Latest Updates
-
வார ராசிபலன் (27 September 2026- 26 October 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்! -
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்.. -
நீங்க இந்த தேதிகளில் பிறந்தவங்களா? அப்ப 40 வயசுக்கு அப்புறம் உங்களுக்கு குபேர யோகம் தான்! -
கேரட்டை ஒருடைம் இப்படி செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
தொப்பை குறையணுமா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த பானத்தை மதிய உணவுக்கு முன் குடிங்க.. -
சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபரில் மகரம் உள்ளிட்ட 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கப்போகுது! -
ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நாளாக இருக்குமாம் -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
October 2026 Horoscope: அக்டோபர் மாதத்தில் ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன?
கர்ப்பிணிகளே! நிம்மதியான தூக்கம் வேண்டுமா? இதோ சில டிப்ஸ்...
கர்ப்பமாக இருக்கும் போது தூங்குவது என்பது மிகவும் சிரமமான ஒன்றாக இருக்கும். இவ்வாறு தூக்கத்தில் பிரச்சனை ஏற்படுவதற்கு முக்கிய காரணம் வயிறு பெரிதாவது தான். வயிறானது பெரியதாக மாறும் போது, எந்த பக்கமும் திரும்பி தூங்க முடியாது. மேலும் தூங்குவதற்கு வசதியே இருக்காது. அதுமட்டுமல்லாமல் வேறு சில காரணங்களாலும் தூங்குவதில் அவஸ்தை ஏற்படுகிறது.
அதில் அடிக்கடி சிறுநீர் வருவது, மனநிலை மாற்றம், பகல் நேரத்தில் குட்டித் தூக்கம் போடுவது, தசைப்பிடிப்புகள் போன்றவையும் ஒருவித காரணங்களாகும். ஆனால் கர்ப்பிணிகளுக்கும் போதிய அளவில் தூக்கம் வேண்டும். இதனால் வயிற்றில் வளரும் குழந்தைக்கும், தாய்க்கும் நல்லது.
கர்ப்பமாக இருக்கும் போது எவ்வளவு முயற்சி செய்தாலும் தூங்க முடியவில்லையாஈ அப்படியானால் கீழே கொடுக்கப்பட்ட சில டிப்ஸ்களைப் பின்பற்றி பாருங்கள். நிச்சயம் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம்.

தலையணையின் எண்ணிக்கையை அதிகரிக்கவும்
கர்ப்பமாக இருக்கும் போது, தூங்குவதற்கு நல்ல மென்மையான மற்றும் முதுகிற்கு உறுதுணையாக இருக்குமாறு 2 மூன்று தலையணைகளை வாங்கி தூங்குவதற்கு பயன்படுத்த வேண்டும்.

பகல் தூக்கத்தை தவிர்க்கவும்
பொதுவாக முதல் மூன்று மாதத்தில் அதிகப்படியான சோர்வு இருப்பதால், பகல் நேரத்தில் தூங்க தோன்றும். ஆனால் அப்படி தூங்கினால், இரவில் தூக்கத்தை தொலைக்க நேரிடும். ஆகவே பகல் நேரத்தில் தூங்குவதை தவிர்க்க வேண்டும்.

மன அழுத்தத்தை குறைக்க முயலவும்
கர்ப்பமாக இருக்கும் போது மன அழுத்தம் அல்லது மன நிலையில் மாற்றங்களை சந்திக்க நேரிடும். இது முற்றினால் தூக்கமின்மை ஏற்படக்கூடும். ஆகவே மன நிலையில் ஏற்படும் மாற்றங்களுள் ஒன்றான மன அழுத்தத்தை சந்திக்கும் போது, அதனைக் குறைக்கும் வண்ணம் யோகா, நடைப்பயிற்சி போன்றவற்றை மேற்கொண்டால், நிச்சயம் மன அழுத்தத்தில் இருந்து விடுபடலாம். இதனால் நல்ல தூக்கமும் வரும்.

உண்ணும் உணவை கவனிக்கவும்
தூங்கும் முன் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பால் குடித்தால், நல்ல தூக்கம் கிடைக்கும். அதுமட்டுமின்றி, கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவுப் பொருட்களாக பிரட் போன்றவற்றை சாப்பிட்டாலும், நல்ல தூக்கம் கிடைக்கும். அதுமட்டுமின்றி அத்துடன் புரோட்டீன் உள்ள உணவுகளையும் சேர்த்துக் கொண்டால், தலை வலி, வெப்ப உணர்வு, கெட்ட கனவு போன்றவையும் அகலும்.

மாலையில் ஜூஸ் மற்றும் தண்ணீரை தவிர்க்கவும்
குழந்தையும், தாயும் நன்கு ஆரோக்கியமாக இருப்பதற்கு தண்ணீர் மற்றும் நீர்ம பானங்கள் அவசியம் தான். ஆனால் அத்தகைய பானங்களை பகல் வேளையில் அதிக அளவில் குடிக்க வேண்டும். மாலை வந்தால், அவற்றின் அளவைக் குறைத்தால், இரவில் அடிக்கடி சிறுநீர் வருவதைத் தவிர்க்கலாம். இதனால் நல்ல தூக்கம் பெறலாம்.

சுடுநீர் பேக்
கர்ப்பிணிகளுக்கு தசைப்பிடிப்புக்கள் அதிகம் ஏற்படும் வாய்ப்புள்ளது. இதனாலேயே பலர் தூக்கத்தை தொலைக்கின்றனர். ஆகவே பகல் வேளையில் கால்களுக்கு சுடுநீர் பேக் கொண்டு ஒத்தடம் கொடுக்க வேண்டும். குறிப்பாக ஒத்தடம் கொடுக்கும் போது தூங்கிவிட வேண்டாம். இல்லாவிட்டால் இரவில் தூக்கத்தை தொலைத்துவிடுவீர்கள்.

வெதுவெதுப்பான நீர் குளியல்
இரவில் படுக்கும் முன், வெதுவெதுப்பான நீர் கொண்டு குளித்தால், இரவில் நல்ல தூக்கம் வரும். எப்படியெனில் வெதுவெதுப்பான நீரானது தசைகளை ரிலாக்ஸ் அடையச் செய்து, தசைப்பிடிப்புக்கள் ஏற்படாமல் தடுக்கும். எனவே நல்ல தூக்கம் வேண்டுமானால், வெதுவெதுப்பான நீர் குளியலை மேற்கொள்ளுங்கள்.

ஒரே நேரத்தில் தூங்கவும்
உடலானது ஒரு வேலையை ஒரு நேரத்தில் தொடர்ச்சியாக செய்ய ஆரம்பிக்கும் போது, உடல் கடிகாரமானது அதனை பழக்கப்படுத்திவிடும். ஆகவே தினமும் ஒரே நேரத்தில் தூங்கு செல்லுங்கள். இது கூட நல்ல தூக்கத்தைக் கொடுக்கும்.

ஜங்க் உணவுகளை தவிர்க்கவும்
ஜங்க் உணவுகளை தவிர்த்தால், நல்ல தூக்கத்தைப் பெறலாம். குறிப்பாக இரவு நேரங்களில் தவிர்க்க வேண்டும். சொல்லப்போனால், கர்ப்பிணிகள் ஜங்க் உணவுகளை முற்றிலும் தவிர்ப்பது குழந்தைக்கு நல்லது. மாறாக பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை சாப்பிட்டால், வளரும் குழந்தைக்கு மட்டுமின்றி, தாய்க்கும் நல்லது.

புகைப்பிடிப்பதை தவிர்க்கவும்
இன்றைய காலத்தில் பெண்களும் புகைப்பிடிக்கின்றனர். இத்தகைய பழக்கத்தை பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது தவிர்க்க வேண்டும். அதுமட்டுமின்றி புகைப்பிடிப்போரின் அருகில் இருப்பதையும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இதனால் கூட தூங்க முடியாமல் போகும்.



Click it and Unblock the Notifications
