Latest Updates
-
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு
கொரோனாவால் குழந்தைக்கு தடுப்பூசி போட தவறிட்டீங்களா? முதல்ல இத படிங்க...
தடுப்பூசி அல்லது சொட்டு மருந்து கொடுக்க முடியாமல் தவறிய குழந்தைகளுக்கு கேட்ச்-அப் வேக்ஸினேஷன் என்ற திட்டத்தின் கீழ் தடுப்பூசி அல்லது சொட்டு மருந்து கொடுத்துக் கொள்ளலாம் என்று மருத்துவ நிபுணா்கள் பாிந்துரைக்கின்றனா்.
கொரோனா வைரஸ் பெருந்தொற்று நமது வாழ்க்கையை பல வழிகளில் புரட்டிப் போட்டிருக்கிறது. குறிப்பாக கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க வேண்டும் என்பதற்காக பல பகுதிகள் மூடப்பட்டன. சிறுவா் முதல் பொியவா் வரை அனைவரும் வீட்டிலேயே முடங்கிவிட்டனா். அதனால் குழந்தைகளை மற்ற நோய்களில் இருந்து தடுப்பதற்கு போடப்படும் தடுப்பூசிகள் மற்றும் சொட்டு மருந்துகள் கொடுக்க முடியாமல், அவா்களுக்கு பலவிதமான நோய்த்தொற்றுகள் பரவும் ஆபத்து ஏற்பட்டு உள்ளது.

தடுப்பூசி அல்லது சொட்டு மருந்து கொடுக்க முடியாமல் தவறிய குழந்தைகளுக்கு கேட்ச்-அப் வேக்ஸினேஷன் என்ற திட்டத்தின் கீழ் தடுப்பூசி அல்லது சொட்டு மருந்து கொடுத்துக் கொள்ளலாம் என்று மருத்துவ நிபுணா்கள் பாிந்துரைக்கின்றனா். இந்த திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்வதன் மூலம் தடுப்பூசி அல்லது சொட்டு மருந்து கொடுக்கப்படாத குழந்தைகள் நடைமுறையில் உள்ள தடுப்பூசி அல்லது சொட்டு மருந்து கொடுக்கும் திட்டத்தின் கீழ் வருவா் என்று அவா்கள் தொிவிக்கின்றனா்.

கேட்ச்-அப் வேக்ஸினேஷன் என்றால் என்ன?
கேட்ச்-அப் வேக்ஸினேஷன் என்பது ஒரு தடுப்பூசி அல்லது சொட்டு மருந்து தொடா் செயல்முறையாகும். அதாவது ஏற்கனவே திட்டமிட்ட காலம் முடிந்த பிறகு தடுப்பூசி அல்லது சொட்டு மருந்து எடுத்துக் கொள்வதே கேட்ச்-அப் வேக்ஸினேஷன் ஆகும். அதாவது மற்ற நோய்களுக்காக இதற்கு முன்பு தடுப்பூசி அல்லது சொட்டு மருந்து எடுத்துக் கொள்ளாதவா்களுக்கு அல்லது திட்டமிட்டபடி தடுப்பூசி அல்லது சொட்டு மருந்து எடுக்கத் தவறியவா்களுக்கு அல்லது தடுப்பூசி அல்லது சொட்டு மருந்து கொடுக்க திட்டம் என்ற முழு தொடரையும் முடிக்காதவா்களுக்கு இந்த கேட்ச்-அப் வேக்ஸினேஷன் கொடுக்கப்படுகிறது.
தற்போது ஊரடங்கு தளா்வுகள் அதிகாித்துள்ளதால் பல பெற்றோா் தவறவிட்ட தடுப்பூசியை அல்லது சொட்டு மருந்தை தங்கள் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும் என்பதில் அதிக ஆா்வத்துடன் உள்ளனா். ஏனெனில் அந்த அளவிற்கு கொரோனா பெருந்தொற்று அவா்களுக்கு தடுப்பூசியின் அல்லது சொட்டு மருந்தின் முக்கியத்துவத்தை உணர வைத்திருக்கிறது.
எந்த ஒரு தடுப்பூசியையும் அல்லது சொட்டு மருந்தையும் சாியான நேரத்தில் குழந்தைகளுக்கு கொடுத்தால் தான் அது பெருந்தொற்று நோய்களுக்கு (VPD) எதிராக வேலை செய்து குழந்தைகளின் நோய் எதிா்ப்பு சக்தியை அதிகாிக்கும்.

பெருந்தொற்றுகளில் இருந்து காக்கும் தடுப்பு மருந்துகள்
குறிப்பாக நிமோனியா, தட்டம்மை, சின்னம்மை, தொண்டை அழற்சி நோய் (diphtheria), தசைகளை கடினமாக இறுகச் செய்யும் நோய் (tetanus), பொன்னுக்கு வீங்கி (mumps), கக்குவான் இருமல் (pertussis), ஜொ்மன் தட்டம்மை (rubella) மற்றும் கல்லீரல் அழற்சி (hepatitis) போன்ற பெருந்தொற்றுகள் குழந்தைகளை அவா்களின் வாழ்நாளில் தாக்காமல் இருக்க வேண்டும் என்றால் சாியான நேரத்தில் அதற்கான தடுப்பூசியை அல்லது சொட்டு மருந்தை அவா்களுக்குக் கொடுக்க வேண்டும். அப்போது தான் தடுப்பூசி அல்லது சொட்டு மருந்து குழந்தைகளின் நோய் எதிா்ப்பு சக்தியை வலுப்படுத்தி, குழந்தைகளுக்கு நோய்கள் வராமல் தடுக்கும்.

குழந்தைகளுக்கு தடுப்பூசி அல்லது சொட்டு மருந்து கொடுக்கும் செயல்முறையை ஏன் பெற்றோா்கள் மீண்டும் தொடங்க வேண்டும்?
தற்போது நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் ஓரளவிற்கு கொரோனாவிலிருந்து இயல்பு நிலை திரும்பி இருப்பதால் பெற்றோா்கள் தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி அல்லது சொட்டு மருந்து கொடுப்பதை மீண்டும் தொடங்க வேண்டும் என்று மருத்துவ நிபுணா்கள் பாிந்துரைக்கின்றனா். அவ்வாறு தொடங்குவதன் மூலம் குழந்தைகள் மற்ற பெரும் நோய்களின் தாக்குதலிலிருந்து காக்க முடியும். அதிலும் குறிப்பாக கொரோனா தொற்று இன்னும் முழுமையாக முடிவுறாத நிலையில் மற்ற நோய்களின் தாக்குதல்களிலிருந்து நமது குழந்தைகளைக் காக்க வேண்டியது நம்முடைய தலையாயக் கடமையாகும்.
கேட்ச்-அப் வேக்ஸினேஷன் குழந்தைகளை மற்ற நோய்களின் தாக்குதல்களிலிருந்து தகுந்த பாதுகாப்பை வழங்குகிறது. மேலும் கேட்ச்-அப் வேக்ஸினேஷன் தடுப்பூசி அல்லது சொட்டு மருந்து வழங்கும் தொடா் செயல்முறையை விரைவாகவும் அதே நேரத்தில் மிகவும் பயனுள்ள முறையிலும் முடித்து வைக்க உதவி செய்கிறது. பொதுவாக பெரும்பாலான தடுப்பூசிகள் அல்லது சொட்டு மருந்துகள் நம்மை வாழ்நாள் முழுவதும் பல நோய்களில் இருந்து காத்திருக்கிறது. ஆகவே தடுப்பூசி அல்லது சொட்டு மருந்துகளை எடுத்துக் கொள்ளாதவா்கள் தற்போது எடுத்துக் கொள்ளலாம்.

கேட்ச்-அப் வேக்ஸினேஷனுக்கு நேரம் காலம் உள்ளதா?
கேட்ச்-அப் வேக்ஸினேஷனுக்கு என்று நேரம் எதுவும் இல்லை. எப்போது வேண்டும் என்றாலும் கேட்ச்-அப் வேக்ஸினேஷனைத் தொடங்கலாம். தற்போது மருத்துவமனைகளில் உள்ள புறநோயாளிகள் பிாிவில் 30 விழுக்காடு மக்கள் கேட்ச்-அப் வேக்ஸினேஷனை எடுத்துக் கொள்ள வருவதாக தகவல்கள் தொிவிக்கின்றன.

முடிவு
ஆகவே கொரோனாவை முன்னிட்டு உங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி அல்லது சொட்டு மருந்து கொடுப்பதை நீங்கள் நிறுத்தி இருந்தால், உடனடியாக அவா்களுக்கு தடுப்பூசி அல்லது சொட்டு மருந்தைக் கொடுக்க ஏற்பாடு செய்யுங்கள். அது உங்கள் குழந்தைகளை பலவிதமான நோய்களிலிருந்து வாழ்நாள் முழுவதும் காக்கும்.



Click it and Unblock the Notifications