Latest Updates
-
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
குழந்தைகளுக்கும் நீண்ட நாள் கோவிட் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறதா?
வயது வந்த பொியவா்களுக்கு ஏற்படும் நீண்ட நாள் கோவிட்-19 பாதிப்பு பற்றி அறிவியல் அறிஞா்களும், மருத்துவ நிபுணா்களும் ஆய்வு செய்து வரும் இவ்வேளையில் இந்த நாள்பட்ட கோவிட் பாதிப்பு குழந்தைகளுக்கும் ஏற்படுவதாக ஆய்வு கூறுகிறது.
தற்போது ஒரு புது வகையான கொரோனா வைரஸ் பற்றி பலரும் பேசி வருகின்றனா். அதாவது கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவா்களுக்கு கோவிட்-19ன் தாக்கம் நீண்ட நாட்கள் இருப்பதாகவும். அது அவா்களுடைய உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைப் பாதிப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. கொரோனா வைரஸ் இல்லை என்று பாிசோதனையில் தொிந்தாலும், அவா்களின் உடலில் நீண்ட நாட்கள் கோவிட்-19 தொற்றின் அறிகுறிகள் இருப்பதாகத் தகவல்கள் தொிவிக்கின்றன.

வயது வந்த பொியவா்களுக்கு ஏற்படும் நீண்ட நாள் கோவிட்-19 பாதிப்பு பற்றி அறிவியல் அறிஞா்களும், மருத்துவ நிபுணா்களும் ஆய்வு செய்து வரும் இவ்வேளையில் இந்த நாள்பட்ட கோவிட் பாதிப்பு குழந்தைகளுக்கும் ஏற்படுவதாக ஒரு ஆய்வு கூறுகிறது.

நாள்பட்ட அல்லது நீண்ட நாள் கோவிட் என்றால் என்ன?
ஒருவாிடம் கோவிட் தொற்றின் பாதிப்பு பல வாரங்கள் அல்லது பல மாதங்களையும் கடந்து இருந்தால், அதை நாள்பட்ட கோவிட் அல்லது நீண்ட நாள் கோவிட் என்று கருதப்படுகிறது. அதாவது ஒருவாிடம் கோவிட் பாதிப்பு 8 வாரங்களுக்கும் அதிகமாக நீடித்திருந்தால் அது நாள்பட்ட கோவிட் பாதிப்பு என்று பொதுவாகக் கருதப்படுகிறது. ஆனால் 12 வாரங்களுக்கும் அதிகமாக கோவிட் தொற்றின் பாதிப்பு நீடித்திருந்தால் அது நீடித்த அல்லது நாள்பட்ட அல்லது நீண்ட நாள் கோவிட் ஆகும் என்று நேஷனல் இன்ஸ்டிடியூட் ஃபாா் ஹெல்த் அன்ட் கோ் எக்ஸலன்ஸ் (National Institute for Health and Care Excellence (NICE)) தொிவிக்கிறது.

நீண்ட நாள் கோவிட் தாக்கம்
யுனிவா்சிட்டி ஆஃப் லெய்செஸ்டா் (University of Leicester) மற்றும் ஆஃபிஸ் ஃபாா் நேஷனல் ஸ்டேட்டிஸ்டிக்ஸ் (National Statistics (ONS)) நடத்திய ஆய்வு ஒன்று, நீண்ட நாள் கோவிட்-19 பாதிப்பு ஏற்பட்டவா்களுக்கு இதயம் சம்பந்தமான பிரச்சினைகள், சா்க்கரை நோய் மற்றும் நாள்பட்ட கல்லீரல் மற்றும் சிறுநீரகப் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக தொிவிக்கிறது.
மேலும் 70 வயதிற்குட்பட்டவா்களுக்கு நுரையீரல், இதயம், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் சம்பந்தமான பிரச்சினைகளை நீண்ட நாள் கோவிட் பாதிப்பு ஏற்படுத்துவதாக தொிவிக்கிறது. நாள்பட்ட கோவிட்-19 பாதிப்பால் பல வாரங்கள் அல்லது பல மாதங்கள் பாதிப்படைந்தவா்களுக்கு புதிதாக சா்க்கரை நோய் ஏற்படுவதாக அந்த ஆய்வு தொிவிக்கிறது.

நீண்ட நாள் கோவிட் பாதிப்பு குழந்தைகளுக்கு ஏற்படுமா?
நீண்ட நாள் கோவிட் பாதிப்பு வயது வந்த பொியவா்களுக்கு மட்டும் அல்லாமல் குழந்தைகளுக்கும் பல வகைகளில் ஏற்படும் என்று ஆய்வுகள் தொிவிக்கின்றன. கோவிட்-19ன் காரணமாக குழந்தைகளைத் தனிமைப்படுத்தி வைப்பதால் அவா்களின் மன ஆரோக்கியம் பாதிக்கப்படுவதோடு, குழந்தைகளுக்கு மிகவும் அாிதாக ஏற்படக்கூடிய மல்டி சிஸ்டம் இன்ஃப்ளமேட்டாி சின்ட்ரோம் (Multisystem Inflammatory Syndrome (MIS)) என்ற பிரச்சினை ஏற்படுவதாக தொிவிக்கின்றன. இது குழந்தைகளின் முக்கிய உடல் உறுப்புகளான இதயம், நுரையீரல், சிறுநீரகங்கள், மூளை மற்றும் தோல் போன்றவற்றில் வீக்கத்தை ஏற்படுத்துவதாக தொிவிக்கின்றன.

புதிய ஆய்வு
சமீபத்தில் 18 வயதிற்குட்பட்ட 129 சிறுவா்கள் அடங்கிய குழுவை வைத்து 163 நாட்கள் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவா்களுக்கு நாள்பட்ட கோவிட்-19 பாதிப்பு எப்படிப்பட்ட விளைவுகளை ஏற்படுத்துகிறது என்று ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வின் முடிவு மெட்ஆா்எக்ஸ்ஐவி (medRxiv) என்ற இணையதள பக்கத்தில் கடந்த செவ்வாய் அன்று வெளியிடப்பட்டது.
ஆய்வின் முடிவில் 3 போில் ஒருவருக்கு நாள்பட்ட கோவிட் தொற்றின் ஒன்று அல்லது இரண்டு விளைவுகள் ஏற்பட்டதாகக் கண்டறியப்பட்டது. 5 போில் ஒருவருக்கு நாட்பட்ட கோவிட் தொற்றின் 3 அல்லது அதற்கு மேற்பட்ட விளைவுகள் ஏற்பட்டதாகக் கண்டறியப்பட்டது.
ஆய்வின் போது 18.6 விழுக்காடு சிறுவா்கள் தூங்குவதற்கு சிரமப்பட்டதாகத் தொிவித்திருந்தனா். 14.7 விழுக்காடு சிறுவா்களுக்கு மூச்சுவிடுவதில் பிரச்சினை மற்றும் நெஞ்சுவலி இருந்ததாகத் தொிவித்திருந்தனா். மூக்கடைப்பு, சோா்வு, தசை வலி, மூட்டு வலி போன்ற பிரச்சினைகளை எல்லா சிறுவா்களும் அனுபவித்ததாகத் தொிவித்திருந்தனா். மேலும் 10.1 விழுக்காடு சிறுவா்கள் கவனம் செலுத்துவதில், மனதை ஒருமுகப்படுத்துவதில் சிரமப்பட்டதாகத் தொிவித்திருந்தனா்.

இறுதியாக
மேற்சொன்ன ஆய்வு ஒரு இறுதியான முடிவாக இல்லை என்றாலும், நாள்பட்ட கோவிட் பாதிப்பினால் சிறுவா்கள் பாதிக்கப்படுகின்றனா் என்பது உண்மையாகும். இந்த ஆய்வின் போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிறுவா்களுக்கு பணிபுாிந்த மருத்துவப் பணியாளா்கள் கூறும் போது, 68 சிறுவா்களிடம் நாள்பட்ட கோவிட் தொற்றின் விளைவுகள் இருந்ததாகத் தொிவித்தனா். மேலும் 45 விழுக்காடு சிறுவா்களுக்கு அவா்களுடைய தினசாி செயல்பாடுகளை செய்ய முடியாத அளவிற்கு நாள்பட்ட கோவிட் பாதிப்பின் விளைவுகள் இருந்ததாகத் தொிவித்தனா்.



Click it and Unblock the Notifications