For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க குழந்தை பொய் சொல்வதை நிறுத்தணுமா? இதோ சில வழிகள்!

பொய் சொல்வது பழக்கமாகும் போது உண்மைக்கு பதிலாக நிறைய பொய் சொல்வதை குழந்தைகள் தொடர்ந்து செய்வார்கள். ஆகவே இந்த பழக்கத்தை நாம் நிறுத்தியாக வேண்டும்.

|

பிள்ளை வளர்ப்பு என்பது சற்று சவாலான விஷயம். பிள்ளைகள் வளரும் போது அவர்களுக்கு நல்ல பழக்கங்களை கற்றுத் தருவது பெற்றோரின் கடமையாகும். பிள்ளைகள் வளரும் கட்டத்தில் பொய் சொல்லும் பழக்கம் ஏற்படுவதை நாம் கண்டிருக்கலாம். பொய் சொல்வது அல்லது உண்மையை மறைப்பது போன்ற தவறுகளில் அவர்கள் அவ்வப்போது ஈடுபடலாம். இது ஒரு பொதுவான பிரச்சனையாகும்.

5 Steps To Stop Your Child From Lying In Tamil

பொய் சொல்வது பழக்கமாகும் போது உண்மைக்கு பதிலாக நிறைய பொய் சொல்வதை குழந்தைகள் தொடர்ந்து செய்வார்கள். ஆகவே இந்த பழக்கத்தை நாம் நிறுத்தியாக வேண்டும். குழந்தைகளுக்கு நேர்மையாக இருக்கும் பழக்கத்தை விதைக்க வேண்டும். ஆகவே இந்த பழக்கத்தை எவ்வாறு குழந்தைகளுக்கு புகட்ட வேண்டும் என்பதற்கான சில குறிப்புகளை இப்போது நாம் காணலாம்.

MOST READ: ஒருமுறைக்கு மேல் கருச்சிதைவு ஏற்பட்டால் கவனத்தில் கொள்ள வேண்டியவைகள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நேர்மையே சிறந்தது

நேர்மையே சிறந்தது

நமது முன்னோர்கள் நேர்மையாக இருப்பது குறித்து பல்வேறு செய்திகளை நமக்கு கூறி இருக்கின்றனர். அதனை நாம் நம் பிள்ளைகளுக்கும் சொல்லிக் கொடுப்பது அவசியம். புராணங்கள் மற்றும் உண்மை சம்பவங்கள் நேர்மையாக இருப்பதன் நன்மைகளை நமக்கு தெரிய வைக்கும் என்பதால் நமது பிள்ளைகளுக்கு அவற்றைப் பற்றி கற்றுக் கொடுப்பது நல்லது. நேர்மையாக இருப்பது, பொய் பேசாமல் இருப்பது போன்றவற்றை குடும்ப விதியாக கடைபிடிப்பது ஒரு நல்ல அம்சம். பொதுவாக குழந்தைகள் பெரியவர்களை பின்பற்றுகின்றனர். ஆகவே நேர்மையாக இருக்கும் பழக்கத்தை வீட்டில் இருக்கும் பெரியவர்கள் பின்பற்றும் போது பிள்ளைகளும் அதனை தொடர்ந்து செய்வார்கள். நேர்மையாக இருக்கும் பழக்கத்தை பெரியவர்கள் பின்பற்றுவதை பார்க்கும் போது நேர்மை மற்றும் உண்மையின் முக்கியத்துவத்தை குழந்தைகள் புரிந்து கொள்வார்கள்.

உதாரணங்களை சுட்டிக்காட்டுங்கள், சூழ்நிலைகளை உருவாக்குங்கள்

உதாரணங்களை சுட்டிக்காட்டுங்கள், சூழ்நிலைகளை உருவாக்குங்கள்

உதாரணங்கள் மற்றும் கதைகள் மூலம் குழந்தைகளுக்கு செய்திகளை பகிர்வது என்பது ஒரு சிறந்த வழியாகும். உங்கள் குழந்தை அடிக்கடி பொய் சொல்வதை நீங்கள் கவனித்தால் அதனை தொடக்கத்திலேயே மாற்றுவது உங்கள் கடமையாகும். குழந்தைகள் வளர்ந்த பின்பும் அவர்கள் பழக்க வழக்கங்கள் மாறாது என்பதால் சிறு வயதிலேயே அவர்களுக்கு நல்ல பழக்கங்களை கற்றுத்தருவது பெற்றோரின் வேலையாகும். இல்லையேல் வளர்ந்த பின் அதுவே அவர்களுக்கு பெரிய பாதிப்பை உண்டாக்கக்கூடும். நேர்மை தொடர்பான கதைகள், நேர்மையான மனிதர்கள் பற்றிய வாழ்க்கை வரலாறு போன்றவற்றை படிக்கச் செய்து, நேர்மையாக இருப்பதன் அவசியத்தை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும்.

உண்மையை சொல்வதில் தயக்கம் வேண்டாம்

உண்மையை சொல்வதில் தயக்கம் வேண்டாம்

பெற்றோராகிய உங்களிடம் எந்த நேரத்திலும் எதையும் மறைக்காமல் சொல்ல கூடிய தைரியத்தை பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுங்கள். எந்த செயலாலும் உண்டாகும் எதிர்மறை விளைவுகள் குறித்த பயம் காரணமாக பிள்ளைகள் பொய் சொல்லும் நிலை ஏற்படலாம். உண்மையை கூறினால் நீங்கள் திட்டலாம் அல்லது அடிக்கலாம் என்ற பயத்தில் அவர்கள் உண்மையை மறைக்க முயற்சிக்கலாம். இந்த சூழ்நிலையை தவிர்க்க, உங்கள் பிள்ளைகளிடம் உங்கள் மீதான நம்பிக்கையை வளருங்கள். அவர்கள் உங்களிடம் எந்த விஷயத்தையும் பகிர்ந்து கொள்ள முடியும் என்ற சூழலை உருவாக்குங்கள். இதனால் அவர்களுக்கு சௌகரியமான உணர்வு வெளிப்படும், மேலும் எந்த ஒரு பிரச்சனையையும் பற்றி உங்களிடம் முழுவதும் பகிர்ந்து கொள்வார்கள், பொய் சொல்வதை அறவே தவிர்ப்பார்கள்.

பொய் சொல்வதற்கான காரணத்தை அறிந்து கொள்ளுங்கள்

பொய் சொல்வதற்கான காரணத்தை அறிந்து கொள்ளுங்கள்

எப்போதும் பிள்ளைகள் ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக மட்டுமே பொய் சொல்வார்கள். ஆகவே பிள்ளைகள் தொடர்ந்து பொய் சொல்வதாக நீங்கள் உணர்ந்தால் அதன் பின்னால் இருக்கும் காரணத்தை கண்டுபிடியுங்கள். சிலர் சில பொறுப்புகளை சுமக்க பயந்து பொய் சொல்லலாம். அந்த தருணங்களில் அவர்களின் பய உணர்ச்சியை போக்கவும் இந்த பழக்கத்தை மாற்றவும் அவர்களுக்கு உதவி செய்யுங்கள். குறித்த நேரத்தில் இந்த பழக்கத்தை மாற்ற முடியாமல் போனால் பொய் சொல்வது என்பது அவர்களின் நிரந்தர பழக்கமாக மாறி விடலாம்.

விளைவுகளை பற்றி விவாதியுங்கள், எச்சரிக்கை செய்யுங்கள்

விளைவுகளை பற்றி விவாதியுங்கள், எச்சரிக்கை செய்யுங்கள்

உங்கள் பிள்ளை பொய் சொல்லும் போது உண்டாகும் விளைவு குறித்து அவரிடம் பேசுங்கள். பொய் பேசும் மனிதர்கள் உலகத்தில் நேர்மையற்றவர்களாக முத்திரை குத்தப்படுவார்கள், அவர்கள் மீது மற்றவர்களுக்கு நம்பிக்கை இருக்காது, இதனால் எதிர்காலத்தில் பல பிரச்சனைகள் ஏற்படலாம் என்பது குறித்து அவர்களிடம் எடுத்துச் சொல்லுங்கள். நேர்மையற்றவராக இருப்பதால் உண்டாகும் பாதிப்புகள் குறித்த எச்சரிக்கையை அவர்களுக்கு பதிவு செய்வதால் அவர்கள் குறுக்கு வழியில் செல்வதை உங்களால் தடுக்க முடியும். திட்டுவது, கத்துவது, கோபப்படுவது போன்ற செயல்களை பெற்றோர் மேற்கொள்வதால் எந்த ஒரு பயனும் இல்லை, மாறாக இந்த நிலைமை மேலும் மோசமடையலாம்.

நீங்கள் பல முறை முயற்சித்தும் உங்கள் குழந்தை பொய் சொல்வதை உங்களால் நிறுத்த முடியாவிடில் தகுந்த நிபுணர்களின் உதவியை நாடி நேர்மையான பழக்கத்தை பிள்ளைகளுக்குள் விதைக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

5 Steps To Stop Your Child From Lying In Tamil

Here are 5 steps to stop your child from lying in tamil. Read on...
Desktop Bottom Promotion