வயிற்றில் வளர்வது ஆண் குழந்தையா? பெண் குழந்தையா? என்று தெரிந்து கொள்ள ஆசையா?

Posted By:
Subscribe to Boldsky

என்ன தான் மருத்துவத் துறையில் பல முன்னேற்றங்கள் இருந்தாலும், இந்தியாவில் மட்டுமின்றி உலகின் பல பகுதிகளிலும் மூடநம்பிக்கைகள் இருந்து கொண்டு தான் உள்ளது. அது கடவுள் விஷயத்தில் மட்டுமின்றி, வயிற்றில் வளரும் குழந்தை என்னவென்று எந்த மருத்துவ பரிசோதனையும் இல்லாமல் கண்டுபிடிப்பதிலும் உள்ளது.

இரட்டைக் குழந்தைகள் எப்படி பிறக்கிறார்கள்?

மேலும் வயிற்றில் வளரும் குழந்தை ஆணா, பெண்ணா என்று கண்டறிய சில சோதனைகளை வீட்டிலேயே பல பெண்கள் மேற்கொண்டுள்ளார்கள். மேலும் அப்படி மேற்கொண்ட சோதனைகளின் முடிவில் தெரிய வந்த குழந்தையையும் பெற்றெடுத்துள்ளார்கள். இதில் ஒரு ஆச்சரியம் என்னவெனில், இப்பெண்கள் மேற்கொண்ட சோதனைகள் எதுவும் ஆராய்ச்சியில் நிரூபிக்கபடவில்லை என்பது தான்.

வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை தான் என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்!!!

இருப்பினும் வீட்டில் மேற்கொள்ளும் சோதனைகளை முடிவாக யாரும் நினைக்க வேண்டாம். வேண்டுமெனில் ஓர் ஆர்வத்தில் விளையாட்டிற்காக மேற்கொள்ளலாம். சரி, இப்போது வயிற்றில் வளர்வது என்ன குழந்தை என்பதை வீட்டிலேயே கண்டறிய உதவும் சோதனைகளைப் பார்ப்போமா!!!

குழந்தை அழகா.. வெள்ளையா.. பிறக்கணுமா? அப்படின்னா இந்த உணவுகளை சாப்பிடுங்க...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சிவப்பு முட்டைக்கோஸ் சோதனை

சிவப்பு முட்டைக்கோஸ் சோதனை

சிவப்பு முட்டைக்கோஸ் வாங்கி, அதனை பொடியாக நறுக்கி, கொதிக்கும் நீரில் போட்டு 10 நிமிடம் கொதிக்க விட்டு, அடுப்பில் இருந்து இறக்கிக் கொள்ள வேண்டும். பின் காலையில் முதன் முதலில் வெளியேற்றிய சிறுநீரை, அதற்கு சரிசமமாக ஊற்ற வேண்டும். அப்படி ஊற்றிய பின், அதன் நிறமானது பிங்க் அல்லுது சிவப்பு நிறத்தில் மாறினால், ஆண் குழந்தை என்று அர்த்தம். அதுவே ஊதா நிறத்தில் மாறினால் பெண் குழந்தை என்று அர்த்தம்.

பேக்கிங் சோடா சோதனை

பேக்கிங் சோடா சோதனை

காலையில் வெளியேற்றிய சிறுநீரை ஒரு கப்பிலும், மற்றொரு கப்பில் பேக்கிங் சோடாவையும் வைத்துக் கொள்ளவும். பின் சிறுநீரை பேக்கிங் சோடாவில் ஊற்றும் போது, நுரை போன்று பொங்கினால், ஆண் குழந்தை என்று அர்த்தம். அதுவே எந்த ஒரு வினைபுரியாமல் இருந்தால், பெண் குழந்தை என்று அர்த்தம்.

மோதிர சோதனை

மோதிர சோதனை

மோதிரத்தை ஒரு கயிற்றில் கட்டி, அதனை ஒரு நீளமான குச்சியில் கட்டி, வயிற்றிற்கு மேல் காட்டும் போது, மோதிரம் வட்டமாக சுழன்றால் பெண் குழந்தை என்றும், அதுவே பக்கவாட்டில் ஊஞ்சலாடினால் ஆண் குழந்தை என்றும் அர்த்தம்.

மாயன் சோதனை

மாயன் சோதனை

இந்த சோதனையானது, நீங்கள் கருத்தரித்த வயது மற்றும் எந்த வருடத்தில் கருத்தரித்தீர்களோ, அவற்றை கூட்டும் போது இரண்டு எண்களில் ஒன்று இரட்டையாகவும், மற்றொன்று ஒற்றைப் படை எண்ணாக இருந்தால், அது ஆண், அதுவே இரண்டும் ஒற்றை அல்லது இரட்டைப் படை எண்ணாக இருந்தால், அது பெண். உதாரணமாக, நீங்கள் கருத்தரித்த வயது 24 மற்றும் கருத்தரித்த வருடம் 2014 என்று வைத்துக் கொள்வோம். அப்படியெனில், 2+4+2+0+1+4= 13 (இரண்டும் ஒற்றை- பெண் குழந்தை)

சுவை

சுவை

கர்ப்பமாக இருக்கும் போது இனிப்பு பொருளின் மீது ஆசை எழுந்தால், பெண் குழந்தை என்று அர்த்தம். அதுவே புளிப்பான, காரமான அல்லது உப்பு நிறைந்த உணவுப் பொருட்களின் மீது ஆசை எழுந்தால் ஆண் குழந்தை என்று அர்த்தம்.

முகப்பரு

முகப்பரு

பருக்கள் வருவதற்கு காரணம் ஹார்மோன்கள் தான் காரணம். ஆனால் கர்ப்ப காலத்தில் வயிற்றில் பெண் குழந்தை இருந்தால் தான் பருக்கள் வரும் என்ற நம்பிக்கை பெண்களின் மத்தியில் உள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Early Gender Prediction Methods

Here are some early gender prediction methods. Take a look...
Please Wait while comments are loading...
Subscribe Newsletter