தைராய்டு இருக்கும் கர்ப்பிணியா நீங்கள்? கட்டாயம் இத படிங்க...

Posted By:
Subscribe to Boldsky

இன்றைய காலத்தில் பெண்கள் அதிகம் பாதிக்கப்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் தைராய்டு. அதிலும் ஹைப்போ தைராய்டிசம் என்னும் குறைவான அளவில் தைராய்டு ஹார்மோன் சுரக்கப்படும் பிரச்சனையால் தான் பெண்கள் கஷ்டப்படுகிறார்கள்.

ஹைப்போ தைராய்டிசத்திற்கான இயற்கை முறையிலான 15 சிகிச்சைகள்!!!

ஒரு பெண்ணின் இரத்தத்தில் தைராய்டு ஹார்மோனானது குறைவாக இருந்தால், அதனால் உடலின் மெட்டபாலிசம் குறைந்து, அதனால் உடல் பருமனை அடையக்கூடும். அதுமட்டுமின்றி, கூந்தல் உதிர்தல், வறட்சியான சருமம், வீங்கிய முகம், கவனச்சிதறல், குளிர்ச்சியாக அல்லது வெப்பமாக இருப்பது போல் உணர்வது, முறையற்ற மாதவிடாய் சுழற்சி, மனநிலையில் ஏற்றத்தாழ்வு போன்ற பல பிரச்சனைகளை சந்திக்கக்கூடும்.

கர்ப்ப காலத்தில் தைராய்டு வந்தால் ஏற்படும் பக்க விளைவுகள்!!!

குறிப்பாக கர்ப்பிணிகளுக்கு ஹைப்போ-தைராய்டிசம் இருந்தால், கர்ப்ப காலமானது மிகவும் கஷ்ட காலமாக இருக்கும். மேலும் இது கருவிற்கு மட்டுமின்றி, தாய்க்கும் பல பிரச்சனைகளைக் கொடுக்கும். அதிலும் கருச்சிதைவு ஏற்படவோ அல்லது மூளையின் வளர்ச்சியில் குறைபாட்டையோ ஏற்படுத்தும்.

தைராய்டு உள்ளவர்கள் உடல் எடை குறைய மேற்கொள்ள வேண்டிய டயட்!!!

எனவே ஹைப்போ-தைராய்டிசம் இருந்தால், உடனே மருத்துவரை அணுகுவதோடு, அதனை சரியான அளவில் பராமரித்து வர வேண்டும். முக்கியமாக தைராய்டு பிரச்சனை ஒருமுறை வந்தால், அதனை முற்றிலும் குணப்படுத்த முடியாது. ஆனால் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்.

தைராய்டு முற்றிவிட்டது என்பதற்கான சில அறிகுறிகள்!!!

எனவே தமிழ் போல்ட் ஸ்கை ஹைப்போ தைராய்டிசம் கொண்ட கர்ப்பிணிகளுக்கான சில இயற்கை வைத்தியங்களைக் கொடுத்துள்ளது. அதைப் பார்ப்போமா!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய்

2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெயை 1 டம்ளர் பாலில் சேர்த்து கலந்து, இரவில் படுக்கும் முன் குடிக்க வேண்டும். இப்படி செய்து வந்தால், தைராய்டு ஹார்மோனின் உற்பத்தி அதிகரித்து, தைராய்டு ஹார்மோனை சீராகப் பராமரிக்கலாம்.

முட்டை மற்றும் கேரட்

முட்டை மற்றும் கேரட்

முட்டையில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. இது தைராய்டு சுரப்பின் செயல்பாட்டை சீராக வைக்க உதவும். அதேப்போல் கேரட், பூசணிக்காய் போன்றவற்றை உட்கொண்டு வருவதன் மூலமும் தைராய்டு சுரப்பின் செயல்பாட்டை அதிகரிக்கலாம். ஆனால் இவற்றை கர்ப்ப காலத்தில் அளவுக்கு அதிகமாக சாப்பிடக்கூடாது.

ப்ராக்கோலி, முட்டைக்கோஸ் மற்றும் கேல் வேண்டாம்

ப்ராக்கோலி, முட்டைக்கோஸ் மற்றும் கேல் வேண்டாம்

இந்த காய்கறிகளில் எல்லாம், தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டில் இடையூறை ஏற்படுத்தும். அதுவும் தைராய்டு சுரப்பி அயோடினை உறிஞ்சாதவாறு செய்து, தைராய்டு ஹார்மோனின் கூட்டுச்சேர்க்கையைத் தடுக்கும்.

மூலிகை தேநீர்

மூலிகை தேநீர்

இஞ்சி டீ அல்லது பட்டை டீ குடித்து வந்தால், தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை அதிகரிக்கலாம். அதே சமயம் காபி, டீ மற்றும் கார்போனேட்டட் பானங்கள் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

முழு கோதுமை

முழு கோதுமை

முழு கோதுமையால் செய்யப்பட்ட ஓட்ஸ், பார்லி, கோதுமை பிரட், செரில் போன்றவற்றை உட்கொண்டு வருவதன் மூலம், தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை மேம்படுத்தலாம். அதே நேரம் சுத்திகரிக்கப்பட்ட வெள்ளை பிரட், சாதம் போன்றவற்றை குறைத்துக் கொள்ள வேண்டும்.

சாலட்

சாலட்

ஹைப்போ தைராய்டிசம் கொண்ட பெண்கள், டயட்டில் முளைக்கட்டிய தானியங்கள், வெள்ளரிக்காய் மற்றும் கேரட் கொண்டு செய்யப்பட்ட சாலட்டுகளை சாப்பிடுவது நல்லது. ஏனெனில் இந்த சாலட்டானது தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்தியை தூண்டிவிடும்.

காட் லிவர் ஆயில்

காட் லிவர் ஆயில்

இதில் உள்ள ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, தைராய்டு சுரப்பியின் இயக்கத்தை சீராக பராமரிக்க உதவும். இந்த காட் லிவர் ஆயிலானது மாத்திரை வடிவில் விற்கப்படுகிறது. ஆனால் இந்த மாத்திரையை எடுக்கும் முன், மருத்துவரிடம் கலந்தாலோசிக்க வேண்டும்.

வைட்டமின் டி

வைட்டமின் டி

வைட்டமின் டி குறைபாடு ஏற்பட்டால், தைராய்டு பிரச்சனைகள் ஆரம்பமாகும். எனவே அதிகாலையில் எழுந்து சூரியனிடமிருந்து கிடைக்கும் வைட்டமின் டியை 15 நிமிடம் நின்று தவறாமல் பெற்று வாருங்கள். இதனால் வைட்டமின் டி அதிகரிப்பதோடு, கால்சியம் சத்தை உடல் உறிஞ்சி எலும்புகள் மற்றும் பற்களின் ஆரோக்கியம் மேம்படும்.

வைட்டமின் பி காம்ப்ளக்ஸ்

வைட்டமின் பி காம்ப்ளக்ஸ்

வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டிற்கு மிகவும் இன்றியமையாதது. இத்தகைய வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் முழு தானியங்கள், பச்சை காய்கறிகள், முட்டைகள் போன்றவற்றில் அதிகம் இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Home Remedies To Cure Thyroid During Pregnancy

Home remedies to cure thyroid during pregnancy works effectively. You need to understand the effects of thyroid when you are pregnant.
Subscribe Newsletter