Latest Updates
-
இந்த 4 ராசி ஆண்கள் 'ஒருவனுக்கு ஒருத்தி' என்று வாழும் நேர்மையான கணவராக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
அக்டோபர் 24-ல் வக்ரமடையும் புதன்: இந்த 5 ராசிக்காரங்க பேச்சால் பல பிரச்சனைகளை சந்திப்பாங்க.. உஷார்.. -
உங்கள் பழைய வெள்ளி நகைகளை செலவே இல்லாமல் வீட்டிலேயே புதிது போல மாற்றும் எளிய வழிகள் - ட்ரை பண்ணி பாருங்க -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரியுது சொல்லுங்க.. உங்கள பத்தி சொல்றோம்.. -
இராவணனுக்கு 10 தலைகள் கிடைத்ததற்கு பின்னால் உள்ள கதை என்ன தெரியுமா? அந்த 10 தலைகளின் அர்த்தம் என்ன தெரியுமா? -
3/4 கிலோ சிக்கன் வாங்குனா.. இப்படி கெட்டி குழம்பு செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
பொரி மிச்சமிருந்தா இந்த மாதிரி மொறுமொறுனு வடை சுடுங்க - டீ, காபியோட சாப்பிட சூப்பரா இருக்கும் -
லென்ஸ் போட்டிருக்கீங்களா? இந்த தவறுகளை செய்யாதீங்க.. பார்வைக்கே ஆபத்தாயிடும் - எச்சரிக்கும் கண் டாக்டர்! -
பாபா வங்கா கணிப்பு படி 2027-ல் உலகத்தில் நடக்கப்போகும் மாற்றங்களும், அழிவுகளும் - ஷாக் ஆகாதீங்க -
நவம்பரில் சிம்ம ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க..
பிரசவத்திற்கு பின் தொங்கும் தொப்பையைக் குறைக்க உதவும் சில வழிகள்!
பிரசவத்திற்கு பின் பெண்கள் குண்டாவார்கள். இப்படி குண்டாவதைத் தடுக்க வேண்டுமானால், ஒருசில செயல்களைத் தவறாமல் செய்ய வேண்டும். இங்கு அந்த செயல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
பெண்கள் தங்கள் வாழ்வில் பல கட்டங்களில் குண்டாவார்கள். அதில் திருமணத்திற்கு பின் மற்றும் பிரசவத்திற்கு பின் போன்ற காலங்களில் குண்டானால், அதைக் குறைப்பது என்பது மிகவும் கடினம். இருந்தாலும், சரியான டயட் மற்றும் உடற்பயிற்சிகளில் ஈடுபட்டு வந்தால், கண்ட இடங்களில் கொழுப்புக்கள் தேங்குவதைத் தடுக்கலாம்.

இங்கு பிரசவத்திற்கு பின் தொங்கும் தொப்பையைக் குறைக்க உதவும் சில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து, ஒவ்வொரு பெண்ணும் தங்களது பிரசவத்திற்கு பின் பின்பற்றி வந்தால், தொப்பையை வேகமாக குறைத்து, தன் பழைய உடலமைப்பைப் பெறலாம்.

குழந்தையுடன் வாக்கிங்
குழந்தையுடன் ஏரியோபிக்ஸ் பயிற்சியில் ஈடுபடலாம். அதுமட்டுமின்றி, தினமும் குழந்தையை ஸ்ட்ரோலரில் வைத்துக் கொண்டு மெதுவாக 1 மைல் தூரம் நடந்தால், 100 கலோரிகளை எரிக்கலாம்.

ஸ்குவாட்ஸ்
சுவற்றில் சாய்ந்து கொண்டு நாற்காலியில் அமர்ந்திருப்பது போன்று 10 நொடிகள் இருக்க வேண்டும். பின் எழ வேண்டும். இப்படி தினமும் 20-25 முறை செய்தால், அடிவயிற்றில் உள்ள கொழுப்புக்கள் கரைக்கப்படும்.

சேது பந்தா சர்வங்காசனம்
தரையில் படுத்துக் கொண்டு, பாதத்தை தரையில் பதிக்குமாறு முழங்காலை மடக்கி, கைகளை பக்கவாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். பின் படத்தில் காட்டியவாறு உடலை மேல் நோக்கி தூக்கி, பாலம் போன்ற நிலையில் இருக்க வேண்டும். இப்படி 5-6 நொடிகள் இருக்க வேண்டும். இந்த ஆசனத்தை தினமும் 4-5 நிமிடம் செய்து வந்தால், தொப்பையைக் குறைக்கலாம்.

யோகா பயிற்சி
தினமும் யோகா பயிற்சியை செய்வதன் மூலமும் அடிவயிற்றில் கொழுப்புக்கள் சேர்வதைத் தடுக்கலாம். அதிலும் கும்பகாசனம், ஹஸ்தபடோடாசனம் மற்றும் புஜங்காசனம் போன்றவற்றை மேற்கொண்டால், தசைகள் இறுகி வலிமையடையும்.

தாய்ப்பால் கொடுக்கவும்
ஆம், குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதன் மூலமும் உடல் எடையை வேகமாக குறைக்கலாம். எப்படியெனில் தாய்ப்பால் கொடுக்கும் போது, ஆக்ஸிடோசின் வெளியிடப்பட்டு, கருப்பை சுருங்கி, பழைய நிலைக்கு வேகமாக மாறி, வீங்கி காணப்படும் வயிற குறையும்.



Click it and Unblock the Notifications
