கருச்சிதைவு ஏற்படப் போகிறது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்!

Posted By:
Subscribe to Boldsky

கர்ப்ப காலத்தில் பெண்கள் கவனமாக இருக்க வேண்டும். முக்கியமாக கர்ப்பத்தின் ஆரம்ப மூன்று மாத காலத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஏனெனில் இக்காலத்தில் பெண்களுக்கு எளிதில் கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்புள்ளது. மேலும் ஒரு பெண்ணிற்கு கருச்சிதைவு ஏற்படும் அபாயத்தை அறிவது என்பது சற்று கடினம்.

Signs And Symptoms Of Miscarriage You Need To Watch Out For!

ஏனென்றால் ஒவ்வொரு பெண்ணிற்கும் அதற்கான அறிகுறிகள் வேறுபடும். இங்கு கருச்சிதைவிற்கான அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த அறிகுறிகள் தெரிந்தால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இரத்தப்போக்கு

இரத்தப்போக்கு

கருச்சிதைவிற்கான முதல் அறிகுறி இரத்தப்போக்கு. சில நேரங்களில் கர்ப்பத்தின் ஆரம்ப காலத்தில் கரு உருவாவதால் இரத்தக்கசிவு ஏற்படுவது சாதாரணம். ஆனால் தொடர்ச்சியாக இரத்தக்கசிவு ஏற்பட்டால், சற்று தாமதிக்காமல் மருத்துவரை அணுகுங்கள்.

அடிவயிற்று வலி

அடிவயிற்று வலி

இது மற்றொரு அறிகுறி. கர்ப்ப காலத்தில் அடிவயிற்றில் கடுமையான வலியை உணர்வதோடு, இரத்தக்கசிவும் ஏற்பட்டல், அது கருச்சிதைவு ஏற்பட்டுள்ளதற்கான அறிகுறிகளுக்கு ஒன்றாகும். இம்மாதிரியான நேரத்தில் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

யோனி கசிவு

யோனி கசிவு

யோனியில் இருந்து வெள்ளைக் கசிவு ஏற்பட்டால், அது கருச்சிதைவு ஏற்படப் போவதற்கான ஆரம்ப அறிகுறியாகும். அதுவும் இந்த வெள்ளைப்படிதல் இரத்தக்கட்டிகளுடனும், துர்நாற்றத்துடனும் இருந்து, யோனியில் அரிப்புக்களை ஏற்படுத்தினால், அது கருச்சிதைவிற்கான அறிகுறியாகும்.

கருப்பை சுருக்கங்கள்

கருப்பை சுருக்கங்கள்

கர்ப்ப காலத்தின் ஆரம்பத்தில் கருப்பை சுருக்கங்கள் ஏற்பட்டால், அது கருச்சிதைவிற்கான அறிகுறிகளுள் ஒன்றாகும். இம்மாதிரியான நேரத்தில் சற்றும் தாமதிக்காமல் மருத்துவரை சந்திக்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Signs And Symptoms Of Miscarriage You Need To Watch Out For!

Here are some signs and symptoms of miscarriage you need to watch out for. Read on to know more...
Story first published: Thursday, October 20, 2016, 13:30 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter