சிசேரியனுக்கு பிறகு பெண்களுக்கு ஏற்படும் வலிகள் இப்படி கூட இருக்குமா?

Written By:
Subscribe to Boldsky

குழந்தை சுகப்பிரசவமாக பிறந்து விட்டால் அனைவருக்கும் மகிழ்ச்சி தான். ஆனால் சுகப்பிரசவமாக குழந்தை பிறக்க சிறிது நேரம் வலியை அனுபவித்து ஆக வேண்டும். இன்று சிலர் பிரசவ வலியை தாங்கிக் கொள்ள முடியாமல், சிசேரியன் பிரசவம் செய்து விடுகின்றனர்.

real moms feeling after a c-section surgery

இந்த சிசேரியன் பிரசவம் அப்போதைக்கு வலியை தராததாக இருந்தாலும், வாழ்நாள் முழுவதும் ஏதோ ஒரு பிரச்சனையை நமக்கு கொடுத்து விட்டு சென்று விடும். சுகப்பிரசவம் செய்தவர்கள் இரண்டு மூன்று நாட்களில் தாமாக எழுந்து நடந்து வீட்டிற்கு சென்று விடலாம். ஆனால் சிசேரியன் பிரசவத்திற்கு பிறகு சில நாட்கள் மருத்துவ கவனிப்பில் இருக்க வேண்டியது மிகவும் அவசியமாகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நடக்க முடியாது என நினைத்தேன்

நடக்க முடியாது என நினைத்தேன்

ஐந்து வருடங்களுக்கு முன்னர் எனக்கு சிசேரியன் மூலமாக குழந்தை பிறந்தது. நான் படுக்கையில் இருந்து எழுந்து நடக்க முடியாத விதமாக இருந்தேன். எனக்கு நடப்பதற்கு கூட ஒருவரின் உதவி தேவைப்பட்டது. நான் படுக்கையிலேயே கிடந்தேன். என்னால் எழுந்து வழக்கம் போல நடமாட முடியவில்லை. நான் மிக அதிகமாக அழுதேன். மிகவும் கவலை அடைந்தேன். பின்னர் வழக்கம் போல ஆகி விட்டேன். நான் ஒருவரது உதவியை நாடி, படுக்கையிலேயே இருந்த நாட்கள் மிகவும் கொடுரமானவை..

நிமிர முடியவில்லை

நிமிர முடியவில்லை

எனக்கு அறுவை சிகிச்சைக்கு பிறகு நேராக நிமிர்ந்து நிற்பது கடினம் என்று யாரும் சொல்லவில்லை. மருத்துவர், செவிலியர்கள் என யாருமே இதை பற்றி என்னிடம் பேசவே இல்லை. சிசேரியன் முடிந்த அடுத்த நாள் நான் நிமிர்ந்து நிற்க நினைத்தேன். எனக்கு வலித்தது. இதை பற்றி அப்போது ரவுண்ட்ஸ் வந்த மருத்துவரிடம் சொன்னேன். அப்போது அவர் சிசேரியன் செய்தால் இது மிகவும் பொதுவான ஒரு வலி தான். இதனை பற்றி கவலைப்பட வேண்டாம் என்றார். ஆனால் என்னால் வலியை தாங்க முடியவில்லை. கொஞ்ச நேரம் அமர்ந்து அமர்ந்து தான் நடந்தேன்.

இயலவில்லை

இயலவில்லை

எனக்கு சிசேரியன் ஆன அடுத்த நாள் நர்ஸ்கள் என்னை பாத்ரூம் செல்ல சொன்னார்கள். அவர்கள் என்னை கரம் பிடித்து அழைத்து சென்றார்கள். நான் நடக்க முடியாமல் பாத்ரூமிற்குள் நுழைந்து விட்டேன். எப்படியோ பாத்ரூம் சீட்டில் அமர்ந்து விட்டேன். நர்ஸ்களை நீங்கள் வெளியே செல்லுங்கள் நான் பார்த்து கொள்கிறேன் என்றேன். அப்போது தான் எனது இயலாமையை பற்றி எனக்கு புரிய வந்தது. என்னால் அந்த இடத்தை விட்டு தனியாக எழுந்திரிக்கவே முடியவில்லை. எனக்கு ஒருவரின் உதவி தேவை.. நான் மருத்துவ மனையில் இருக்கிறேன் என்று நான் அப்போது தான் உணர்ந்தேன்.

நடக்க முடியவில்லை

நடக்க முடியவில்லை

என்னால் சிசேரியன் பிரவத்திற்கு பிறகு ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை. எங்கே போக வேண்டும் என்றாலும் அவர்கள் தான் என்னை அழைத்து செல்வார்கள். நான் அவர்களுடன் வாதிட்டு என்னால் இதற்கு மேல் நடக்க முடியும் என்னை விடுங்கள். நானே நடக்கிறேன் என்றேன். ஆனால் அவர்கள் என்னை விட வில்லை. நான் கெஞ்சி கேட்டதால் விட்டார்கள். ஆனால் என்னால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை என்ற போது எனக்கு அழுகை தான் வந்தது. பின்னர் நான் மருத்துவ மனை நர்ஸ்களின் உதவியோடு தான் நடந்தேன். சிசேரியன் பிரசவத்தின் தாக்கம் இன்றும் கூட என்னை வாட்டுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

real moms feeling after a c-section surgery

real moms feeling after a c-section surgery
Story first published: Monday, October 23, 2017, 17:55 [IST]
Subscribe Newsletter