வயிற்றில் வளர்வது ஆணா? பெண்ணா? தெரிந்து கொள்ள ஆசையா?

Posted By:
Subscribe to Boldsky

அனைத்துப் பெற்றோர்களுக்கும் தனக்கு பிறக்கப் போகும் குழந்தை ஆணா? பெண்ணா? என்று தெரிந்து கொள்ள ஆசை அதிகம் இருக்கும். ஆனால் நம் நாட்டில் அதைத் தெரிந்து கொள்ள முடியாது. இப்படி தெரிந்து கொள்வதை நம் இந்திய சட்டம் தடை செய்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் அக்காலத்தில் பெண் குழந்தை என்றால் கள்ளிப் பால் கொடுத்து கொன்று வந்தது தான். அதுமட்டுமின்றி, இன்றைய காலத்திலும் இன்னும் சில கிராமப்புறங்களில் இந்த கொடிய செயலை செய்து வருகின்றனர்.

இரட்டைக் குழந்தைகள் எப்படி பிறக்கிறார்கள்?

இதனால் ஸ்கேன் செய்து வயிற்றில் வளரும் குழந்தையைப் பற்றி தெரிந்து கொள்ள முடியாதே தவிர, நம் முன்னோர்கள் ஒருசில அறிகுறிகளைக் கொண்டு வயிற்றில் வளரும் குழந்தை என்னவென்று கண்டுப்பிடித்து வந்தனர். மேலும் அந்த அறிகுறிகளின் படி பலருக்கு சரியான குழந்தைப் பிறந்துள்ளது. இதற்கு எவ்வித சரியான நிரூபணம் இல்லாவிட்டாலும், அந்த அறிகுறிகளைக் கொண்டு தெரிந்து கொண்டு சந்தோஷப்படலாமே!

சரி, இப்போது வயிற்றில் வளர்வது ஆணா? பெண்ணா? என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள் என்னவென்று பார்ப்போமா!!!

இரட்டையர்களைப் பற்றி நீங்கள் அறிந்திராத 5 உண்மைகள்!!!

Am I Having A Boy Or Girl?

பெண்ணின் மாதவிடாய் முடிந்த பின் ஒற்றைப்படை நாளில் உடலுறவில் ஈடுபட்டால் பெண் குழந்தை பிறக்கும். அதுவே இரட்டைப்படை நாளில் உடலுறவு கொண்டால் ஆண் குழந்தைப் பிறக்கும்.

கர்ப்பிணிகளின் வலதுப்பக்க மார்பகம் பருத்து காணப்பட்டாலோ அல்லது மார்பகத்தில் இருந்து வெளிவரும் பால் சற்று கலங்கலாக இருந்தாலோ, ஆண் குழந்தை என்று அர்த்தம்.

கர்ப்பிணிகளின் சிறுநீர் சற்று வெளிர் அல்லது அடர் மஞ்சளாக வெளியேறும். அதுமட்டுமின்றி, குழந்தை வயிற்றில் வலது பக்கத்தில் இருப்பது போன்று உணரக்கூடும். மேலும் உட்காரும் போதும் எழும் போதும் வலது கையை ஊன்றி எழக்கூடும். இப்படி இருந்தால், வயிற்றில் இருப்பது ஆண் குழந்தை.

கர்ப்ப காலத்தில் மார்பகப் பாலை ஒரு துளி எடுத்து, தண்ணீரில் விடும் போது, பாலானது மிதந்தால், வயிற்றில் இருப்பது ஆண் குழந்தை என்று அர்த்தம்.

Am I Having A Boy Or Girl?

கர்ப்பிணிகளின் இடது மார்பகம் பருத்து காணப்படுவதுடன், அதிக சோர்வுடனும், அடிக்கடி பசி எடுப்பதுடன், தின்பண்டங்கள் மீது அதிக ஆசை எழ ஆரம்பித்தால், அது வயிற்றில் பெண் குழந்தை உள்ளது என்று அர்த்தம். அதுமட்டுமின்றி, கர்ப்பிணிகள் இடது பக்கமாக கையை ஊன்றி எழுந்தால், அதுவும் பெண் குழந்தைக்கான அறிகுறிகளுள் ஒன்றாகும்.

English summary

Am I Having A Boy Or Girl?

There are many often-told tales about how to tell if a pregnant woman is carrying a boy or girl.