For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிரசவத்துக்கு பின்னும் சும்மா சிக்குனு இருக்கணும்னா இதெல்லாம் சாப்பிடுங்க...

By Gnaana
|

திருமணமான இளம்பெண்களுக்கு, குழந்தைப்பிறப்பு என்பது, அளவற்ற பூரிப்பையும், மகிழ்ச்சியையும் தரும் வாழ்வின் மறக்கமுடியாத தருணமாக இருக்கும். தான்பெற்ற குழந்தைக்கு பாலூட்டும்போது, தாய்மையின் பரவசத்தில், நெகிழ்ந்துபோவாள், இளம் அன்னை. தாய்மையின் பூரிப்பில், உறவினர், சுற்றத்தாரின் வாழ்த்துக்களில், மனம் நெகிழ்ந்துபோவதில், உடல் தானாகவே, பெருக்க ஆரம்பிக்கும்.

health

இந்த உற்சாகத்தில், மகவை சுமந்த காலத்தில் தவிர்த்த உணவுகளையெல்லாம், மீண்டும் சாப்பிட ஆர்வம் வரும். அதனால், இதுவரை சாப்பிடமுடியாமல் இருந்த, விரும்பிய உணவுகளை ஒரு பிடி பிடித்து விடுவார்கள். விளைவு?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உடல் பருமன்

உடல் பருமன்

உடம்பு ஊதி, பெருத்து, பப்ளிமாஸ் போன்று ஆகிவிடுகிறார்கள். அதன்பின்னர்தான், தவறை உணர்ந்து, உடம்பு இப்படி குண்டாகிவிட்டதே, இனி சொச்ச காலமெல்லாம் எப்படி கழியும்?, கணவன் புறக்கணித்து விடுவானோ? இப்பவே உட்கார்ந்தா, எழுந்திருக்க முடியலியே, கொஞ்ச தூரம் கூட நடக்க முடியலியே, என்று புலம்பித் தள்ளிவிடுவார்கள்.

திருமணமானபின், இளமைப் பொலிவுடன் அளவான எடையுடன், சுறுசுறுப்பாக இருந்தவர்கள், முதல் குழந்தையைப் பிரசவித்தபின், தண்ணீரில் ஊறவைத்த உலர் திராட்சைப் பழத்தைப் போல, பூசிய சதையுடன், உடம்பு பெருத்துவிடுகிறார்கள்.

உடம்பில் அதிக சதை விழுந்து, இடுப்பில் சதைகள் எல்லாம் தொங்கி, அவர்களுக்கே, தங்கள் உடலைக் காண வெறுப்பாக இருக்கும். எப்படி இருந்த நான் இப்படி ஆகிவிட்டேனே என்ற சுய பச்சாதாபத்தில், சாப்பிடாமல் பட்டினி கிடந்து, உடலை இளைக்கவைக்க, முயல்வார்கள்.

பிரசவத்துக்குப் பின்

பிரசவத்துக்குப் பின்

இதனால், உடலில் சத்து குறைந்து, தாய்ப்பாலும் வற்றி, குழந்தைக்கு பால் இல்லாமல் போனது கண்டு, பெரியோர்கள் திடுக்கிட்டு விசாரிக்கும்போது, நடந்ததை அறிந்து, அவர்களைத் திட்டவும் முடியாமல், கோபித்துக்கொள்ளவும் முடியாமல், பச்ச உடம்புகாரியாச்சே, அசடு, இதை என்கிட்டே கேட்டிருந்தால், உடம்பை இளைக்கவைக்க, வழி சொல்லியிருப்பேனே, என்று பாட்டிமார்கள் ஆதரவாக பேசும்போது, மறுபடியும் தவறு செய்துவிட்டோமோ, என்று குழந்தையைத் தழுவிக்கொண்டு, கண்களில் வழியும் நீரைத் துடைத்துக்கொள்வார்கள்.

காரணங்கள்

காரணங்கள்

பிரசவித்த பெண்களின் உடல் எடை திடீரென அதிகரிக்கக் காரணங்கள்.

தான் சுமந்து பெற்ற குழந்தையை காணும்போதும், அதன் சேட்டைகளில் மனம் கனியும்போதும், உடலின் ஹார்மோன்கள் தூண்டப்பட்டு, தானாக பெண்களின் எடை, கூடுகிறது. பிரசவத்தால் ஏற்பட்ட களைப்பினால் நீடிக்கும் பசியால், கிடைப்பதை அவ்வப்போது உண்ணும்போது, அதனாலும், உடல் எடை கூடும். சிசேரியன் ஆன பெண்கள், உடல் அசதியால், அதிக உடல் இயக்கம் இன்றி, படுத்தே இருப்பதாலும், எடை கூடுகிறது.

பத்திய சாப்பாடு

பத்திய சாப்பாடு

பத்திய சாப்பாட்டை புறக்கணித்ததால்தான், இந்த ஓவர் எடை பாதிப்புகள் எல்லாம்.

பெண்களுக்கு பிரசவமானபின், பத்திய சாப்பாடு என்று சில மாதங்களுக்கு சாப்பிட வைப்பார்கள். இந்த சாப்பாட்டை முறையாக சாப்பிட்டுவந்திருந்தாலே, உடல் எடையும் கூடியிருக்காது, உடலும் தெம்பாக இருந்திருக்கும். நவீன வாழ்க்கையில் முன்னோர் எதற்காக இதையெல்லாம் சொல்லியிருக்கிறார்கள், என அறியாமல், அவர்களின் செயல்களை, கிண்டல் செய்து புறக்கணித்ததன் விளைவு, இன்றைய பாதிப்புகள். அவர்கள் சொன்ன முறையில் சமைப்பது, இன்றைய பெண்களுக்கு சற்று கடினமாக இருக்கலாம், பொறுமையும் இருக்காது. அதனால், பத்திய சாப்பாடு போலவே, நலம் தரும், பெண்களின் உடல் கொழுப்பை உறிஞ்சி, உடலை மெலிய வைக்கும், ஒரு பத்தியப் பொடியைப் பற்றி தெரிந்துகொள்வோம்.

அங்காயப்பொடி

அங்காயப்பொடி

பிரசவித்த பெண்களின் ஓவர் சதைகளைக் கரைக்கும், அங்காயப் பொடி!

நாம் சிற்றுண்டிக்குத் தயார் செய்யும் இட்லிப்பொடியைப் போல, இந்த அங்காயப் பொடியை செய்வதும் எளிமையானது.

கொத்தமல்லி, 1௦௦ கிராம்,

மிளகு, சீரகம் தலா இருபத்தைந்து கிராம்,

வேப்பம்பூ ஐம்பது கிராம்,

சுக்குப்பொடி பத்து கிராம்,

சுண்டைக்காய் வற்றல் ஐம்பது கிராம்,

காய்ந்த மிளகாய் பத்து கிராம்,

கறிவேப்பலை சிறிதளவு,

பால்பெருங்காயம் பத்து கிராம்

அத்துடன் இந்துப்பு சிறிது.

வாணலியில் இதமான சூட்டில், கொத்தமல்லி, வேப்பம் பூ, சுண்டைக்காய் வற்றல் உள்ளிட்டவற்றை தனித்தனியே வறுத்து வைக்கவும். பின் எல்லாவற்றைவும் ஒன்றாக வறுத்து ஆறியபின், உப்பு சேர்த்து மிக்சியில் போட்டு பொடியாக்கினால், அங்காயப் பொடி, ரெடி

பயன்கள்

பயன்கள்

இந்த அங்காயப் பொடி, வயிற்றில் உள்ள நச்சுக்களை அழித்து, உடலை சுத்தப்படுத்தி வலுவாக்கும். உடலில் தேங்கியுள்ள கொழுப்புகளைக் கரைத்து, உடலை, ஸ்லிம்மாகவும், தெம்பாகவும் ஆக்கும். இந்தப் பொடியை தினமும் மதிய சாதத்தில் கலந்து, நெய்யூற்றி பிசைந்து, சாப்பிட்டு வரவேண்டும்.

அங்காயப் பொடி, உடலை மெலியவைத்து, சருமத்தை பொலிவடைய வைக்கும்.

கறிவேப்பிலை பொடி

கறிவேப்பிலை பொடி

பிள்ளை பெற்று தளர்ந்த உடலைத் தேற்ற, கறிவேப்பிலைப் பொடி உதவும்.

தளர்ந்த உடலை, வலிமையாக்கும் கறிவேப்பிலைப் பொடி.

கறிவேப்பிலை இலைகள் இரு கைப்பிடி அளவு,

உளுத்தம்பருப்பு பத்து கிராம்,

மிளகு ஜீரகம் தலா ஐந்து கிராம்,

காய்ந்த மிளகாய் பத்து கிராம்,

பெருங்காயம் ஐந்து கிராம்,

புளி மற்றும் கடுகு சிறிது

தேவையான அளவு இந்துப்பு.

வாணலியில் சிறிது எண்ணையை விட்டு, அதில் கறிவேப்பிலை உள்ளிட்ட எல்லாவற்றையும் நன்கு வறுத்து ஆறவைத்து, பொடியாக்கி, சாப்பாட்டில் பிசைந்து சாப்பிட, பிரசவித்ததால், உடல் தளர்ந்த பெண்களின் உடல் தசைகள் சீராகி, உடல் நன்கு வலுவாகும்.

பூண்டு, மிளகு பத்தியக் குழம்பு

பூண்டு, மிளகு பத்தியக் குழம்பு

பத்தியப் பொடிகளைப் போல, பத்தியக் குழம்பும், உடலுக்கு தெம்பையும், மனதுக்கு அமைதியையும் அளிக்கும். சிறிது புளியை நீரில் கரைத்து வைத்துவிட்டு, கொத்தமல்லி, காய்ந்த மிளகாய், கருப்பு உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு மற்றும் மிளகை, வறுத்து, பொடியாக்கி வைக்கவும். அரைத்து வைத்திருக்கும் கறிவேப்பிலை மற்றும் சீரகத்துடன் உப்பு சேர்த்து, புளி நீரில் இட்டு, நன்கு கரைத்து வைக்கவும்.

எண்ணையை வாணலியில் இட்டு, பூண்டுப்பற்களை வறுத்து, நீரூற்றி வேகவிடவும். வெந்தபின், புளிநீரை அதில் சேர்த்து, கொதிக்கவிடவும். பூண்டு கரைந்தவுடன், கடுகை தாளித்து, இறக்கிவைத்து, சற்று சூடுதணிந்தபின், சாதத்தில் நெய் ஊற்றி பிசைந்துசாப்பிடலாம். செரிமான பாதிப்புகள், வாயுத்தொல்லை, வயிறு மந்தம் போன்றவை குணமாகி, கெட்ட நச்சுக்கள் நீங்கி, உடல் புத்துணர்வடையும். மிளகு பூண்டு குழம்பு, உடலுக்கு சத்து மருந்து போல, பயன்தரும்.

பழங்களும் கீரைகளும்

பழங்களும் கீரைகளும்

பிரசவித்த பெண்களின் உடல் எடைக்குறைப்பில், கீரைகளும், பழங்களும்.

மேற்கண்ட பொடிகளை, தொடர்ந்து சாப்பிட்டுவந்தாலே, உடலுக்கு தெம்பும், உடல் எடைக் குறைப்பும் ஏற்படும். இத்துடன், தினமும், கீரைகள், நார்ச்சத்துமிக்க தானியங்களை உணவில் சேர்த்து, ஆரஞ்சு போன்ற பழங்களை சாப்பிடலாம். அதிகம் தண்ணீர் குடித்துவர, உடல் எடை குறைந்து வருவதை, காணமுடியும்.

தொப்பைக்கு காரணம்

தொப்பைக்கு காரணம்

பிரசவித்த பெண்களின் வயிற்றில் ஏற்படும் தொப்பையும், தொங்கு சதையும்.

சில பெண்களுக்கு பிரசவத்திற்கு பின், வயிற்றில் கொழுப்பு சேர்வதால், தொப்பை ஏற்படும். இளம்தாய்மார்களின் பாட்டிகளும், கொள்ளுப்பாட்டிகளும் இன்றும் ஒட்டிய வயிற்றுடன் காணப்படும்போது, இன்றைய தாய்மார்களின் தொப்பைக்கு, என்ன காரணம்? நாகரீகங்கள் எனும் பெயரில், பெண்கள் இழக்கும் உடல்நலனில், இதுவும் ஒன்று. பிரசவம் ஆனபின், பெண்களின் வயிற்றில், இறுக்கமாக, காசித்துண்டை கட்டிவைப்பார்கள், கால்களையும், சேர்த்துப்போட்டு அமரச்சொல்வார்கள். இதன் மூலம், தளர்வான பிறப்புறுப்பின் வழியே, காற்று உட்செல்வது, தடுக்கப்பட்டு, பத்து பிள்ளைகள் பெற்றாலும், ஒட்டிய வயிரும், மெலிந்த உடலுமாக, அக்கால இளம் தாய்மார்கள், இன்றும் ஆரோக்கியமாக, வாழமுடிகிறது!.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

traditional foods for losing weight after baby birth

Your body needs time to recover from childbirth. If you lose weight too soon after childbirth, it can take longer for you to recover. Give yourself until your 6-week checkup before trying to slim down. If you are breastfeeding, wait until your baby is at least 2 months old and your milk supply has normalized before drastically cutting calories.
Story first published: Tuesday, April 3, 2018, 19:00 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more