வளரும் குழந்தைக்கு தீங்கு விளைவிக்கும் என்பதால், கர்ப்ப காலத்தில் பெண்கள் கூந்தல் தொடர்பான அழகுபடுத்தும் செயல்பளில் ஈடுபடுவதை தவிர்த்திடவும். கூந்தலை நேராக்குவது அல்லது வண்ணமயமாக்குவது போன்ற கூந்தல் சிகிச்சைகளை தவிர்ப்பது நல்லது. கூந்தல் வண்ணப்பூச்சு சாயங்களில் ஈயம் இருக்கலாம். இது மிகவும் ஆபத்தான விஷமாகும். இந்த விஷமானது, கரு வளர்ச்சியில் பாதிப்பு அல்லது குறைப்பிரசவத்திற்கு வழிவகுத்துவிடும்.

கால்களை வெதுவெதுப்பாக வைத்திருக்கவும்

கால்களை வெதுவெதுப்பாக வைத்திருக்கவும்

குளிர்காலங்களில் அடிக்கடி வெளியே செல்வதனால், சில்ப்ளேன்கள் (சருமத்தில் உள்ள சிறிய இரத்த நாளங்களில் வலியுடன் கூடிய வீக்கம்) போன்ற மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். இதனால் கை, கால்களில் அரிப்பு, சிவத்தல், வீக்கம் அல்லது கொப்புளங்கள் ஏற்படலாம். இந்த பிரச்சனைகளை தவிர்க்க, கால்களை நன்கு மூடி வெதுவெதுப்பாகவும், பாதுகாப்பாகவும் வைத்திருக்க வேண்டும். ஒருவேளை, நீங்கள் ஏற்கனவே சில்ப்ளைன்களால் பாதிக்கப்பட்டிருந்தால், உங்களது கால்களை வெதுவெதுப்பான நீரில் சிறிது நேரம் ஊற வைக்கலாம். இது வலியை குறைத்து, அசௌகரியத்தை போக்கிட உதவும்.

முடிந்தவரை வெளியே போகாமல் இருக்கவும்

முடிந்தவரை வெளியே போகாமல் இருக்கவும்

கர்ப்பம் காலம் என்பது உங்களது உடலை அதிக உணர்திறன் மற்றும் நோய்களால் பாதிக்கக்கூடும். எனவே, மோசமான வானிலை மற்றும் கிருமிகளின் தாக்குதலுக்கு ஆளாவதை தவிர்ப்பதற்கு, முடிந்தவரை வீட்டுக்குள்ளே இருப்பது நல்லது. மேலும், கிருமி தொற்றுகளை தவிர்ப்பதற்காகவும், வயிற்றில் வளரும் குழந்தையின் பாதுகாப்பிற்காகவும் கைகளை அடிக்கடி கழுவுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். கடும் குளிரில் வெளியே நடைப்பயிற்சிக்கு செல்வது பாதுகாப்பானது அல்ல. அதற்கு பதிலாக வீட்டிற்குள்ளேயே சிறிது பயிற்சி மேற்கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Winter Care Tips For Pregnant Women: What’s Good And What’s Bad For You

Winter care tips for pregnant women: What’s good and What’s bad for you? Read on to know more...
Desktop Bottom Promotion