Latest Updates
-
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 6 ராசிக்காரங்க அடுத்த 1 மாதம் கவனமா இருக்கணும்! -
சைக்கோவாக நடந்து கொள்ளும் 4 ஆபத்தான ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/2 மூடி தேங்காய் இருந்தா.. இத ஒரு டைம் ட்ரை பண்ணுங்க.. 15 நாள் வரை வெச்சு சாப்பிடலாம்..
கர்ப்ப காலத்தில் தைராய்டு வந்தால் ஏற்படும் பக்க விளைவுகள்!!!
பொதுவாக பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திப்பார்கள். அதில் கால் வீக்கமடைதல், குமட்டல், மயக்கம், சோர்வு போன்றவை முக்கியமானவை. ஆனால் எப்போது கர்ப்ப காலத்தில் ஆரோக்கிய பிரச்சனைகளானது தீவிரமடைகிறதோ, அப்போது வயிற்றில் வளரும் சிசுவிற்கும் அவை தாக்கத்தை ஏற்படுத்தும். அதில் கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் ஒரு முக்கியமான பிரச்சனை தான் தைராய்டு.
தைராய்டு ஹார்மோனானது ஏற்றதாழ்வுடன் இருந்தால், அவை நிச்சயம் வயிற்றில் வளரும் குழந்தைக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். அதிலும் கர்ப்பமாவதற்கு முன்பே தைராய்டு பிரச்சனை இருந்தால், பின் கர்ப்பமடைந்த பின் அவை தீவிரமடைவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. அதுவும் தைராய்டு சுரப்பி சுரக்கும் ஹார்மோனானது அதிகம் இருந்தாலும் சரி அல்லது குறைவாக இருந்தாலும் சரி, அவை குழந்தையை நிச்சயம் பாதிக்கும்.
இங்கு கர்ப்ப காலத்தில் தைராய்டு இருந்தால், அவை குழந்தையை எப்படியெல்லாம் தாக்கும் வாய்ப்பு உள்ளது என்று கொடுக்கப்பட்டுள்ளது.

கருச்சிதைவு
கர்ப்பத்தின் முதல் மூன்று காலத்தில் இரத்தத்தில் உள்ள தைராய்டு ஹார்மோனானது அளவுக்கு அதிகமாக இருந்தால், கருச்சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே அப்போது தவறாமல் போதிய மருத்துவத்தை மேற்கொண்டு தைராய்டு ஹார்மோனை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளுங்கள்.

மனநிலை பாதிப்பு
ஒருவேளை தைராய்டு ஹார்மோனானது போதிய அளவில் சுரக்காமல் இருந்தால், அவை குழந்தையின் மனநல வளர்ச்சியானது பாதிக்கப்படும். ஆகவே தைராய்டு இருப்பவர்கள் கர்ப்ப காலத்தில் போதிய சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.

குறைப்பிரசவம்
சில நேரங்களில் தைராய்டு சுரப்பியானது அளவுக்கு அதிகமாக ஹார்மோனை சுரக்க நேரிட்டால், அவை ஒரு கட்டத்தில் இரத்த அழுத்தத்தை அதிகரித்துவிடும். இப்படி இரத்த அழுத்தம் அதிகரித்தால், அவை கருப்பையில் தாக்கத்தை ஏற்படுத்தி, குறைப்பிரசவத்திற்கு வழிவகுக்கும்.

குழந்தையின் தைராய்டு சுரப்பி பாதிக்கப்படும்
குறிப்பாக கர்ப்ப காலத்தில் தைராய்டு பிரச்சனைக்கு சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது, தைராய்டிற்கு எடுத்து வரும் மருந்துகளில் உள்ள ரேடியோ ஆக்டிவ் அயோடின், சில நேரங்களில் குழந்தையின் தைராய்டு சுரப்பிக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே கர்ப்பமான பின்னர் மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை மட்டும் எடுத்து வாருங்கள்.

குறிப்பு
தைராய்டு கர்ப்ப காலத்தில் வந்தால், அவை வயிற்றில் வளரும் குழந்தையின் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே தைராய்டை சாதாரணமாக எண்ணாமல், அதற்கு சரியான மருந்துகளை கவனமாக எடுத்து வர வேண்டும்.



Click it and Unblock the Notifications
