Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
அன்னாச்சிப்பழத்தை தேனில் ஊற வைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!
அன்னாச்சிப்பழத்தை பயன்படுத்தி பிரசவத்திற்கு பின் உண்டாகும் புண்களை ஆற்றுவது எப்படி என்பது பற்றி கொடுக்கப்பட்டுள்ளது
சுகப்பிரசவத்தின் போது பெண்ணுறுப்பில் காயம் ஏற்படுவது ஒரு சாதாரணமான விஷயம் தான். இந்த காயமானது குழந்தை வெளிவரும் போது உண்டாகிறது. இது வலி மிகுந்தது ஆகும். குழந்தை பிறந்தது பிறகு இந்த காயம் ஆற மருத்துவர்கள் சில ஆலோசனைகளை கூறுவார்கள். இந்த நேரத்தில் அந்தரங்கப்பகுதியை சுத்தமாக வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியமானதாகும். இல்லை என்றால் தொற்றுக்கள் உண்டாகிவிடும்.

அன்னாச்சிப் பழம்
அன்னாச்சி பழம் மிகுந்த சக்தி வாய்ந்த ஒரு பழமாகும். இது புண்கள் மற்றும் வீக்கங்களை சரி செய்யக் கூடிய தன்மை உடையது. ஈரானிய ரெட் கிரெசெண்ட் மெடிக்கல் ஜர்னல் ஆனது 2016 ஆம் ஆண்டில் அன்னாச்சிப்பழத்திற்கு இருக்கும் புண்களை ஆற்றும் தன்மையை கண்டறிந்தது. இது பிரசவமான பெண்களுக்கு இருக்கும் புண்களை விரைவில் ஆற்றும் தன்மை கொண்டது என்று தனது ஆய்வின் மூலம் கண்டறிந்தது.

சாப்பிடலாமா?
அன்னாச்சி பழத்தை நீங்கள் சாப்பிடலாமா என்று சந்தேகிப்பீர்கள். கர்ப்ப காலத்தில் தான் சிலரை இந்த பழத்தை சாப்பிட கூடாது என்று கூறியிருப்பார்கள். ஆனால் பிரசவத்திற்கு பிறகு நீங்கள் அன்னாச்சிப்பழம் சாப்பிடுவதில் எந்த தவறும் இல்லை. இது பெண்ணுறுப்பில் உண்டான புண்களை ஆற்றும் தன்மை கொண்டது.

சிறுநீரக கற்களுக்கு
அன்னாச்சிப்பழத் துண்டுகளை தேனில் கலந்து சாப்பிட்டு வர உடல்பலம் கூடும். உடல் பளபளப்பாகும். அன்னாச்சிப்பழம் அடிக்கடி சாப்பிட்டு வர, சிறுநீரகக் கற்கள் கரையும். இதயக் கோளாறு, பலவீனம் குணமாகும்.

ஜீரண சக்தி
அன்னாச்சிப்பழச்சாறை ஒரு நாள் நான்கு வேளை ஒரு அவுன்ஸ் வீதம் சாப்பிட்டு வந்தால் இடுப்பு வலி மாறும். அன்னாசிப்பழச்சாறை ஒரு நாள் நான்கு வேளை ஒரு அவுன்ஸ் வீதம் சாப்பிட்டு வந்தால் இடுப்பு வலி மாறும். பழச்சாறை தொண்டையில் படும்படி சிறிது நேரம் வைத்திருந்து விழுங்கி வர தொண்டைவலி, தொண்டைப்புண் தீரும்.

பூச்சிகள் அழியும்
அன்னாச்சி இலைச்சாறு வயிற்றின் பூச்சிகளை அழிக்கும் தன்மை நிறைந்து காணப்படுகிறது. அன்னாச்சி இலைச்சாறுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து அருந்த, பேதியாகி வயிற்றுப்பூச்சிகள் வெளியேறிவிடும். இலையைப்பிழிந்து சாறு எடுத்து ஒரு ஸ்பூன் சாறுடன், சிறிதளவு சர்க்கரை கலந்து சாப்பிட, விக்கல், இழுப்பு நோய் தீரும்.

சத்துக்கள்
அன்னாச்சிப்பழத்தில் வைட்டமின், ஏ, பி, சி சத்துகள் அதிகம் உள்ளது. மேலும் நார்ச்சத்து, புரதம், இரும்பு சத்துகள் உள்ளதால் இதை தொடர்ந்து சாப்பிட்டால் முகம் அழகாக மாறும். ஜீரண சக்தியை அதிகரிக்கும். அன்னாசி பழச்சாறுடன் தேன் கலந்து ஒரு மாத காலத்திற்கு சாப்பிட்டால் தலைவலி, பல்வலி, கண், காது, தொண்டை சம்மந்தபட்ட நோய்கள் வராது.



Click it and Unblock the Notifications