இரண்டாம் குழந்தை பெற்றுக் கொள்ள நினைக்கும் கணவன், மனைவி கவனத்திற்கு!

Posted By:
Subscribe to Boldsky

இரண்டாம் குழந்தை பெற்றுக் கொள்ளும் முன்னர், பொருளாதாரத்தில் இருந்து மனைவியின் ஆரோக்கியம் வரை பல விஷயங்களில் நீங்கள் கவனம் கொள்ள வேண்டும். முன்பே, சில திட்டங்கள் வகுக்க வேண்டும்.

எந்த ஒரு கட்டத்திலும், இரண்டாம் குழந்தை பெற்றுக் கொள்ளும் திட்டம் உங்கள் முதல் குழந்தையை பாதிக்காத வண்ணம் இருக்க வேண்டும்.

வயது வித்தியாசம், இருவரின் ஆரோக்கியத்திலும் சரியாக கவனம் கொள்ள முடியுமா?, இதனால், யாரவது ஒருவரின் வளர்ச்சி பாதிக்கப்படுமா, என பலவற்றில் நீங்கள் இருவரும் கலந்தாலோசித்த பிறகு இரண்டாம் குழந்தைக்கு திட்டமிடுதல் நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உடல்நலம்!

உடல்நலம்!

இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளும் முன்னர் மனைவியின் உடல்நிலை மற்றும் ஆரோக்கியத்தை மனதில் கொள்ள வேண்டும். ஏனெனில், உடல் ஆரோக்கியம் குறைவாக அல்லது சரியான இடைவேளை இன்றி அடுத்த குழந்தைக்கு திட்டமிடுதல், தாய், சேய் இருவரையும் பாதிக்கும் செயலாகும்.

மருத்துவர்!

மருத்துவர்!

35 வயதுக்கு மேல் இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்ள திட்டமிட்டால், முதலில் உங்கள் மகப்பேறு மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக்கொள்ளுங்கள். 35 வயது அல்லது நாற்பதை தொடும் நேரத்தில் இரண்டாம் குழந்தை பெற்றுக் கொள்வது சரியான முயற்சி அல்ல.

பொருளாதாரம்!

பொருளாதாரம்!

இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்வது உங்கள் பொருளாதாரம் மற்றும் முதல் குழந்தையின் படிப்பு, வளர்ச்சி போன்றவற்றை பாதிக்குமா, இல்லையா என்பதை யோச்சித்துக் கொள்ளுங்கள்.

வயது இடைவேளை!

வயது இடைவேளை!

முதல் குழந்தைக்கும், இரண்டாவது குழந்தைக்கும் வயது இடைவேளை இருக்க வேண்டியது அவசியம். ஓரிரு வயதிற்குள் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ள முயற்சிப்பது. இருவரின் வளர்ச்சி மற்றும் நலன் மீது அக்கறை எடுத்துக் கொள்ள நேரம் போதாமல் போகலாம்.

எனவே, ஓர் குழந்தை ஒரளவு வளர்ந்த பிறகு இரண்டாம் குழந்தை பெற்றுக் கொள்வது சிறந்தது.

3-5!

3-5!

இரண்டாம் குழந்தைக்கும், முதல் குழந்தைக்கும் மூன்றில் இருந்து ஐந்து வயது வரை வயது வித்தியாசம் இருப்பது நல்லது. இது, இருவரின் வளர்ச்சி மற்றும் முதிர்ச்சிக்கு உகந்தது. மேலும், அதிக வயதி வித்தியாசமும் விட வேண்டாம்.

ஆரோக்கியம்!

ஆரோக்கியம்!

மூன்று வயது வரை குழந்தைகளுக்கு ஏதேனும், ஆரோக்கிய பிரச்சனைகள் வந்துக் கொண்டே தான் இருக்கும். எனவே, மூன்று வயது வித்தியாசம் விடுவது தான் சிறந்தது. இரு குழந்தைகளின் ஆரோக்கியத்தின் மீதும் கவனம் செலுத்த இது உதவும்.

பாகுபாடு!

பாகுபாடு!

ஆண், பெண், அன்பு செலுத்துதல் என எவற்றிலும் முதல் குழந்தை மற்றும் இரண்டாம் குழந்தைக்கு பாகுபாடு காட்ட வேண்டாம். இது, அவர்களை ஒருவரை ஒருவர் வெறுக்க முக்கிய காரணியாக அமையும். மனதளவில் தீய தாக்கத்தை உண்டாக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Seven Best Tips For Parents Planning A Second Baby!

Seven Best Tips For Parents Planning A Second Baby, read here in tamil.
Story first published: Thursday, June 30, 2016, 16:44 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter