For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கர்ப்பத்தின் மூன்று மாத காலத்தில் கணவன் மனைவிக்கு இடையேயான தொடர்பை வலிமைப்படுத்த சில டிப்ஸ்....

By Ashok CR
|

கர்ப்பமான முதல் மூன்று மாத காலம் என்பது கணவன் மனைவி இருவருக்கும் மிக தீவிரமான நேரமாகும். இருப்பினும் பெண்களை போல் அல்லாமல் ஆண்கள் இதனை வேறு விதமாக அனுபவிப்பார்கள். ஆனால் ஒரு ஆணாக, உங்கள் உறவிற்கு, கர்ப்பத்திற்கு மற்றும் அதையும் தாண்டிய விஷயங்களுக்கு வலிமையான அஸ்திவாரத்தை ஏற்படுத்த இது ஒரு பொன்னான வாய்ப்பாகும்.

கருத்தரிக்க விரும்பும் தம்பதியர் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 10 விஷயங்கள்!

கர்ப்ப காலத்தின் போது தம்பதிகளுக்கு இடையேயான தொடர்பு மிகுந்த முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது என ஆராய்ச்சிகள் கூறுகிறது. கர்ப்ப கால பதற்றத்திற்கு மிகப்பெரிய காரணியாக இருப்பது தன் கணவனுடனான அப்பெண்ணின் உறவே என ஸ்கேன்டினாவியாவில் நடத்தப்பட்ட மிகப்பெரிய ஆய்வு கண்டறிந்துள்ளது. கர்ப்ப காலம் மற்றும் பிரசவத்திற்கு பிந்தைய காலத்தில் ஏற்படும் மனநிலை கோளாறுகளுக்கு இடையேவும் மிகப்பெரிய தொடர்பு உள்ளது.

கர்ப்பத்தின் 8 ஆவது மாதத்தில் உடலுறவில் ஈடுபடுவது பாதுகாப்பானதா?

இதை மனதில் வைத்து, கீழே கூறப்பாகும் 5 டிப்ஸ்கள், உங்கள் இருவருக்கும் இடையே வலிமையான தொடர்பை ஏற்படுத்தும். மேலும் அதனை உறுதியாக நிலைத்திடவும் செய்யும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நீங்கள் நம்பகத்தன்மையுள்ளவர் என்பதை உங்கள் மனைவிக்கு காட்டுங்கள்

நீங்கள் நம்பகத்தன்மையுள்ளவர் என்பதை உங்கள் மனைவிக்கு காட்டுங்கள்

இது ஒரு முக்கிய நேரமாகும். உங்கள் மனைவி பாதிக்கப்படக்கூடிய உணர்வை இந்த நேரத்தில் பெறுவதால், உங்கள் ஆதரவை எதிர்ப்பார்ப்பார்கள். உங்களை சார்ந்திருந்தால் உங்கள் இருவருக்குமான நெருக்கத்தில் மாயங்கள் நிகழும் என்பதை அவருக்கு உணர்த்த வேண்டும். அப்படி செய்வதற்கு வீட்டில் இருந்து அவரின் தேவையை கவனிக்க வேண்டும், அதே நேரம் வருவாய்க்காக உழைக்கவும் வேண்டும். உணர்ச்சிவசப்படும் போது அவர் அருகில் இருக்க வேண்டும் என எதிர்ப்பார்ப்பார். அவர் சொல்வதை நீங்கள் அமைதியாக கேட்க விரும்புவார். அவருக்காக எந்நேரத்திலும் நீங்கள் உள்ளீர்கள் என்ற நம்பிக்கையை எதிர்ப்பார்ப்பார். இவையனைத்தும் மொத்தமாக பெரிய சுமையாக தெரியலாம். ஆனால் இதை சரியாக புரிந்து கொண்டு செயல்பட்டால், மீதமுள்ள வாழ்க்கைப் பயணத்தில் உங்கள் உறவு ஆழமாகவும், மென்மையாகவும் தொடரும்.

மாற்றத்திற்கு தயார்படுத்திக் கொள்ளுங்கள்

மாற்றத்திற்கு தயார்படுத்திக் கொள்ளுங்கள்

கர்ப்பமான முதல் மூன்று மாத காலத்தில், ஒரு பெண் அதிகமாக உணர்ச்சிவசப்படுவது இயல்பு தான். தன் உணர்ச்சிகள் மற்றும் அதிருப்திகளை சமயத்தில் உங்கள் மீது திருப்பலாம். அது தனிப்பட்டு உங்கள் மீது காட்டும் வெறுப்பல்ல. ஒரு வேளை அது உங்களால், நீங்கள் செய்த காரியத்தால் ஏற்பட்ட அதிருப்தி என்றாலும் கூட பரவாயில்லை. அவர் உங்கள் குழந்தையை சுமக்கிறார். அதனால் அவருடைய தேர்வின் மீது நம்பிக்கை வையுங்கள். அதனால் உங்கள் மீது அவர் எரிந்து விழும் போது அதனை ஏற்றுக் கொள்ளுங்கள். அவருக்காக நீங்கள் மாறுவதற்கும் தயாராக இருக்க கற்றுக் கொள்ளுங்கள்.

இணங்கி நடந்து கொள்ளுங்கள்

இணங்கி நடந்து கொள்ளுங்கள்

உங்கள் மனைவி ஒரு நாள் மிக உணர்ச்சிவசப்படலாம். மறுநாள் முழுமையாக மாற்றி நடக்கலாம். ஏன் அடுத்த சில மணிநேரங்களிலேயே கூட அவரின் மனநிலை மாறலாம். முன்கூட்டியே உண்டான எண்ணங்களை ஓட விடுங்கள். அவர் தற்போதுள்ள மனநிலைக்கு ஏற்ப அன்பு காட்டும் வகையில் அவரை நெஞ்சோடு அணைத்துக் கொள்ள வேண்டும். உங்களுக்கு தற்போது சரியாக நடந்தது அடுத்த முறை நடக்க வேண்டும் என்றில்லை. அதனால் தொடர்ச்சியான முறையில் ஆராய்ந்து, அதற்கேற்ப இணங்கி நடந்து கொள்ளுங்கள். அவருடைய மாற்றங்களை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு அவரை கையாளுங்கள்.

நிதியை சமாளிக்க வேண்டும்

நிதியை சமாளிக்க வேண்டும்

அவரை பார்த்துக் கொள்வது அவசியம் தான். அதோடு சேர்த்து நிதி சார்ந்த விஷயத்திலும் அவருக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும். அனைத்து வித பைகளை கட்டுவது மற்றும் வீட்டு செலவுகளை பார்த்துக் கொள்வது போன்ற பொறுப்புகளை எடுத்துக் கொள்ள வேண்டும். நிதி சார்ந்து குடும்பம் எப்படி சீராக ஓடும் என்பதில் தெளிவான பார்வை வேண்டும். நிதி விஷயத்தில் எல்லாம் பிரச்சனை இல்லை என்பதை அவர் உணர்ந்தால், அவருடைய மன அழுத்தம் ஓரளவிற்கு குறைந்து விடும்.

கர்ப்பத்தைப் பற்றிய தோற்றத்தை ஏற்படுத்துங்கள்

கர்ப்பத்தைப் பற்றிய தோற்றத்தை ஏற்படுத்துங்கள்

கர்ப்பம் எப்படி இருக்க வேண்டும், அதாவது உங்கள் மனைவி எப்படி உணர வேண்டும் என்பதை பற்றிய தோற்றத்தை ஏற்படுத்துங்கள். தழுவுதல், காதலித்தல், விஷேச அக்கறை போன்றவைகள் எல்லாம் இதற்கான தொடக்க புள்ளிகளாகும். அவருக்கும் வயிற்றில் உள்ள குழந்தைக்கும் நீங்கள் 100% ஆதரவாக இருந்து, அவருக்கு துணையாக இருப்பதை அவர் உணர்ந்தால், உங்கள் உறவு இன்னமும் ஆழமடையும்.

குறிப்பு

குறிப்பு

மேற்கூறிய ஐந்து டிப்ஸ்களும் உங்களை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லும். உங்கள் மனைவி முதல் முறை கர்ப்பமாகும் போதும், அந்த மாற்றத்தின் போதும், அவருக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி உறவை மேம்படுத்துவது மிகவும் அவசியமாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Five Keys To Staying Connected In The First Trimester

The first trimester brings a massive upheaval of emotions and physical changes – here's how to keep connected with your partner during pregnancy.
Story first published: Monday, June 29, 2015, 16:33 [IST]
Desktop Bottom Promotion