For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குழந்தையை முதன் முதலாக பள்ளியில் சேர்க்க போறீங்களா? முதல்ல இத படிங்க...

இப்பொழுது எல்லாம் 2 1/2 வயதிலேயே குழந்தைகளை பாலர் பள்ளி, பிளேஸ்கூல் மற்றும் நர்சரி பள்ளி என்று சேர்த்து விடுகின்றனர். இந்த சின்ன வயதிலேயே ஆரம்ப அறிவை பெருக்க பள்ளிக்கு அனுப்புவது முக்கியமல்ல.

|

பொதுவா குழந்தையை முதன் முதலில் ஸ்கூல்ல சேர்ப்பது குழந்தைக்கு பெரிய விஷயமோ இல்லையோ, அப்பா அம்மாவுக்கு பெரிய கஷ்டமான விஷயம் தான். ஏனெனில் இதுவரை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை ஒரு புது சூழலுக்கு தள்ள முற்படுகிறோம். அந்த பள்ளிச் சூழல் குழந்தைக்கு பிடித்தமானதாக, ஏற்றதாக இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு அப்பா அம்மாவும் எண்ணுகிறார்கள். அதனால் தான் பிள்ளையை முதன் முதலில் ஸ்கூலில் சேர்க்க வேண்டும் என்றால் நிறைய ஸ்கூல்களை ஏறி இறங்கவும் செய்கிறார்கள்.

5 Important Tips Before Choosing A Preschool For Your Child

இப்பொழுது எல்லாம் 2 1/2 வயதிலேயே குழந்தைகளை பாலர் பள்ளி, பிளேஸ்கூல் மற்றும் நர்சரி பள்ளி என்று சேர்த்து விடுகின்றனர். இந்த சின்ன வயதிலேயே ஆரம்ப அறிவை பெருக்க பள்ளிக்கு அனுப்புவது முக்கியமல்ல. இதை பெரும்பாலும் வேலைக்கு செல்லும் பெற்றோர்கள் செய்கிறார்கள். ஆனால் உங்கள் குழந்தையை ஒரு பாலர் பள்ளியிலோ ஸ்கூலிலோ சேர்ப்பதற்கு முன் தயவு செய்து கீழ்க்கண்ட விஷயங்களை மனதில் கொண்டு செயல்படுங்கள். இது உங்கள் குழந்தையின் மன நிலைமைக்கும், வளர்ச்சிக்கும் உதவி செய்யும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உயர் தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் மற்றும் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள்

உயர் தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் மற்றும் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள்

நன்கு படித்த மற்றும் அனுபவமிக்க ஆசிரியர்கள் உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை அறிவாக்குகின்றனர் . அவர்கள் குழந்தையின் வளர்ச்சியில் கண்ணும் கருத்துமாக இருந்து செயல்படுகிறார்கள். அவர்கள் கற்பிக்கும் திறன் சிறந்ததாக இருக்கும் போது குழந்தைகளுக்கும் எளிதாக புரிகிறது. அவை உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்கு உதவியாக இருக்கும்.

அக்கறை, நேர்மறை எண்ணங்கள் மற்றும் நம்பகமான ஆசிரியர்கள்

அக்கறை, நேர்மறை எண்ணங்கள் மற்றும் நம்பகமான ஆசிரியர்கள்

ஒரு நல்ல ஆசிரியர் அக்கறை வாய்ந்தவராக, நேர்மறை எண்ணங்கள் மற்றும் நம்பகமான ஆசிரியராக இருக்க வேண்டும். ஆசிரியர்கள் நேர்மறையாகவும் அக்கறையுடனும் இருந்தால், அவர் குழந்தையை நன்கு கவனித்துக் கொள்ள முடியும் மற்றும் குழந்தைகளுக்கிடையே உற்சாகத்தையும் ஊக்கத்தையும் வளர்ப்பார்கள் என்று ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. குழந்தைகளும் விஷயங்களை சிறப்பாகக் கற்றுக் கொள்கிறார்கள். இதன் மூலம் குழந்தைகள் நன்றாக உருவாகிறார்கள். குழந்தைகளை ஒருபோதும் கொடுமைப்படுத்துதல் கூடாது.

ஈடுபாடுடனான ஆசிரியர்

ஈடுபாடுடனான ஆசிரியர்

சில நாட்களுக்கு குழந்தையை பிளே ஸ்கூலுக்கு அனுப்பும் போது, ​​வகுப்பில் உள்ள குழந்தையுடன் ஆசிரியர் எவ்வாறு தொடர்பு கொள்கிறார் என்று பாருங்கள். ஆசிரியர்கள் குழந்தைகளுடன் நேர்மறையாகவும் திரும்பத் திரும்பவும் தொடர்பு கொள்ள வேண்டும். குழந்தை வெட்கப்பட்டால், ஆசிரியர் அவர்களை பேச ஊக்குவிக்கிறாரா என்பதைக் கவனியுங்கள். ஆசிரியர் கதைகளைச் சொல்ல வேண்டும், விளையாட்டு மற்றும் கல்விக்கு தீவிர பங்களிப்பு செய்ய வேண்டும். வார்த்தைகள், எண்கள் மற்றும் வடிவங்களை சொல்லிக் கொடுப்பதோடு இடை இடையே அவர்கள் குழந்தையின் நல்ல செயல்களைப் புகழ்ந்து கற்றுக் கொள்ள ஊக்குவிக்க வேண்டும்..

நேர்மறை ஒழுக்கம்

நேர்மறை ஒழுக்கம்

குழந்தையின் ஆரம்ப கால பள்ளி என்பது குழந்தைக்கு சமூக மற்றும் மன வளர்ச்சியைக் ஊக்குவிக்கும் இடமாக இருக்க வேண்டும். உங்கள் பிள்ளைகளுக்கு நேர்மறையான ஒழுக்கத்தைக் கற்றுக் கொள்ளக்கூடிய சூழலைக் கொடுக்க வேண்டும். ஆசிரியர் பொறுமையாகக் கற்பிக்க முயற்சிக்க வேண்டும், அடிப்பதன் மூலமோ அல்லது தண்டிப்பதன் மூலமோ குழந்தைகளை துன்புறுத்தக் கூடாது.

குழந்தையின் வளர்ச்சி

குழந்தையின் வளர்ச்சி

விளையாட்டு மற்றும் விளையாட்டுகளின் மூலமும் குழந்தையின் வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டும். விளையாட்டு மற்றும் உடல் செயல்பாடுகள் மூளையின் வளர்ச்சியைத் தூண்டுகின்றன மற்றும் மேம்படுத்துகின்றன. இது தவிர, விளையாட்டுகளின் மூலம் கற்பிக்கப்படும் விஷயங்கள் குழந்தைகளால் விரைவாக புரிந்து கொள்ளப்படுகின்றன. மேலும் அவை எப்போதும் நினைவில் இருக்கும். எனவே ஒரு பாலர் பள்ளியைத் தேடும்போது, ​​குழந்தைகள் பல நல்ல விளையாட்டுகளை விளையாட கற்றுக் கொடுக்கிறார்களா என்பதை நினைவில் வைத்து தேர்ந்தெடுங்கள் பெற்றோர்களே!

மேற்கண்ட 5 விஷயங்களும் உங்கள் குழந்தையின் ஆரம்ப கால பள்ளி வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

5 Important Tips Before Choosing A Preschool For Your Child

If you are also looking for playschool or pre-school for your child, then keep the following things in mind. Read on...
Desktop Bottom Promotion