கர்ப்பிணிகளுக்கு காலில் அடிக்கடி பிடிப்பு உண்டானால் காரணம் என்ன தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் சந்திக்கும் மிக முக்கியமான பிரச்சனைகளில் ஒன்று கால் வலி. காலில் குறிப்பாக பின்னங்கால் மற்றும் பாதத்தில் ஏற்படுகிற பிடிப்பினால் பெரும் அவஸ்தைக்கு உள்ளாவார்கள்.

Causes And Treatment For Leg Cramps During Pregnancy

சிலருக்கு கால் பிடிப்பு விட்டு விட்டு ஏற்படும் இன்னும் சிலருக்கோ அது தொடர்கதையாகியிருக்கும்.ஏன் இந்தப் பிரச்சனை ஏற்படுகிறது, அதனை தீர்க்க வழிதான் என்ன என்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ரத்த ஓட்டம் :

ரத்த ஓட்டம் :

வழக்கமாக இருக்கும் உங்களது நடமாட்டமும் கர்ப்பமாக இருக்கும் போது உங்களுடைய நடமாட்டங்களிலும் ஏகப்பட்ட வித்யாசத்தை உணர்வீர்கள்.

அந்த வித்யாசங்களில் ஒன்றாக உங்களுடைய நடையும்

மாறியிருக்கும். இந்த காலில் பிடிப்பு ஏற்படுவதற்கு முக்கிய காரணியாக சொல்லப்படுவது ஓட்டம் தான். கால்களில் ரத்த ஓட்டம் குறையும் போது இந்தப் பிரச்சனை ஏற்படும்.

குழந்தையின் வளர்ச்சி :

குழந்தையின் வளர்ச்சி :

வயிற்றிலிருக்கும் குழந்தை வளர்ந்து பெரிதானால் உங்கள் வயிறு விரிவடையும் இதனால் ரத்த நாளங்களுக்கு அழுத்தம் உண்டாகி கால்களுக்கு செல்லக்கூடிய ரத்தத்தில் தடை ஏற்படுகிறது. அதன் அறிகுறியாகத்தான் உங்கள் காலில் பிடிப்புகள் உண்டாகிறது.

சத்துக்கள் :

சத்துக்கள் :

காலில் பிடிப்பு ஏற்படுவதற்கு ரத்த ஓட்டம் மட்டுமே காரணமல்ல, அதைத்தவிர வேறு என்ன காரணங்கள் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

சில குறிப்பிட்ட சத்துக்கள் உடலில் குறைந்து விட்டது என்பதன் அறிகுறியாக கூட உங்களுக்கு காலில் பிடிப்பு ஏற்படலாம். கர்பிணிகளைத் தவிர பிறருக்கும் காலில் பிடிப்பு ஏற்படுவதற்கு அதுவே காரணம்.

 கால்சியம் :

கால்சியம் :

குறிப்பாக உங்கள் உடலுக்குத் தேவையான அளவை விட குறைந்த அளவில் கால்சியம் மற்றும் மக்னீசியம் அளவு குறைந்தால் இந்தப் பிரச்சனை ஏற்படும். கர்ப்பமாக இருக்கும் போது இந்த சத்துக்கள் இரட்டிப்பாக தேவைப்படும்.

 உடலியல் மாற்றங்கள் :

உடலியல் மாற்றங்கள் :

குழந்தை பெரிதாக வளர வளர, உங்களுடைய வயிறு விரிவடையும் அதோடு இடுப்பகுதி தளர்ந்து பிரசவத்திற்கு தயாராகும். வயிற்றில் இருக்கும் எடை,இடுப்பு,முதுகுத்தண்டு ஆகியவற்றை பாதிக்கும்.அதன் அறிகுறியாக உங்கள் தசைகளில் பிடிப்பு ஏற்படலாம்

பெல்ட் :

பெல்ட் :

காலில் பிடிப்பு அடிக்கடி ஏற்பட்டால் பெல்விஸ் பெல்ட் பரிந்துரைக்கப்படுகிறது. இந்த பெல்ட் அணிந்து கொள்வதால் அதிகமான எடை இடுப்பு பகுதி தாங்க வேண்டிய கட்டாயம் இருக்காது. பாதி எடையை இந்த பெல்ட் தாங்கிடும்.

ஆனால் இந்த பெல்ட் அணிவதற்கு முன்னதாக, எத்தனாவது மாதத்திலிருந்து பெல்ட் அணிய வேண்டும், எவ்வளவு நேரம் அணியலாம், எந்த பொசிசனில் அணிவது உள்ளிட்ட மிக முக்கியமான கேள்விகளை மருத்துவரிடம் கேட்டு தெளிவு பெறுவது நல்லது. அவர் உங்களின்

உடல் நலனை கருத்திற் கொண்டு விளக்கமளிப்பார்.

உணவுகள் :

உணவுகள் :

கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு உணவு தான் மிகவும் அத்தியாவசியமானது. ஒமட்டல், வாந்தி ஏற்படும் அந்தப் பருவத்தில் சிலருக்கு உணவின் மீது வெறுப்பே ஏற்பட்டிருக்கும்.

அதனால் அப்படியே சாப்பிடாமல் விட்டு விடாதீர்கள்.பிடித்திருக்கிறதோ இல்லையோ ஓரளவுக்காவது சாப்பிட்டுவிட வேண்டியது கட்டாயம்.

கவனிக்க :

கவனிக்க :

அப்படி அடம்பிடித்து வீம்பாக சாப்பிடும் நேரத்தில் உங்களுக்கு பிடித்த உணவை மட்டும் தேர்ந்தெடுக்க கூடாது. அதைத் தவிர சத்தான உணவுகளை சாப்பிட வேண்டியது அவசியம்.

குறிப்பாக கால்சியம் மற்றும் மக்னீசியம் அதிகமாக இருக்கும் உணவுகளை அடிக்கடி எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கும் வயிற்றில் வளர்கின்ற குழந்தைக்கும் இது மிகவும் முக்கியமான சத்துக்கள் ஆகும்.

மாதம் ஏறிவிட்டதால் :

மாதம் ஏறிவிட்டதால் :

இரண்டாம் ட்ரைம்ஸ்டர் துவங்கியதுமே இந்த காலில் பிடிப்பு ஏற்படுகிற பிரச்சனையின் தீவிரம் அதிகரிக்கும். அப்போது மாதம் ஏறிவிட்டது இனிமேல் எந்த கடினமான வேலைகளையும் செய்ய வேண்டாம் என்று நினைத்து...

ஒரேயிடத்தில் உட்கார்ந்திருப்பதும், நீண்ட நேரம் படுத்திருப்பதும் காலில் ஏற்படுகிற பிடிப்புகளுக்கு ஓர் காரணியாக இருக்கிறது.

நடைப்பயிற்சி :

நடைப்பயிற்சி :

உங்களின் மருத்துவரின் ஆலோசனைப்படி, சின்ன சின்ன உடற்பயிற்சிகள் மேற்கொள்ளலாம். தினமும் குறைந்ததது அரை மணி நேரமாவது வாக்கிங் செல்லுங்கள்.

அதை விட முக்கியமான விஷயம் உங்களை எப்போதும் ஹைட்ரேட்டடாக வைத்திருப்பது அவசியம்.அதற்காக வயிறு முட்டும் அளவிற்கு தண்ணீர் குடிக்க வேண்டிய அவசியமில்லை.

காலில் பிடிப்பு ஏற்பட்டால் :

காலில் பிடிப்பு ஏற்பட்டால் :

கர்ப்பமாக இருக்கும் போது காலில் பிடிப்பு ஏற்படுவது ஒன்று பெரிய விஷயமல்ல, அதனால் இந்தப் பிரச்சனை ஏற்பட்டதும் பதட்டமடைய வேண்டாம். ரிலாக்ஸாக உட்காருங்கள்.

முடிந்தால் காலை நீளமாக நீட்டி ரத்த ஓட்டம் அதிகரிக்க வழி செய்திடுங்கள். உங்களால் முடிந்தால் லேசாக மசாஜ் செய்யலாம். ஹாட் பேக் ஒத்தடம் கூட கொடுக்கலாம்.

மிகவும் அரிதான வகையில் சிலருக்கு காலில் ரத்தக்கட்டு ஏற்படலாம். காலில் அப்படியான அறிகுறிகள் தெரிந்தால் நீங்கள் உடனடியாக மருத்துவரைச் சந்திப்பது நல்லது.

ரத்த ஓட்டத்தை சீராக்க வேறு என்னவெல்லாம் செய்யலாம். குறிப்பாக என்ன உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

கிரீன் டீ

கிரீன் டீ

இதில் ப்ளேவனாய்டு, பாலிபீனால்ஸ் மற்றும் கேட்டச்சின் போன்றவை உள்ளன. இவை ரத்த நாளங்களை விரிவடையச் செய்து, ரத்த ஓட்டம் தங்கு தடையின்றி ஓட உதவுபவை.

இதனால் ரத்த ஓட்டம் சீராக்கும். எனவே, தினமும் ஒரு கப் கிரீன் டீ குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

பூண்டு :

பூண்டு :

பூண்டை `ரத்தத்தைச் சுத்திகரிக்கக்கூடிய டானிக்' என்றே சொல்லலாம். இதைச் சமையலில் சேர்த்துக்கொண்டால், உணவுக்கு நறுமணத்தையும் சுவையையும் கூட்டும். அதோடு, கூடுதல் பலனாக ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் உதவும்.

இரும்புச்சத்துள்ள உணவுகள் :

இரும்புச்சத்துள்ள உணவுகள் :

இரும்புச்சத்துள்ள உணவுகளை சாப்பிட்டால், ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். உடல் உறுப்புகளுக்குத் தேவையான ஆக்ஸிஜனை வழங்கக்கூடியது ஹீமோகுளோபின்.

எனவே, உடல் உறுப்புகளுக்கு ஆற்றல் கிடைக்கும். தானியங்கள், கீரைகள், பருப்புகள், இறைச்சி மற்றும் பீன்ஸ் போன்ற இரும்புச்சத்து நிறைந்தவற்றை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.

மிளகு :

மிளகு :

உணவுப் பொருள்களில் காரச் சுவைக்கு சேர்க்கப்படும் மிளகு, உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கக்கூடியது. இதை அன்றாடம் ஏதேனும் ஓர் உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டால், ரத்த நாளங்கள் விரிவடைந்து, ரத்த ஓட்டம் உடல் முழுவதற்கும் செல்லும்.

தக்காளி :

தக்காளி :

உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க, லைகோபைன் நிறைந்த தக்காளியை உணவில் அன்றாடம் சேர்த்துக்கொள்ளலாம். இதில் உள்ள 'லைகோபைன்' ரத்த ஓட்டத்தை சீராக்கும்.

நட்ஸ் :

நட்ஸ் :

பாதாம், முந்திரி, பிஸ்தா போன்றவற்றில் வைட்டமின் பி3 என்னும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் சத்துகள் நிறைவாக உள்ளன.

டார்க் சாக்லேட் :

டார்க் சாக்லேட் :

டார்க் சாக்லேட்டில் உள்ள கோகோ, ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச்செய்யும்' என்று பல்வேறு ஆய்வுகள் சொல்கின்றன. டார்க் சாக்லெட்டுகளை சாப்பிடுவதும், ரத்த ஓட்டம் சிறக்க நல்லது.

 உடற்பயிற்சி :

உடற்பயிற்சி :

சைக்கிளிங், ரன்னிங், வாக்கிங், எக்சர்சைஸ் போன்ற ஏதாவது ஒரு உடற்பயிற்சியைச் செய்வது ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும்.

இவை தவிர,நாற்காலியில் அமர்ந்துகொண்டு தண்ணீர் பாட்டிலை காலால் உருட்டுதல், ஆரஞ்சுத் தோலை உள்ளங்கையில் வைத்து அழுத்தமாகத் தேய்த்தல்,

அதிகாலையில் படுக்கையைவிட்டு எழுந்தவுடன் உள்ளங்கையை சில முறை தேய்த்துக்கொள்வது, மசாஜ் செய்வது... போன்ற சாதாரண நடவடிக்கைகள்கூட தற்காலிகமாக ரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Causes And Treatment For Leg Cramps During Pregnancy

Causes And Treatment For Leg Cramps During Pregnancy
Story first published: Friday, December 29, 2017, 10:05 [IST]