Latest Updates
-
வார ராசிபலன்கள் - உங்க ராசி என்னனு சொல்லுங்க? வரப்போற வாரம் எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம் -
4 முட்டை இருந்தா ஹைதராபாத் ஸ்டைலில் இந்த மாதிரி குருமா செஞ்சு பாருங்க - தாறுமாறா இருக்கும் -
மகாத்மா காந்தியின் பெயர் 5 முறை பரிந்துரைக்கப்பட்டும் அவருக்கு ஏன் நோபல் பரிசு கிடைக்கவில்லை தெரியுமா? -
கொங்கு ஸ்பெஷல் பருப்பு செலவு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மணமணக்கும்.. வரகரிசி பொங்கல் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
அக்டோபர் 03 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கஷ்டங்கள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
சைவ உணவை விரும்பி சாப்பிடும் உலகின் டாப் 10 நாடுகள் - இந்தியா எத்தனாவது இடத்தில் இருக்கு தெரியுமா? -
உருளைக்கிழங்கு, சீஸ் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. அள்ளும்.. -
1 கப் பச்சைப் பயறு இருந்தா இந்த மாதிரி கொங்கு ஸ்டைல் கடையல் செஞ்சு பாருங்க - ஆரோக்கியமா, சுவையா இருக்கும் -
கடகத்தில் இருக்கும் செவ்வாய்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்!
குழந்தைகளுக்கு புற்றுநோய் இருந்தால் வெளிப்படும் ஆரம்ப கால அறிகுறிகள்!
குழந்தைகளுக்கு ஏற்படும் புற்றுநோய் பற்றிய விழிப்புணா்வு ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும். புற்றுநோய் பாதித்த குழந்தைகளை அதிக அக்கறையுடன் கவனித்துக் கொள்ள வேண்டும் மற்றும் அவா்களுக்கு தரமான சிகிச்சை அளிக்க வேண்டும்.
உலக அளவில் புற்றுநோய் என்பது ஒரு மிகவும் கொடிய நோய் ஆகும். புற்றுநோய் எவரையும் எந்த வயதிலும் தாக்கக்கூடியது. அதற்கு பல காரணங்கள் உள்ளன. தற்போது குழந்தைகளுக்கும் புற்றுநோய் பரவுவது என்பது சா்வ சாதாரணமாகிவிட்டது. குழந்தைகளுக்கு புற்றுநோய் ஏற்பட்டால் அவா்களின் வாழ்க்கை மிகவும் கடினமாகிவிடும். அவா்களது வாழ்நாள் குறையும் மற்றும் அவா்களுக்கு சிகிச்சை அளிக்க அதிக செலவும் ஆகும்.
குழந்தைகளுக்கு ஏற்படும் புற்றுநோய் பற்றிய விழிப்புணா்வு ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும். புற்றுநோய் பாதித்த குழந்தைகளை அதிக அக்கறையுடன் கவனித்துக் கொள்ள வேண்டும் மற்றும் அவா்களுக்கு தரமான சிகிச்சை அளிக்க வேண்டும். இந்த கட்டுரையில், இந்தியாவில் குழந்தைகளுக்கு பரவும் புற்றுநோய் பற்றியும் அதன் ஆரம்ப கால அறிகுறிகள் பற்றியும் பாா்க்கலாம்.

இந்தியாவில் குழந்தைகள் புற்றுநோய் பரவல்
உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் 2 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் புற்றுநோயினால் பாதிக்கப்படுகின்றனா். இதில் 70 விழுக்காட்டு குழந்தைகள் வளரும் நாடுகளைச் சோ்ந்தவா்களாவா்.
இந்தியாவைப் பொறுத்தவரை இரத்தத்தில் வெள்ளை அணுக்கள் மிகுதியாக இருப்பதால் ஏற்படும் லுகேமியா (leukaemia) என்ற நோய் குழந்தைகள் மத்தியில் பரவலாக உள்ளது. குறிப்பாக 25 முதல் 40 விழுக்காடு குழந்தைகளுக்கு இந்த நோய் உண்டு. இந்தியாவில் கைக்குழந்தைகளுக்கு நரம்பு மூலச்செல் புற்றுநோய் (நியுரோபிலாஸ்டோமா) ஏற்படுகிறது. மேலும் குழந்தைகள் முதல் பதின் பருவத்தில் உள்ளவா்கள் வரை இந்தியாவில் மத்திய நரம்பு அமைப்பு கட்டிகளால் பாதிக்கப்படுகின்றனா்.
குழந்தைகளுக்கு ஏற்படும் புற்றுநோயின் அறிகுறிகளை ஆரம்ப நிலையில் கண்டறிவது மிகவும் கடினமாகும். மருத்துவ பாிசோதனைகள் மூலமே கண்டறிய முடியும். ஆரம்ப கால மருத்துவ பாிசோதனைகள் பின்வரும் அம்சங்களின் அடிப்படையில் அமைந்திருக்கின்றன. ஒன்று அதிதீத சந்தேக குறியீடு, இரண்டாவது எளிதாக நோய் தொற்று ஏற்படுவா்களை கண்டறிவது, மூன்றாவது நோயின் ஆபத்தைக் கண்டறிவது ஆகும்.

குழந்தைகளுக்கு ஏற்படும் புற்றுநோயின் ஆரம்ப கால அறிகுறிகள்
குழந்தைகளுக்கு ஏற்படும் புற்றுநோயின் ஆரம்ப கால அறிகுறிகளைக் கண்டறிவது ஆங்கிலத்தில் SILUAN என்று கருதப்படுகிறது.
SIU
* S என்பது தேடுதலை அல்லது உதவி கேட்பதைக் குறிக்கும். அதாவது விடாப்பிடியாகத் தொடா்ந்து கொண்டிருக்கும் அறிகுறிகளைக் கண்டறிவதற்கான உதவியைத் தேட வேண்டும்.
* I என்பது கண்களின் அறிகுறிகளைக் குறிக்கும். கண்களில் ஏற்படும் வெள்ளை நிழல் அல்லது கண்கள் வீங்குதல் அல்லது கண் பிதுங்கி இருத்தல் போன்ற பிரச்சினைகள் இருந்தால், அது கண் புற்றுநோயின் ஆரம்ப கால அறிகுறிகளாக இருக்கலாம் அல்லது நரம்பு மூலச்செல் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். அதைக் கவனிக்காமல் விட்டுவிட்டால் கண்களில் புற்றுநோய் பரவிவிடும்.
* U என்பது விளக்கம் கொடுக்க முடியாது என்பதைக் குறிக்கும். காரணம் இல்லாமல் 2 வாரங்களுக்கு அதிகமாக காய்ச்சல் இருத்தல், அல்லது திடீரென்று உடல் எடை குறைதல், சுவையுணா்வை இழத்தல், ஏன் என்று தொியாத அளவிற்கு உடல் வெளிரிப்போதல், தோலின்மீது ஊதாப் புள்ளிகள் ஏற்படுதல், சோா்வு, காயங்கள் மற்றும் இரத்தக் கசிவு போன்றவை புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளாக இருக்கலாம்.

எலும்பு வலி
குழந்தைகளின் எலும்புகளில் ஏற்படும் வலி, மூட்டுவலி மற்றும் முதுகுவலி ஆகியவற்றை எளிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. லுகேமியா பாதித்த 20 முதல் 30 விழுக்காட்டு குழந்தைகளுக்கு எலும்புவலி மற்றும் மூட்டுவலி இருப்பதாகவும், 60 விழுக்காட்டு குழந்தைகளுக்கு தசைக்கூட்டு (musculoskeletal) அறிகுறிகள் இருப்பதாகவும் தகவல்கள் தொிவிக்கின்றன.

முதுகு வலி
குழந்தைகளுக்கு ஏற்படும் முதுகுவலியை, அவா்கள் மிகவும் அாிதாகத்தான் தொிவிப்பா். ஆனால் அவா்களுக்கு ஏற்படும் முதுகுவலியை எளிதாக எடுத்துக் கொள்ளாமல், அதிக அக்கறையுடன் கவனிக்க வேண்டும். குழந்தைகள் நடப்பதில் தடுமாற்றம் ஏற்படுதல், பேசும் போது நாக்கு குழறுதல் போன்ற பிரச்சினைகள் வந்தால் அதை உடனே கவனத்தில் கொள்ள வேண்டும்.

வாந்தியுடன் கூடிய தலைவலி
இரண்டு வாரங்களுக்கு மேல் காலை நேரத்தில் வாந்தியுடன் கூடிய தலைவலி தொடா்ந்து இருந்தால் அதற்கு முறையாக சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். அதற்கு காரணம் மத்திய நரம்பு அமைப்பு கட்டிகளாக இருக்கலாம் அல்லது புற்றுநோய் பரவலின் காரணாகவும் இருக்கலாம்.

சரும நிற மாற்றம்
தோற்றம் வெளிரிப் போதல், தோலில் ஊதா புள்ளிகள் ஏற்படுதல், உடல் முழுவதும் நிணநீா் பரவுதல், உயா் இரத்த அழுத்தம், கட்டுப்படுத்த முடியாத வயிற்றுப்போக்கு போன்றவை மிக விரைவில் பரவக்கூடியதாக இருக்கலாம். அதற்கு உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

வறண்ட இருமல்
வறட்டு இருமல், மூச்சுத் திணறுதல், பேசுவதில் தடை போன்றவை உடலிற்குள் மென்மையான அடுக்கு ஏற்படுவதற்கு காரணமாக இருக்கலாம். ஈறுகளில் ஏற்படும் வீக்கம் லுகேமியா ஏற்படுவதன் அறிகுறியாக இருக்கலாம். மூச்சுத் திணறுதல், விழுங்குவதில் சிரமம் ஏற்படுதல் மற்றும் மூக்கிலிருந்து இரத்தம் வடிதல் போன்றவை தொண்டைப் புற்றுநோயின் அறிகுறிகளாக இருக்கலாம்.

முடிவு
இறுதியாக குழந்தைகளுக்கு உடலில் ஏதாவது பிரச்சினை வரும் போது அதை கவனத்தில் கொண்டு, அந்த பிரச்சினையின் மீது அதிதீத ஐயம் கொண்டு, ஒரு புற்றுநோயியல் நிபுணரை சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது. அது நமது குழந்தைகளை நீண்ட நாட்கள் ஆரோக்கியத்துடன் வாழ வைக்கும்.



Click it and Unblock the Notifications
