For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கர்ப்ப காலத்தில் சிரசாசனம் செய்யும் போட்டோவை இன்ஸ்டாவில் போட்டு அசர வைத்த அனுஷ்கா... கர்ப்பிணிகள் இதை செய்யலாமா?

32 வயதான அனுஷ்கா சர்மா, இன்ஸ்டாவில் தனது கர்ப்ப கால பயணத்தை தனது ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டு இருக்கிறார்.அந்த வகையில் சமீபத்தில் இன்ஸ்டாவில் இவர் பதிவிட்ட ஒரு இடுகை, பலரையும் அதிர வைத்தது.

|

ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சியின் நன்மைகளை நன்கு அறிந்திருப்பதை அவ்வப்போது உறுதிப்படுத்தும் பாலிவுட் நடிகைகளுள் ஒருவர் தான் அனுஷ்கா சர்மா. தற்போது இவர் கர்ப்பத்தின் இறுதி மூன்றாவது மாதத்தில் உள்ளார். இப்போதும் இவர் ஃபிட்டாக இருப்பதற்கு அன்றாடம் யோகாவை செய்து வருகிறார். 32 வயதான அனுஷ்கா சர்மா, இன்ஸ்டாவில் தனது கர்ப்ப கால பயணத்தை தனது ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டு இருக்கிறார்.

Benefits Of Shirshasana Yoga Pose During Pregnancy In Tamil

அந்த வகையில் சமீபத்தில் இன்ஸ்டாவில் இவர் பதிவிட்ட ஒரு இடுகை, பலரையும் அதிர வைத்தது. ஏனெனில் இவர் கர்ப்ப காலத்தில் யாரும் செய்ய யோசிக்கும் சிரசாசனம் என்னும் ஆசனத்தை, தனது கணவரான கோலியின் உதவியுடன் செய்த போட்டோவை பகிர்ந்திருந்தார். யோகாவின் ரசிகையான இவர், பல வருடங்களாக இந்த ஆசனத்தை செய்வதாகவும், கர்ப்ப காலத்தில் கூட மருத்துவரின் ஆலோசனையின் பேரில் சரியான வழிகாட்டுதலிலும், ஆதரவிலும் இதை செய்வதாக குறிப்பிட்டிருந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி செய்வது எவ்வளவு முக்கியம்?

கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி செய்வது எவ்வளவு முக்கியம்?

பொதுவாக கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி அதிகம் செய்யக்கூடாது என்ற ஒரு கருத்து மக்களிடையே உள்ளது. ஆனால் உண்மையில், தினமும் உடற்பயிற்சி செய்வதால், முதுகு வலி, கால் வீக்கம் போன்றவற்றில் இருந்து நிவாரணம் கிடைப்பதுடன், இரவு நேரத்தில் நல்ல நிம்மதியான தூக்கமும் கிடைக்கும். மேலும் இது மகப்பேற்றுக்குப்பின் விரைவான மீட்புக்கு உதவும்.

கர்ப்ப காலத்தில் ஒருவித உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவது தாய்க்கு மட்டுமல்ல, குழந்தைக்கும் நல்லது. அதுவும் இது குழந்தைக்கு ஃபிட்டான இதயம், குறைவான பி.எம்.ஐ மற்றும் மூளை ஆரோக்கியத்தை அதிகரிக்கும். எனவே கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி அல்லது யோகாவில் ஈடுபடும் முன், மருத்துவரிடம் கலந்தாலோசித்த பின் மேற்கொள்வது முற்றிலும் பாதுகாப்பானது.

எவ்வளவு நேரம் ஒருவர் உடற்பயிற்சியை மேற்கொள்ளலாம்?

எவ்வளவு நேரம் ஒருவர் உடற்பயிற்சியை மேற்கொள்ளலாம்?

அமெரிக்கன் மகப்பேறியல் மற்றும் மகப்பேறு மருத்துவக் கல்லூரி (ACOG) படி, கர்ப்பிணிப் பெண்கள் தினமும் குறைந்தது 30 நிமிடம் உடற்பயிற்சியை செய்ய வேண்டும். அப்படி மேற்கொள்ளும் உடற்பயிற்சி நீண்டதாக இருக்க வேண்டிய அவசியமில்லை. உங்களால் 30 நிமிடம் உடற்பயிற்சி செய்ய முடியாவிட்டால், 10 நிமிட மிதமான உடற்பயிற்சி, யோகா அல்லது நடைப்பயிற்சி கூட போதும். கர்ப்பத்திற்கு முன் ஓடுவது போன்ற தீவிரமான உடற்பயிற்சிகளில் ஈடுபட்டவர்கள், மருத்துவரிடம் சோதனை செய்த பின்னர் தங்கள் வழக்கத்தைத் தொடரலாம்.

கர்ப்பிணிப் பெண்கள் செய்யக்கூடாத உடற்பயிற்சிகள்

கர்ப்பிணிப் பெண்கள் செய்யக்கூடாத உடற்பயிற்சிகள்

கர்ப்ப காலத்தில் பெரும்பாலான உடற்பயிற்சிகள் பாதுகாப்பானது தான். ஆனால் அதை அளவுக்கு அதிகமாகத் தான் செய்யக்கூடாது. நீச்சல், விறுவிறுப்பான நடைப்பயிற்சி, சைக்கிளிங், படி அல்லது நீள்வட்ட இயந்திரங்கள், குறைந்த தாக்க ஏரோபிக்ஸ் ஆகியவை கர்ப்பிணிப் பெண்களுக்கான சிறந்த உடற்பயிற்சிகளாகும். இந்த வகை பயிற்சிகள் முழு உடலுக்கும் பயனளிக்கும் மற்றும் காயத்தின் அபாயமும் மிகவும் குறைவு. மேலும் இந்த வகை உடற்பயிற்சிகளை கர்ப்பத்தின் கடைசி வாரம் வரை தொடர்ந்து செய்யலாம்.

யாரெல்லாம் கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சியை செய்யக்கூடாது?

யாரெல்லாம் கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சியை செய்யக்கூடாது?

பொதுவாக, அனைத்து கர்ப்பிணிப் பெண்களுக்கும் மிதமான உடல் செயல்பாடுகள் பரிந்துரைக்கப்படுகிறது. இது கர்ப்ப கால அறிகுறிகளில் இருந்து நிவாரணம் அளிப்பதோடு, மனநிலையையும் சிறப்பாக வைத்துக் கொள்ள உதவும். ஆனால் ஆஸ்துமா, இதய நோய் அல்லது சர்க்கரை நோய் போன்ற குறிப்பிட்ட மருத்துவ பிரச்சனைகளைக் கொண்ட கர்ப்பிணிப் பெண்கள் மிகவும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். ஒருவேளை இரத்தக்கசிவு, குறைவான பனிக்குட நீர், தொடர்ச்சியான கருச்சிதைவு, பலவீனமான கர்ப்பப்பை போன்ற பிரச்சனைகளைக் கொண்டவர்களை ஓய்வு எடுக்க மருத்துவர் அறிவுறுத்தலாம்.

கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி செய்யும் போது நினைவில் கொள்ள வேண்டியவை:

கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சி செய்யும் போது நினைவில் கொள்ள வேண்டியவை:

* தளர்வான மற்றும் வசதியான உடைகளை அணியுங்கள்.

* வெப்பமான காலநிலையில் தீவிரமான உடற்பயிற்சியை செய்யாதீர்கள்.

* உடற்பயிற்சியின் போது மற்றும் உடற்பயிற்சிக்கு பின் நிறைய தண்ணீரைக் குடியுங்கள்.

எப்போது உடற்பயிற்சியை நிறுத்த வேண்டும்?

எப்போது உடற்பயிற்சியை நிறுத்த வேண்டும்?

கர்ப்பிணிகள் உடற்பயிற்சி செய்யும் போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குறிப்பாக இறுதி மூன்று மாத காலங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நிபுணர் வழிகாட்டுதலின் கீழ் எந்தவிதமான உடல் செயல்பாடுகளிலும் ஈடுபடுங்கள். மேலும் பின்வரும் அறிகுறிகளை நீங்கள் உணர்ந்தால், உடனே உடற்பயிற்சி செய்வதை நிறுத்திவிட்டு மருத்துவரை அணுகுங்கள்.

* மார்பு வலி

* மூச்சுத் திணறல்

* தலைச்சுற்றல், மயக்கம் அல்லது தலைவலி

* தசை பலவீனம்

* கால் வீக்கம்

* கணுக்கால், கைகள் அல்லது முகத்தில் திடீர் வீக்கம்

* யோனியில் இரத்தக்கசிவு

* குமட்டல் மற்றும் வாந்தி

* குழந்தையின் அசைவு குறைந்திருப்பது

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Benefits Of Shirshasana Yoga Pose During Pregnancy In Tamil

'Shirshasana' during pregnancy? Here are the benefits of the headstand yoga pose. Read on...
Desktop Bottom Promotion