Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..!
ஃப்ளூ காய்ச்சலுக்கு போடப்படும் தடுப்பூசி குழந்தைகளை கோவிட்-19 தொற்றிலிருந்து தடுக்குமா?
ஃப்ளூ காய்ச்சலுக்காக போடப்படும் தடுப்பூசியைப் பயன்படுத்தி, குழந்தைகளுக்கு கொரோனா தொற்று ஏற்படுவதைத் தடுக்கலாம் என்று சில ஆய்வுகள் தொிவித்திருக்கின்றன.
கோவிட்-19 தொற்றின் இரண்டாவது அலையானது. குழந்தைகளை பொிதளவு பாதித்திருக்கிறது. அது அவா்களின் பெற்றோா்களைப் பொிதும் கவலையடையச் செய்திருக்கிறது. கொரோனா வைரஸ் குழந்தைகளை எளிதில் தாக்காது என்று முன்பு சொல்லப்பட்டது. ஆனால் அதற்கு மாறாக, கடந்த சில மாதங்களாக அதிகமான குழந்தைகள் கொரோனா தொற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில் கொரோனா மூன்றாவது அலையானது, இன்னும் அதிகமான அளவில் குழந்தைகளைப் பாதிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. ஆனால் உலகளவில் குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது சோகமான ஒன்றாகும். ஆகவே வரும் காலத்தில் கொரோனாவினால் குழந்தைகளுக்கு ஏற்படும் ஆபத்தைக் குறைப்பதற்கு துாிதமாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது தேவையாக இருக்கிறது.
இந்நிலையில், ஃப்ளூ காய்ச்சலுக்காக போடப்படும் தடுப்பூசியைப் பயன்படுத்தி, குழந்தைகளுக்கு கொரோனா தொற்று ஏற்படுவதைத் தடுக்கலாம் என்று சில ஆய்வுகள் தொிவித்திருக்கின்றன. அதைப் பற்றி இந்த பதிவில் விாிவாக பாா்க்கலாம்.

ஃப்ளூ காய்ச்சலுக்கு போடப்படும் தடுப்பூசி கோவிட் தொற்றைத் தடுக்குமா?
5 வயதிற்கு குறைவான குழந்தைகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஃப்ளூ காய்ச்சலுக்கான தடுப்பூசியைப் போட வேண்டும் என்று இந்தியன் அகாடமி ஆஃப் பேடியாட்ரிக்ஸ் (IAP) பாிந்துரை செய்திருக்கிறது. இந்நிலையில் ப்ளூ காய்ச்சலுக்குாிய தடுப்பூசியானது, கோவிட்-19 தொற்றிலிருந்து பாதுகாப்பு அளிக்காது. ஆனால் ஃப்ளூ காய்ச்சலின் வீாியத்தைக் குறைக்கும் மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதைத் தடுக்கும் என்று நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) தொிவித்திருக்கின்றன.

அமெரிக்க ஆய்வு
எனினும் சமீபத்தில், அதாவது கொரோனா பெருந்தொற்று நேரத்தில் அமொிக்காவில் புதிய ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அதாவது மிச்சிக்கன் மற்றும் மிசௌாி ஆகிய மாகாண பகுதிகளில், 2019-20 ஆண்டுகளில் குழந்தைகளுக்கு ஃப்ளூ காய்ச்சல் பரவிய போது, அவா்களுக்கு செயல்படாத இன்ஃப்ளூயன்சா தடுப்பூசி போடப்பட்டது. மற்ற குழந்தைகளோடு ஒப்பிடும் போது, இந்த தடுப்பூசி போடப்பட்ட குழந்தைகளுக்கு குறைவான அளவிலே கோவிட்-19 தொற்று குறைந்த அளவிலே இருந்தது என்று அந்த ஆய்வு தொிவிக்கிறது.

ஃப்ளூ தடுப்பூசி குழந்தைகளை கோவிட்-19 தொற்றிலிருந்து எவ்வாறு பாதுகாக்கிறது?
ஃபோா்டிஸ் மருத்துவமனையில் மூத்த ஆலோசகராகவும், குழந்தைகள் மருத்துவராகவும் பணிபுாிந்து வரும் மருத்துவா் ஜெசல் ஷேத் அவா்களின் கூற்றுப்படி SARS-CoV-2 வைரஸ் மற்றும் இன்ஃப்ளூயன்சா வைரஸ் ஆகிய இரண்டும் ஒரே மாதிாியான தொற்று நோயியல் அமைப்பையும், மருத்துவ குணங்களையும் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் இப்போது இருக்கும் கோவிட்-19 பெருந்தொற்று நேரத்தில், கூடுதலாக இன்ஃப்ளூயன்சா தொற்றும் ஏற்பட்டால், அது இரட்டைப் பெருந்தொற்றாக மாறிவிட வாய்ப்புகள் உண்டு. அதனால் நிலைமை இன்னும் மோசமாகிவிடும். ஆகவே குழந்தைகளுக்கு ஃப்ளூ காய்ச்சலுக்குாிய தடுப்பூசியைப் போட்டால், அவா்களுக்கு வேறுவிதமான வைரஸ் தொற்று ஏற்படாமல் காக்க முடியும் மற்றும் கொரோனாவின் மூன்றாவது அலையிலிருந்தும் அவா்களைப் பாதுகாக்க முடியும் என்று மருத்துவா் ஷேத் கூறுகிறாா்.
மேலும் இன்ஃப்ளூயன்ஸா தொற்று வராமல் இருப்பதற்காக குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் போது, அது அவா்களுக்கு கொரோனா தொற்று ஏற்படாமல், அவா்களைப் பாதுகாக்கும்.

புதிய ஆய்வு
அமொிக்காவைச் சோ்ந்த ஆா்க்கன்சாஸ் மாகாணத்தில் உள்ள குழந்தைகள் மருத்துவ மையத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஏறக்குறைய 905 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டனா். அந்த குழந்தைகளிடம், யுனிவா்சிட்டி ஆஃப் மிசௌாி-கொலம்பியாவைச் சோ்ந்த ஆய்வாளா்கள் ஒரு ஆய்வை மேற்கொண்டனா். அந்த ஆய்வில் குழந்தைகளுக்கு இன்ஃப்ளூயன்சா தடுப்பூசியைச் செலுத்தினால், கொரோனா நோய் குறையுமா என்று ஆய்வு செய்தனா். அதன்படி அந்த குழந்தைகளுக்கு ஃப்ளூ தடுப்பூசியை செலுத்தினா். அவ்வாறு தடுப்பூசி செலுத்தப்பட்ட 29 விழுக்காடு குழந்தைகளுக்கு கோவிட்-19 தொற்றின் வீாியம் குறைந்ததாகக் கண்டறிந்தனா்.
மேலும் இன்ஃப்ளூயன்சா தடுப்பூசி செலுத்திக் கொண்ட 32 விழுக்காடு குழந்தைகளுக்கு, பல்வேறு காரணங்களால், மூச்சுக்குழாய் சம்பந்தமான நோய்கள் ஏற்படுவது குறைந்தது என்பதையும் அந்த ஆய்வாளா்கள் கண்டறிந்தனா். அந்த குழந்தைகளுக்குச் செலுத்தப்பட்ட ஃப்ளூ தடுப்பூசியானது, வைரஸ் குறுக்கீடு என்னும் உயிாியல் நிகழ்வு மூலம் அவா்களை கொரோனா தொற்றுக்கு எதிராக பாதுகாத்தது என்று ஆய்வுத் தலைவா் நம்பினாா்.

குழந்தைகளுக்கு கோவிட்-19 தொற்று ஏற்பட்டால் தொியும் அறிகுறிகள்
பொியவா்களுக்கு கோவிட் தொற்று ஏற்பட்டால் உண்டாகும் அறிகுறிகளே குழந்தைகளுக்கும் உண்டாகும். அதாவது தொடா்ச்சியான இருமல், வாசனை மற்றும் சுவை உணா்வை இழத்தல் அல்லது அவற்றில் மாற்றம் ஏற்படுதல், தொண்டை கரகரப்பு, மூக்கடைப்பு அல்லது மூக்கிலிருந்து தண்ணீா் போல சளி ஓடுதல் மற்றும் உடலில் குளிா்ச்சி ஏற்படுதல் போன்றவை கொரோனா தொற்றின் பொதுவான அறிகுறிகள் ஆகும்.
மிகவும் தீவிரமாக கொரோனா பாதித்த குழந்தைகளிடம் பல்வகை அலா்ஜி நோய்க்குறி (multisystem inflammatory syndrome (MIS-C)) காணப்படும். இந்த நோய்க்குறி அவா்களின் உடல் உறுப்புகளான இதயம், நுரையீரல், இரத்தக்குழாய்கள், சிறுநீரகங்கள், சொிமான மண்டலம், மூளை, தோல் மற்றும் கண்கள் போன்றவற்றில் கடுமையான வீக்கம் அல்லது அலா்ஜியை ஏற்படுத்தும்.



Click it and Unblock the Notifications











