For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கர்ப்பிணிகளின் பனிக்குட நீர் உடைந்தால் என்ன ஆகும்? ஏன் இது உடைகிறது?

பிரசவம் என்பது கர்ப்பிணிகளின் வாழ்வில் மிக முக்கியமான காலகட்டம்; கர்ப்பிணிகளின் பனிக்குட நீர் உடைந்தால் என்ன ஆகும்? ஏன் இது உடைகிறது? என்பது குறித்து இங்கு படிக்கலாம்.

|

கர்ப்பகாலம் என்பது பெண்களின் வாழ்நாளில் மிகவும் முக்கியமான கால கட்டம்; இந்த சமயத்தில் கர்ப்பிணி பெண்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கர்ப்பிணி பெண்கள் பலர், அவர்களின் கர்ப்ப காலத்தின் இறுதி காலகட்டத்தில் அல்லது பிரசவம் நிகழ்வதற்கு முன்பாக பனிக்குடம் உடைந்து விட்டது அல்லது பனிக்குட நீர் வெளிவந்து விட்டது என்று கூற கேட்டு இருப்போம்.

water breaking during pregnancy

ஆனால் பனிக்குடம் உடைதல் அல்லது பனிக்குட நீர் வெளிவருதல் என்றால் என்ன என்றும், அவ்வாறு பனிக்குட நீர் உடைவது கருவில் வளரும் குழந்தையின் உயிரை பாதிக்குமா என்றும் இந்த பதிப்பில் படித்து அறியலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பனிக்குடம் என்றால் என்ன?

பனிக்குடம் என்றால் என்ன?

பனிக்குடம் என்பது நீர் நிறைந்து இருக்கும்; பனிக்குடம் என்னும் இதில் தான் தாயின் வயிற்றில் கரு வளரும் ஒரு இடம்; தாயின் வயிற்றில் கருப்பை எனும் உறை இருக்கும். அந்த உறையில் நிறைந்துள்ள நீரில் தான் கரு உருவாகி வளரும். இந்த பனிக்குடத்தில் நிறைந்திருக்கும் நீரை தான் பனிக்குட நீர் என்கிறோம்!

எப்பொழுது உடையும்?

எப்பொழுது உடையும்?

பனிக்குடம் என்பது கர்ப்ப காலத்தின் கடைசி கால கட்டத்தில் அதாவது கடைசி மூன்று மாத கால கட்டத்தில் அது உடையும் நிகழ்வு ஏற்படலாம். பனிக்குடம் என்பது கரு வளரும் இடம் என்று முன்பே பார்த்தோம்; கரு தாயின் வயிற்றில் வளர்ந்து வெளிவரும் சமயம் அந்த பனிக்குடம் உடைந்து நீர் வெளியேறி கரு வெளிப்படும் சமயம் என்பதை அறிவுறுத்த தான் இந்நிகழ்வு நடைபெறுகிறது. இந்த நீர் பிறப்புறுப்பின் வழியே வெளிப்படும்.

உடைவதற்கு என்ன காரணம்!

உடைவதற்கு என்ன காரணம்!

பெண்களின் கர்ப்ப காலத்தில் பனிக்குடம் உடைவதற்கு என்னென்ன காரணங்கள் என்று இப்பொழுது பார்க்கலாம்; கர்ப்பிணிகள் குறைந்த உடல் எடை கொண்டு இருந்தாலோ, கர்ப்பிணியின் இரண்டாம் மற்றும் மூன்றாம் மாத கால கட்டத்தில் இரத்தக்கசிவு ஏற்பட்டாலோ, பெண்களுக்கு முந்தைய பிரசவத்தில் குறை பிரசவம் நிகழ்ந்து இருந்தாலோ, கர்ப்பிணிக்கு புகை பிடிக்கும் பழக்கம் இருந்தாலோ, சிறிய பிறப்புறுப்பு, சத்துக்குறைவு, கருப்பையின் உட்சுவர்களில் எரிச்சல் போன்ற பிரச்சனைகள் தான் பனிக்குடம் உடைந்து நீர் வெளிப்படுவதற்கான காரணங்கள் ஆகும்.

எப்படிப்பட்ட உணர்வு ஏற்படும்?

எப்படிப்பட்ட உணர்வு ஏற்படும்?

கர்ப்பிணி பெண்ணின் பனிக்குடத்தில் 600 மில்லி நீர் நிறைந்து இருக்கும்; அந்த நீர் பனிக்குடம் உடைந்து வெளியேறும் பொழுது காலின் வழியே வடிந்து வெளியேறி விடும். இந்த பனிக்குட நீர் வெளியேறும் பொழுது எந்த வித மணமும், எவ்வித நிறமும் வெளிப்படாது; இந்த பனிக்குடம் உடைந்து பனிக்குட நீர் வெளிவருதல் 37வது வாரத்தின் பொழுது ஏற்படலாம்.

அதனால், கர்ப்பிணி பெண்கள் கர்ப்ப காலத்தின் இந்த சமயத்தில் பேடை தங்களுடன் வைத்திருப்பது நல்லது.

ஃபோர் நீர் மற்றும் ஹிண்ட் நீர்

ஃபோர் நீர் மற்றும் ஹிண்ட் நீர்

தாயின் வயிற்றில் இருக்கும் பனிக்குடம் கருவை தாங்கி வளர்த்துக் கொண்டு இருக்கும். பனிக்குடத்தில் குழந்தை வளரும் பொழுது, பனிக்குடம் உடையும் நேரத்தில் குழந்தையின் தலை பக்கத்திலிருக்கும் நீர் வெளியேறும் பொழுது அவ்வாறு வெளிப்படும் நீர் ஃபோர் நீர் என்று அழைக்கப்படுகிறது; இதுவே குழந்தையின் கால் பகுதியில் இருக்கும் நீர் வெளியேறினால் அதை ஹிண்ட் நீர் என்று அழைக்கிறார்கள்.

பிறப்புறுப்பில் வெளியேறுவது எது?

பிறப்புறுப்பில் வெளியேறுவது எது?

பெண்களின் பிறப்புறுப்பு வழியாக சிறுநீர், மாதவிடாய், வெள்ளைப்படுதல் போன்ற இத்தனை விஷயங்கள் வெளியேறும்; மேலும் பனிக்குட நீர் கூட பிறப்புறுப்பின் வழியாக வெளியேறும். ஆகையால் பிறப்புறுப்பின் வழியாக எப்பொழுது வெளியேறுகிறது என்று பெண்கள் அறிந்து வைத்திருப்பது அவசியம். கர்ப்ப காலத்தில் கண்டிப்பாக மாதவிடாய் ஏற்படாது; மேலும் வெள்ளைப்படுதல் சற்று அடர்ந்து சளி போன்று இருக்கும்.

மணம் மூலம் அறியலாம்?

மணம் மூலம் அறியலாம்?

பனிக்குட நீர் வெளியேறுகையில் அதில் இருந்து மணம் வெளிப்படாது; ஆனால் சிறுநீர் வெளிப்பட்டால் சிறுநீர் மணம் வெளிப்படும். இந்த மாற்றங்களை வைத்து பிறப்புறுப்பின் வழியே எது வெளிப்படுகிறது என்று கர்ப்பிணி பெண்கள் கண்டறியலாம். இந்த பனிக்குட நீர் வெளிப்படும் காலத்தையும் நீங்கள் அறிந்து வைத்து இருப்பதால், காலத்தை பொறுத்து உங்கள் உடலில் இருந்து வெளிப்படுவது எது என்று எளிதில் கற்பிணிகளால் கண்டறியலாம்.

கருவிற்கு ஆபத்தா?

கருவிற்கு ஆபத்தா?

கரு வளரும் இடம் பனிக்குடம் அதில் இருக்கும் நீர் முழுவதுமாக வெளியேறி விட்டால், அது கருவிற்கு ஆபத்தாக முடியலாம். ஏனெனில் கரு வளர்வதற்கு தேவையான சூழல் கண்டிப்பாக அவசியம்; அந்த சூழல் பாதிக்கப்படும் பொழுது அது கண்டிப்பாக கருவை பாதிக்க அதிக வாய்ப்புகள் உண்டு. ஆகையால் பனிக்குட நீர் உடைந்தால் கருவினை பற்றி யோசித்து மிகவும் கவனமாக இருந்து உடனடியாக தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மருத்துவர் உதவி!

மருத்துவர் உதவி!

பனிக்குட நீர் வெளியேறிய உடன் கருவின் நிலை அல்லது குழந்தையின் நிலை எப்படி இருக்கிறது, பிரசவம் நிகழப்போகிறதா அல்லது வேறு ஏதேனும் பிரச்சனையா என்பதை அறிய உடனே மருத்துவரிடம் செல்ல வேண்டும். மருத்துவரிடம் பனிக்குட நீர் வெளியேறிய பின் எவ்வளவு விரைவாக செல்கிறீரோ அத்தனை நல்லது. பனிக்குட நீர் வெளியேறுவது கருவின் உயிருடன் சம்பந்தப்பட்டது எனவே உடனடியாக மருத்துவரிடம் செல்ல வேண்டியது அவசியம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Amniotic Sac Water Breaking During Pregnancy

Amniotic Sac Water Breaking During Pregnancy
Story first published: Wednesday, August 29, 2018, 16:19 [IST]
Desktop Bottom Promotion