பிரசவத்திற்கு பிறகு 3 வாரம் தொடர்ந்து உச்ச உணர்வு கொண்ட பெண், எப்படி? எதனால்?

Posted By:
Subscribe to Boldsky

எப்போதும் பிரசவத்திற்கு பிறகு பெண்களுக்கு வலி தான் அதிகம் ஏற்படும். ஒரு அடி, அகலமாக எடுத்து வைத்தாலும் கூட அடி வயிறு பகுதியில் மிகுதியான வலி உண்டாகும். இது சுக பிரசவம், சிசேரியன் என இரு வகிக்கும் பொருந்தும்.

ஆனால், 35 வயதுமிக்க பிரிட்டன் பெண் ஒருவருக்கு பிரசவம் முடிந்த மூன்று வாரம் தொடர்ந்து தாம்பத்தியத்தில் ஈடுபடும் போது உண்டாகும் உச்ச உணர்வு தென்பட்டது மருத்துவர்கள் மத்தியிலேயே சற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எமிலி!

எமிலி!

எமிலி, இவருக்கு தான் இந்த வினோத உணர்வுகள் உண்டானது. இது குறித்து எமிலி கூறுகையில், "பிரசவத்திற்கு பிறகு உண்டான ஹார்மோன் தூண்டுதலால் எனக்கு உச்ச இன்பம் அடையும் உணர்ச்சி தென்பட்டது. இது குழந்தை பிறந்து நான்கு வாரங்கள் வரை தொடர்ந்து இருந்தது" என கூறுகிறார்.

Image Source

நான்கு குழந்தைகள்!

நான்கு குழந்தைகள்!

எமிலிக்கு நான்கு குழந்தைகள். இவரது கணவர் பெயர் பவுல். நான்கு முறை பிரசவித்துள்ளார். முதல் மகன் ஆஸ்கரை பிரசவித்த போது எமிலி இவ்வாறு முதல் முறையாக உணர்துள்ளார். ஆஸ்கருக்கு இப்போது வயது 9.

Image Source

ஒவ்வொரு முறையும்!

ஒவ்வொரு முறையும்!

தனது நான்கு குழந்தைகளை பிரசவித்த போதும் எமிலிக்கு இந்த உச்ச உணர்வு தென்பட்டுள்ளது. பல பெண்களுக்கு எமிலியின் கதை ஆச்சரியத்தை அளிக்கிறது. ஒவ்வொரு பெண்ணும் பிரசவத்தின் போதும், பிரசவத்திற்கு பிறகும் நரக வலியை உணரும் போது, எமிலி மட்டும் உச்ச இன்பத்தை அடைகிறார்.

முதல் பிரசவம்!

முதல் பிரசவம்!

முதல் பிரசவத்தின் போது எமிலிக்கும் மற்ற தாய்மார்களை போல அச்சம் இருந்தது. வலி அதிகமாக இருக்குமோ என்ற பயம் இருந்தது. ஆனால், பிரசவத்தின் முடிவில் அவருக்கு கிடைத்த அனுபவம், அவர் உணர்ந்தது வேறுவிதமாக இருந்தது.

ஹைப்னோபர்திங் சிகிச்சை!

ஹைப்னோபர்திங் சிகிச்சை!

எமிலி, ரிலாக்சேஷன் மற்றும் மூச்சு பயிற்சி மூலம், கர்ப்பிணி பெண்கள் வலி குறைவாக உணர பயிற்சி வழங்குகிறார். இயற்கையாக பிரசவத்தின் போது வலி குறைவாக உணர விரும்பும் பெண்கள், இவரை அணுகுகின்றனர்.

எமிலிக்கும் இந்த முறையால் தான் முதல் பிரசவத்தில் இருந்தே வலி உணர்வு குறைவாக இருப்பதாக கூறுகிறார்.

அனைவருக்கும் பொருந்தாது!

அனைவருக்கும் பொருந்தாது!

இந்த முறை எல்லா பெண்களுக்கும் பொருந்தாது, அப்படி பொருந்தும் என கூறுவதும் மிக கடுமையானது. சிலருக்கு இது வலி குறைவாக உணர உதவலாம். ஒவ்வொரு பெண்ணின் உடல்நிலை மற்றும் உடல் நலம் குறித்து பிரசவத்தின் போதான வலி வேறுபடுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Woman Reveals Secret To Her Three Week Orgasm

Woman Reveals Secret To Her Three Week Orgasm
Story first published: Monday, November 14, 2016, 16:50 [IST]