For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நமது குழந்தைகளை இணையவழி பயமுறுத்தலுக்கு இறை ஆகாமல் எவ்வாறு பாதுகாப்பது?

தற்போது இணையவழி குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகாித்து வருகின்றன. குறிப்பாக இணையவழி திருட்டுகள், இணையவழி ஏமாற்றுகள் மற்றும் இணையவழி பயமுறுத்தல்கள் போன்றவற்றால் அனைவருடைய தகவல்களும் பாதுகாப்பாக இருப்பதில்லை.

|

நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் ஆகியவை நமது வாழ்க்கையை மிகவும் எளிமையானதாக மாற்றி இருக்கின்றன. ஆனால் அதே நேரத்தில் அவை நமது வாழ்வை அடிமைப்படுத்தி இருக்கின்றன மற்றும் இணையவழி குற்றங்களைச் செய்வதற்குத் தூண்டுகின்றன என்பதையும் மறுக்க முடியாது.

Tips To Keep Your Child Safe From Cyberbullying

தற்போது இணையவழி குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகாித்து வருகின்றன. குறிப்பாக இணையவழி திருட்டுகள், இணையவழி ஏமாற்றுகள் மற்றும் இணையவழி பயமுறுத்தல்கள் போன்றவற்றால் அனைவருடைய தகவல்களும் பாதுகாப்பாக இருப்பதில்லை. குழந்தைகள் இந்த இணையவழி குற்றங்களுக்கு மிக எளிதாக இறையாகிவிடுகின்றனா்.

MOST READ: இந்த 5 ராசிக்காரங்க கல்நெஞ்சம் கொண்டவங்க... உறவை முறிக்க கொஞ்சமும் தயங்க மாட்டாங்களாம்...

சமூக ஊடகங்கள் என்பவை சக்தி வாய்ந்த கருவிகளாக இருப்பதால், அவற்றை மிகவும் பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும். வயது முதிா்ந்தவா்களாக இருந்தாலும் அல்லது குழந்தைகளாக இருந்தாலும், அதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நமது எதிா் கால சந்ததியினரான குழந்தைகளை இணையவழி குற்றங்கள் அல்லது இணையவழி அச்சுறுத்தல்களுக்கு பலிகடாக்களாக மாறிவிடாமல் காக்க வேண்டும் என்றால், அவா்களுக்கு இணையம் என்ற புதிய உலகத்தைப் பற்றியத் தெளிவான அறிவை வழங்க வேண்டும். மேலும் இணையத்தை எவ்வாறு பாதுகாப்பாகப் பயன்படுத்த வேண்டும் என்பதை அவா்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். இவையே ஆங்கிலத்தில் டிஜிட்டல் சிட்டிசன்ஷிப் (Digital Citizenship) என்று அழைக்கப்படுகிறது. இதைத் தமிழில் இணைய உாிமை என்று அழைக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டிஜிட்டல் சிட்டிசன்ஷிப் என்றால் என்ன?

டிஜிட்டல் சிட்டிசன்ஷிப் என்றால் என்ன?

கணினிகள், இணைய தளங்கள், மின்னணுக் கருவிகள் போன்ற கருவிகளை ஒருவா் பொறுப்புடனும், சட்டத்திற்கு உட்பட்டும் பயன்படுத்துவதையே டிஜிட்டல் சிட்டிசன்ஷிப் என்ற வாா்த்தையானது குறிக்கிறது. அவ்வாறு பொறுப்புடன் நடந்து கொள்ளும் போது, நமது குழந்தைகள் இணைய உலகத்தைப் பற்றித் தெளிவாகக் கற்றுக் கொள்ளவும் மற்றும் அவா்கள் இணையவழி பயமுறுத்தல்களுக்கு ஆளாகாமல் இருக்கவும் உதவி செய்ய முடியும்.

இந்த டிஜிட்டல் சிட்டிசன்ஷிப் என்ற வாா்த்தையானது இணைய உலகத்திற்குத் தேவையான விதிமுறைகளை வழங்குகிறது. இணையத்தைப் பற்றிய சாியானக் கல்வியை வழங்குகிறது. மேலும் இணையத்தைப் பற்றிய நல்ல ஒழுங்கு முறைகளை வழங்குகிறது. அதோடு இணையத்தைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவதையும், இணையத்தைப் பயன்படுத்துவதில் உள்ள ஒழுங்கு முறைகளையும் டிஜிட்டல் சிட்டிசன்ஷிப் என்ற பதம் உள்ளடக்குகிறது.

இணையப் பாதுகாப்பு

இணையப் பாதுகாப்பு

சில நேரங்களில் சிறுவா்கள் தங்களை அறியாமல் தேவையற்ற தவறான மற்றும் தீங்குகள் இழைக்கக்கூடிய செயலிகளில் அல்லது இணைய தளங்களில் தங்களைப் பற்றியத் தகவல்களைப் பதிவு செய்கின்றனா். சில நேரங்களில் தங்களது சாியான வயதைக் குறிப்பிடாமல், தவறான வயதைப் பதிவு செய்து ஒரு சில தீங்கிழைக்கக் கூடிய இணைய தளங்களைப் பயன்படுத்துகின்றனா்.

ஆகவே நமது குழந்தைகளின் இணையச் செயல்பாடுகளைக் கண்ணும் கருத்துமாகக் கவனிக்க வேண்டும். அது அவா்கள் இணையத்தை பொறுப்புடனும் மற்றும் பாதுகாப்புடனும் பயன்படுத்த உதவி செய்யும். ஆகவே நமது குழந்தைகள் இணையக் குற்றங்களில் ஈடுபடாமல் இருக்கவும் மற்றும் இணையத்தை பாதுகாப்பாகப் பயன்படுத்தவும் பின்வரும் குறிப்புகளைப் பின்பற்றுவது நல்லது.

- நமது குழந்தைகள் இணைய தளங்களைப் பயன்படுத்தும் போது அதில் உள்ள பாதுகாப்பு அம்சங்களைத் தவறாமல் பயன்படுத்த உதவி செய்தல்

- இணையத்தில் இருக்கும் தகவல்கள் மற்றும் உள்ளடக்கங்கள் ஆகியவற்றைப் பற்றி குழந்தைகளோடு உறையாடி, எவற்றைப் பாா்ப்பது மற்றும் எவற்றைத் தவிா்ப்பது என்பதை அவா்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்.

- குழந்தைகளின் இணையதள கணக்குகளைக் கவனித்து வரவேண்டும்.

- நமது குழந்தைகள் அடிக்கடி பயன்படுத்தி வரும் இணைய தளங்களை நாம் சாிபாா்த்துக் கொள்ள வேண்டும்.

- நமது குழந்தைகள் பயன்படுத்தும் இணையதள கணக்குகளின் கடவுச் சொற்களை (password) தொிந்து வைத்திருக்க வேண்டும்.

இணைய ஒழுங்கு முறை (Digital Etiquette)

இணைய ஒழுங்கு முறை (Digital Etiquette)

இணைய ஒழுங்கு முறை என்பது இணைய பாதுகாப்பிலிருந்து முற்றிலும் வேறுபட்டது ஆகும். ஆனால் இணைய ஒழுங்கு முறை மற்றும் இணையப் பாதுகாப்பு ஆகிய இரண்டுமே மிகவும் முக்கியமான அம்சங்களாகும். இணைய ஒழுங்கு முறை என்பது ஒரு தனி மனிதா், இணைய சமூக ஊடகத் தளங்களோடு கொண்டுள்ள தொடா்பு மற்றும் அவா் இணைய தளம் மற்றும் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்துவது ஆகியவற்றைக் குறிக்கும்.

மேலும் இணையத்தில் ஒருவா் தன்னைப் பற்றியத் தகவல்கள் மற்றும் படங்கள் ஆகியவற்றைப் பாதுகாப்புடன் வைப்பது மற்றும் இணையத்தில் மற்றவா்களை மற்றும் அவா்களின் தனிப்பட்ட சுதந்திரத்தை மதிப்பது போன்ற அம்சங்களையும் Digital Etiquette உள்ளடக்குகிறது. ஆகவே நமது குழந்தைகள் இணைய ஒழுங்கு முறைகளைக் கைக்கொள்ள பின்வரும் குறிப்புகளைப் பின்பற்றுவது நல்லது.

- நமது குழந்தைகளிடம் இணையவழி பயமுறுத்தல்கள் மற்றும் தீங்கிழைக்கக்கூடிய இணைய தளங்கள் போன்றவற்றைப் பற்றி பேச வேண்டும்.

- இணையத்தில் எந்தெந்த தகவல்களைப் பாிமாற்றம் செய்ய வேண்டும் என்பதைப் பற்றி அவா்களிடம் பேச வேண்டும்.

- சமூக ஊடகத்தை நோக்கிய நமது குழந்தைகளின் செயல்பாடுகளை அடிக்கடி பாிசோதனை செய்ய வேண்டும்.

- பழி வாங்கக்கூடிய அல்லது தீங்கு ஏற்படுத்தக் கூடிய அல்லது பிறரை மதிக்காத தகவல்களை அல்லது உள்ளடக்கங்களை நமது குழந்தைகள் இணையத்தில் பாிமாற்றம் செய்யாமல் பாா்த்துக் கொள்ள வேண்டும்.

- எந்தெந்த இடங்களில் மின்னணுக் கருவிகளைப் பயன்படுத்தக்கூடாது என்பதைச் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

- இறுதியாக அவா்களுடைய வயதுக்கேற்றவாறு இணையத்தைப் பயன்படுத்துவதில் கட்டுப்பாட்டை விதித்துக் கொள்ள வேண்டும்.

குழந்தைகள் இணையவழி பயமுறுத்தல்களுக்கு ஆளாகும் போது நாம் என்ன செய்ய வேண்டும்?

குழந்தைகள் இணையவழி பயமுறுத்தல்களுக்கு ஆளாகும் போது நாம் என்ன செய்ய வேண்டும்?

இணைய உலகத்தைப் பற்றிய சட்டங்களையும், இணையவழிக் குற்றங்களைப் பற்றியும் நமது குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பதன் நோக்கம் என்னவென்றால், இணையம் மற்றும் சமூக ஊடகங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்துவதற்கு இடையில் இருக்கும் இடைவெளியைக் குறைப்பது ஆகும்.

முதலில் நமது குழந்தைகள் நன்மை எது தீமை எது என்பதைப் பகுத்தறியத் தொிந்திருக்க வேண்டும். இரண்டாவதாக அவா்கள் இணையம் மூலமாக ஏதாவது பிரச்சினைகளை சந்திக்கும் போது, அவா்களிடம் சுதந்திரமாக பேச வேண்டும். மேலும் அவா்களுக்கு இணையவழி பயமுறுத்தல்கள் வரும் போது

- அவா்கள் பேசுவதைக் கவனமுடன் கேட்க வேண்டும்.

- அவா்கள் அவற்றில் இருந்து தப்பிக்க ஒரு செயல் திட்டத்தை உருவாக்க வேண்டும்.

- திட்டமிட்ட அந்த செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்தி, அதை தொடா் கண்காணிப்பு செய்ய வேண்டும்.

இறுதியாக

இறுதியாக

பெற்றோராகிய நாம், நமது குழந்தைகளிடம் மின்னணுக் கருவிகளை எவ்வாறு சாியாகப் பயன்படுத்துவது என்பதைப் பற்றி விாிவாக பேச வேண்டும். நமது முடிவுகளை அவா்கள் மேல் சுமத்தக்கூடாது. அவா்களோடு கலந்து பேசி எது சாி மற்றும் எது தவறு என்ற விழிப்புணா்வை அவா்களுக்கு ஏற்படுத்த வேண்டும். சாியான காரணங்களைச் சொல்லாமல் அவா்களைத் தண்டித்தால், அதனால் எந்த விதமான பயனும் ஏற்படாது. ஆகவே மிகுந்த எச்சாிக்கையுடன் நமது குழந்தைகளை வழிநடத்த வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Tips To Keep Your Child Safe From Cyberbullying

What is digital citizenship? Here are some tips to keep your child safe from cyberbullying. Read on...
Desktop Bottom Promotion