For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வயிற்றுக்குள் குழந்தை இருக்கும்போது இதெல்லாம் சாப்பிடவே கூடாது...

இங்கே சில உணவுப்பொருள்கள் கொடுக்கப்பட்டுள்ளன. கர்ப்பமாக இருக்கும்போது, என்னனெ்ன உணவுகளைத் தவிர்க்கலாம் என கொடுக்கப்பட்டுள்ளது.

|

கர்ப்பம் சிலருக்கு மிகப்பெரிய காலமாக இருக்கும். இந்த நேரத்தில் உங்கள் உடலின் கோரிக்கைகளை புரிந்துகொள்வதில் சிரமம் ஏற்படுவது இயற்கையானதே.

Pregnancy Eating Tips

இது உங்கள் முதல் தடவையாக இருந்தால், அது இன்னும் திணறுவீர்கள். ஆகவே கர்ப்பகாலத்தில் நீங்கள் எதை சாப்பிடுவதற்கு முன்பும் கவனமாக ஆராய்ந்து செயல்பட வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கர்ப்பிணிகள்

கர்ப்பிணிகள்

வைட்டமின்கள் மற்றும் மினெரல்ஸ் நிறைந்த ஒரு சமநிலையான உணவை சாப்பிடுவது வயிற்றில் வளரும் குழந்தைக்கு மிகவும் நல்லது. ஆரோக்கியமான காலை உணவு சாப்பிடுவது மிகவும் முக்கியம். இது புரதம், வைட்டமின்கள் மற்றும் ஃபைபர் கலந்த ஒரு நல்ல கலவையாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும்.

ஊட்டச்சத்துக்கள்

ஊட்டச்சத்துக்கள்

ஃபோலேட் அல்லது ஃபோலிக் அமிலம், ஒரு B-குரூப் வைட்டமின்; இது கர்ப்பத்தின் ஆரம்ப கட்டத்தில் கருவின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு அவசியம். கர்ப்பிணிப் பெண் முதல் மூன்று மாதங்களில் தங்களது உணவில் கடுமையான மாற்றங்களைச் செய்யக் கூடாது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். கூடுதல் உட்கொள்ளலும் பரிந்துரைக்கப்படவில்லை.

பழங்கள்

பழங்கள்

இரண்டாவது மூன்று மாதங்களில் இருந்து, ஒரு கூடுதல் 350 கலோரிகள் உட்கொள்ளலாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது. முழு தானியங்கள் மற்றும் கம்பு போன்ற ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் இந்த நேரத்தில் சாப்பிட்டால் மிகவும் நல்லது. கீரைகள், காய்கறிகள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்த பழங்களும் அவசியம்.

கர்ப்பிணி பெண்கள் ஜங்க் மற்றும் எண்ணெய் பொருட்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏன்னெனில் இதில் ஆரோக்கியமற்ற கொழுப்புகள் நிறைய உள்ளனர். இது இரைப்பைக் குறைபாடுகள் மற்றும் குமட்டல் ஏற்படுத்தலாம்.

வைட்டமின் டி

வைட்டமின் டி

கர்ப்பிணிப் பெண்கள் எடுத்துக் கொள்ளும் ஊட்டச்சத்துக்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சுகாதாரப் பயிற்சி மற்றும் மேக்ரோபியோடிக் ஊட்டச்சத்து நிபுணர், ஷில்பா அரோரா ND கூறுவது என்னவென்றால், கர்ப்ப காலத்தில் கால்சியம், வலிமை மற்றும் ஆற்றலுக்கு இரும்பு, எலும்பு ஆரோக்கியத்திற்கான வைட்டமின் டி போன்ற ஊட்டச்சத்துக்களை உட்கொள்ளவது முக்கியம்.

புரத உணவுகள்

புரத உணவுகள்

பருப்பு மற்றும் முட்டைகளிலிருந்து புரதம், ராகி, ஜொவர் போன்ற சிக்கலான தானியங்களிலிருந்து ஃபைபர் தேவைப்படுகிறது. நீங்கள் நட்ஸ் மற்றும் விதைகள் போன்றவற்றிலிருந்து ஆரோக்கியமான கொழுப்புகளை எடுத்துக்கொள்வது அவசியம். பழங்கள் மற்றும் பல்வேறு காய்கறிகள் சாப்பிட்டு அதிலுள்ள மைக்ரோ ஊட்டச்சத்துகளை எடுத்துக்கொள்வது அவசியம்.

தண்ணீர்

தண்ணீர்

எல்லா நேரங்களிலும் உங்கள் உடலை ஹைட்ரடேட் ஆக வைத்து கொள்ளவும். இதற்கு நீங்கள் தண்ணீர், தேங்காய் நீர் அல்லது மோர் குடிக்கலாம். காஃபின் பானங்கள் மற்றும் ஆல்கஹால் உடலுக்கு நல்லதல்ல. எனவே அதை தவிர்க்கவும்.

சாப்பிடக் கூடாதவை

சாப்பிடக் கூடாதவை

டாக்டர் மோகித கோயல், ஆலோசகர் - மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல், தாய் மருத்துவமனையான புனே, கர்ப்ப காலத்தில் உறுதிப்படுத்த சில உணவூட்டல்கள் மற்றும் செய்யக்கூடாதவை:

கவனிக்க வேண்டியவை

கவனிக்க வேண்டியவை

1. உணவை சிறிய பகுதிகளாய் அடிக்கடி எடுத்துக்கொள்ளுங்கள். அந்த சாப்பாடு ஊட்டச்சத்துக்களால் நிறைந்திருக்கிறதா என்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.

2. மலச்சிக்லை தவிர்க்க முழு தானியங்கள், பருப்புகள், பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற இழை நிறைந்த உணவுகளை சாப்பிடுங்கள்.

3. பால் பொருட்கள், பருப்பு வகைகள், முட்டை, இனிப்பு உருளைக்கிழங்கு போன்ற கூடுதல் புரதம் மற்றும் கால்சியம் நிறைந்த உணவுகளை சாப்பிடுங்கள்.

4. நச்சுத்தன்மையைக் கழுவவும் சிறுநீர் பாதை நோய்த்தொற்றைத் தடுக்கவும் நிறைய தண்ணீர் குடிக்கவும்.

சாப்பிடக்கூடாதவை

சாப்பிடக்கூடாதவை

1. கொழுப்புகள் / சர்க்கரை / உப்பு / எண்ணெய் அதிகமாக இருக்கும் உணவுகளை தவிர்க்கவும்.

2. ஆல்கஹால் / காஃபின் தவிர்க்கவும்.

3. உயர் பாதரச மீன்கள், சரியாக சமைக்கப்படாத இறைச்சி, பச்சை முளைகட்டிய பயிர்கள், மற்றும் பச்சை முட்டை ஆகியவற்றை தவிர்க்கவும்.

4. பதப்படுத்தப்படாத பால், சீஸ் மற்றும் பழச்சாறு ஆகியவற்றை தவிர்க்கவும்.

டாக்டர் அனு ஸ்ரீதர், MBBS, எம்.டி. (மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல்) ஆலோசகர் ஃபோர்டிஸ் மருத்துவமனை கூறுவது என்னவென்றால், பிறந்த பிறகும், ஒரு தாய்க்கு டயட் உணவு அவசியம். ஒரு நல்ல ஊட்டச்சத்து உணவு ஒரு தாய்க்கு உதவுகிறது. குழந்தை நன்கு வளர்க்கப்படுவதை உறுதி செய்வதற்கு, தாய்க்கு போதுமான அளவிலான திரவங்களை குடிக்க வேண்டியது அவசியம்; மற்றும் ஒரு சீரான சாதாரண உணவு சாப்பிட வேண்டியதும் அவசியம்.

இறைச்சி

இறைச்சி

மெல்லிஸான இறைச்சி, பருப்பு வகைகள், பழுப்பு அரிசி (பிரவுன் ரைஸ்), மற்றும் முழு தானியங்கள் கர்ப்பிணிப் பெண்களுக்கு பெரும்பாலும் உணவில் சேர்த்துக் கொள்வதற்கு பரிந்துரைக்கப்படுகிறது.

இருப்பினும், ஒவ்வொரு தாயின் உடல் வேறுபட்டது. ஏதாவது உங்கள் உடலுக்கு ஒத்துக்கொள்ளவில்லை என்றாலும் அல்லது ஒரு சிறிய அசௌகரியம் ஏற்பட்டாலும், நீங்கள் உங்கள் பெண் மருத்துவரிடம்(கைனகோலஜிஸ்ட்) ஆலோசனை செய்ய வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Pregnancy Eating Tips: Dietary Do's and Don'ts Pregnant Women Must Ensure

here we suggest some diet ideas. Dietary Do's and Don'ts Pregnant Women Must Ensure your health
Story first published: Thursday, August 30, 2018, 13:46 [IST]
Desktop Bottom Promotion