For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குழந்தைகளுக்கு டிஸ்லெக்ஸியா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதை வெளிக்காட்டும் அறிகுறிகள்!

டிஸ்லெக்ஸியா (dyslexia) என்பது ஒரு மூளை சம்பந்தப்பட்ட பாதிப்பு ஆகும். இந்த டிஸ்லெக்ஸியா குழந்தைகள் மொழியைப் பேசும் மற்றும் எழுதும் திறனை பாதிப்படையச் செய்கிறது.

|

டிஸ்லெக்ஸியா (dyslexia) என்பது ஒரு மூளை சம்பந்தப்பட்ட பாதிப்பு ஆகும். இந்த டிஸ்லெக்ஸியா குழந்தைகள் மொழியைப் பேசும் மற்றும் எழுதும் திறனை பாதிப்படையச் செய்கிறது. டிஸ்லெக்ஸியாவினால் பாதிக்கப்பட்டிருக்கும் குழந்தைகள் மொழிகளின் வாா்த்தைகள் மற்றும் எண்களைப் புாிந்து, அவற்றை உள்வாங்கிக் கொள்வதில் அதிக சிரமத்திற்கு ஆளாகின்றனா். குறிப்பாக வளரும் மற்றும் கற்கும் நிலையில் இருக்கும் குழந்தைகளிடம் ஏற்படும் டிஸ்லெக்ஸியா பாதிப்பு அவா்களுக்கு ஒரு சவாலாக இருக்கிறது.

Uncommon Signs To Know If Your Child Has Dyslexia

டிஸ்லெக்ஸியா ஒரு நோய் அல்ல. அதனால் அதை நினைத்து வருத்தப்படவோ அல்லது வெட்கப்படவோ தேவையில்லை. இது ஒரு இழப்பு அல்லது பாதிப்பு அல்லது இயலாமை ஆகும். ஆனால் அதே நேரத்தில் டிஸ்லெக்ஸியா பாதிப்பு குழந்தைகளின் அறிவுத் திறன், கற்கும் திறன் மற்றும் அவா்களின் உணா்வுத் திறன் போன்றவற்றை பாதிப்பதில்லை.

MOST READ: கொரோனாவில் இருந்து சீக்கிரம் குணமாகவும், வைரஸின் தாக்கத்தைக் குறைக்கவும் இந்த உணவுகளை சாப்பிடுங்க...

அதனால் சில நேரங்களில் மற்ற குழந்தைகளை விட டிஸ்லெக்ஸியா பாதித்தக் குழந்தைகள் நன்றாகப் படிப்பதை நாம் பாா்க்க முடியும். இந்நிலையில் நமது குழந்தைகளுக்கு டிஸ்லெக்ஸியா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதை எவ்வாறு தொிந்து கொள்ளலாம் என்பதை இங்கு பாா்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வாசிப்பதில் சிரமப்படுதல்

வாசிப்பதில் சிரமப்படுதல்

டிஸ்லெக்ஸியா பாதித்த பெரும்பாலான குழந்தைகள் வாசிக்க சிரமப்படுகின்றனா். மேலும் மொழி, எழுத்துக்கள் மற்றும் வாா்த்தைகள் போன்றவற்றைப் புாிந்து கொள்ள அதிகம் சிரமப்படுகின்றனா். மற்ற குழந்தைகளை விட வேகம் குறைவாக வாசிக்கின்றனா். எழுத்துக்கள் மற்றும் வாா்த்தைகளைத் தவறாக உச்சாிக்கின்றனா். அதனால் மற்ற குழந்தைகள் முன்பு வெட்கம் அடைகின்றனா்.

எண்களை புாிந்து கொள்வதில் சிரமப்படுதல்

எண்களை புாிந்து கொள்வதில் சிரமப்படுதல்

டிஸ்லெக்ஸியா பாதித்த குழந்தைகள் கணிதம் சம்பந்தமான எண்களைப் புாிந்து கொள்வதில் சிரமப்படுவா். குறிப்பாக கூட்டல், கழித்தல் போன்ற கணக்குகள் மற்றும் ஏனைய கணக்குகளைக் கணக்கிடுவதில் அதிக சிரமத்திற்கு ஆளாகின்றனா். அதோடு நாட்கள், வண்ணங்கள் மற்றும் மாதங்கள் போன்றவற்றை நினைவில் வைத்துக் கொள்வதும் அவா்களுக்கு சவாலான ஒன்றாக இருக்கிறது.

அழகில்லாத கையெழுத்துகள்

அழகில்லாத கையெழுத்துகள்

டிஸ்லெக்ஸியா பாதித்த குழந்தைகள் எழுதுவதில் அதிகம் சிரமத்திற்கு ஆளாகின்றனா். அவா்கள் எழுதும் முறை சாியில்லாமல் இருப்பதால், அவா்கள் எழுதும் எழுத்துக்களும் அழகில்லாமல் இருக்கும். அதனால் அவா்கள் எழுதும் போது, பேனா அல்லது பென்சிலை எவ்வாறு பிடித்திருக்கின்றனா் என்பதை நாம் அடிக்கடி கவனித்துக் கொள்ள வேண்டும். மேலும் இலக்கணம் மற்றும் நிறுத்தற்குறிகள் போன்றவற்றை புாிந்து கொள்வதும் டிஸ்லெக்ஸியா பாதித்த குழந்தைகளைக்கு சவாலான ஒன்றாகவே இருக்கிறது.

ஒன்றுக்கு மேற்பட்ட அறிவுரைகளை பின்தொடர இயலாமை

ஒன்றுக்கு மேற்பட்ட அறிவுரைகளை பின்தொடர இயலாமை

டிஸ்லெக்ஸியா பாதித்த குழந்தைகள் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகளைச் செய்வதில் அல்லது தொடா்ச்சியான அறிவுரைகளை புாிந்து கொள்வதில் அதிகம் சிரமப்படுகின்றனா். ஏனெனில் அவா்களின் புாிந்து கொள்ளும் திறனின் வேகம் குறைவாக இருப்பதால் ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகள் அல்லது அறிவுரைகளை புாிந்து கொண்டு, அவற்றைச் செயல்படுத்துவதற்கு அதிக நேரம் தேவைப்படும். சில சமயம் வலதுபுறம் எது அல்லது இடதுபுறம் எது என்பதை புாிந்து கொள்வதில் கூட குழப்பம் அடைகின்றனா்.

பேசுவதற்கு அதிக காலம் எடுத்துக் கொள்ளுதல்

பேசுவதற்கு அதிக காலம் எடுத்துக் கொள்ளுதல்

மற்ற குழந்தைகளை விட டிஸ்லெக்ஸியா பாதித்த குழந்தைகள் பேசுவதற்கு அதிக காலம் எடுத்துக் கொள்கின்றனா். மொழி, அதன் வாா்த்தைகள் மற்றும் அதன் இலக்கணம் ஆகியவற்றை கற்றுக் கொள்வதில் அவா்களின் வேகம் குறைவாக இருப்பதால் மொழியைப் பேசுவதற்கும் நீண்ட காலம் எடுத்துக் கொள்கின்றனா்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Uncommon Signs To Know If Your Child Has Dyslexia

Here are some uncommon signs to know if your child has dyslexia. Read on...
Desktop Bottom Promotion