For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பரீட்சை வந்திடுச்சி... என்ன செஞ்சா குழந்தைங்க ஞாபகசக்தி அதிகமாகும்?... படிச்சது மறக்காம இருக்கும்

பரீட்சை பயம். குழந்தைகளோட ஞாபக சக்தியை எப்படி அதிகரிக்கச் செய்வது என்பது பற்றி பார்க்கலாம். படிச்சது மறக்காமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய விரிவான தொகுப்பு தான் அது.

By Mahibala
|

வருடாந்திர இறுதித் தேர்வு வந்துவிட்டது குழந்தைகளுக்கு. பரீட்சை வந்துவுிட்டதில் குழந்தைகளுக்கு பயம் வருகிறதோ இல்லையோ பெற்றோர்களுக்கு பசிக்காது. தூஞ்கம் வராது. ஏன் சிலருக்கு பரீட்சையால் காய்ச்சலே வந்துவிடும். அப்படி உங்களுடைய பரீட்சை பயத்தைப் போக்கி, குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்கச் செய்ய என்னவெல்லாம் ஈஸியா வீட்டிலேயே செய்து கொடுக்க முடியும் என்பது பற்றி இங்கே விளக்கமாகப் பார்க்கலாம்.

exam fear

குழந்தைகள் நன்றாகப் படிக்கவும் அவர்களுக்கு மூளை வளர்ச்சியைத் தரும் உணவுகளைத் தருவது மிக அவசியம். பொதுவாக உணவு என்பது உடலுக்கு மட்டும் நன்மையைத் தருவது அல்ல, அது மூளையையும் புத்துணர்ச்சியோடு அறிவாற்றலை அதிகரிக்கச் செய்வதற்கும் உணவு முக்கியப் பங்காற்றுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பழங்கள் கொடுத்தல்

பழங்கள் கொடுத்தல்

குழந்தைகளுக்கு கண்ட உணவுகளையும் கொடுப்பதை விடவும் பழங்கள் கொடுப்பது மிகவும் ஆரோக்கியமான விஷயம் என்பது நம் எல்லோருக்கும் தெரிந்தது தான். பொதுவாக குழந்தைகள் பழங்கள் சாப்பிட மாட்டார்கள் என்று நீங்களாகவே நினைத்துக் கொண்டு எப்போதும் ஜூஸ் போட்டுக் கொடுக்காதீர்கள். குழந்தைகளுக்கு பழங்களை அப்படியே சாப்பிடக் கொடுங்கள். குழந்தைகளுக்கு சாப்பாட்டுக்கு முன்பாகவோ பின்பாகவோ இரண்டு மணி நேர இடைவேளைகளில் குழந்தைகளுக்கு பழங்கள் சாப்பிடக் கொடுக்கக் கொடுங்கள்.

MOST READ: பொள்ளாச்சி சம்பவம் மாதிரி பெண் பிள்ளைகள் ஏதோ பிரச்சினையில் மாட்டியிருக்கிறார்கள் என்பதை எப்படி கண்டு

ஜீரண சக்தி

ஜீரண சக்தி

உணவு உண்ட உடனேயே பழங்களைச் சாப்பிடக் கொடுத்தால் அது ஏற்கனவே வயிற்றுக்குள் இருக்கின்ற மற்ற உணவுகளைச் செரிமானம் அடைய விடாமல் பழங்கள் முதலில் செரிமானம் அடைந்து விடும். அதன் தொடர்ச்சியாக மற்ற ஊட்டச்சத்துக்களும் கிரகித்துவிடும். அந்த உணவு அப்படியே இருக்கும். அதனால் குழந்தைகளுக்கு நிறைய ஏப்பம் வரும் தொந்தரவுகள் அதிகம்.

எப்படி மறந்து போகிறது?

எப்படி மறந்து போகிறது?

ஞாபக மறதிக்கு மிக முக்கியக் காரணம் மூளை நரம்புகளின் முதிர்ச்சியினாலும் மன அழுத்ததம் அதிகமாவதாலும் மூளை சோர்வடைகிறது. அதனால் மூளை எதையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள முடியாமல் போகிறது.

மீன் சாப்பிட்ட

மீன் சாப்பிட்ட

கர்ப்ப காலத்தில் அதிகமாக மீன் சாப்பிட்ட தாய்மார்க்குக்கு பிறந்த குழந்தையாக இருந்தால் அந்த குழந்தைகள் மிகவும் புத்திக் கூர்மையோடு இருக்கும். அதேபோல் அந்த குழந்தைகள் வயிற்றில் இருக்கும் போது, அவர்களுக்கு மூளை சம்பந்தப்பட்ட நோய்த் தாக்குதல்களும் மிகக் குறைவாகவே இருக்கும். அந்த குழந்தைகளுக்கு கை, கண் ஆகியவை சிறப்பாக செயல்படும். தகவல் தொடர்பிலும் சிறந்து விளங்குவார்கள்.

MOST READ: காம உணர்ச்சி அதிகமாக இருக்கும் ராசிக்காரர் யார் தெரியுமா? கொஞ்சம் கவனமாவே இருங்க

பால் பொருள்கள்

பால் பொருள்கள்

பால் மற்றும் பாலில் இருந்து தயாரிக்கப்படும் பொருள்கள் ஆகியவற்றில் அதிக அளவில் புரோட்டீனும் கால்சியம், பொட்டாசியம், வைட்டமின் டி ஆகியவை கிடைக்கும். இவ்வளவு ஊட்டச்சத்தைக் கொடுக்கும் பால் நரம்பு மண்டலத்தை சிறப்பாக செயல்பட வைக்கும். அது மூளை செல்களை சிறப்பாகச் செயல்பட வைக்கிறது.

வைட்டமின் டி

வைட்டமின் டி

வைட்டமின் டி மூளையின் ஞாபகச் சக்தியை அதிகரிக்கும். அதற்கு மிக முக்கியமான ஒரு விஷயம் என்றால், அதற்கு கோலைன் சத்து தான் முக்கியம். இந்த கோலன் சத்து முட்டையில் மிக அதிகமாகவே இருக்கிறது. முட்டையில் இருக்கின்ற வைட்டமின் டி மூளை வளர்ச்சியை அதிகரிக்கச் செய்கிறது.

தானியங்கள்

தானியங்கள்

வைட்டபின் பி, குளுக்கோஸ் அதிகமாக உள்ள ஓட்ஸ் மற்றும் சிவப்பு அரிசியில் அதிகமாக உள்ளது. அதனால் குழந்தைகளுக்கு தினமும் ஒரு தானியத்தை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

காய்கறிகள்

காய்கறிகள்

கீரைகள், காய்கறிகள் போன்றவற்றை சாப்பிட்டால் குழந்தைகளுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும். அதிலும் குறிப்பாக, பசலைக் கீரை, லெட்யூஸ், ப்ரக்கோலி, காலிஃபிளவர், ஸ்புரூட்ஸ் போன்ற காய்கறிகள் மூளையின் ஞாபகத் திறனை அதிகரிக்கச் செய்யும். வைட்டமின் மற்றும் கனிமச் சத்துக்கள் அதிக அளவில் இருப்பது குழந்தையின் மூளை வளர்ச்சியை அதிகரிக்கச் செய்யும்.

MOST READ: தன் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த டீச்சரம்மா... நாட்டுல என்னதான் நடக்குது?

தயிர்

தயிர்

தினமும் காலையிலும் இரவிலும் குழந்தைக்கு பாலில் நாட்டுச் சர்க்கரை அல்லது தேன் கலந்து சாப்பிடக் கொடுங்கள். வெல்லத்தில் இரும்புச் சத்து அதிகமாக இருக்கும். பாலில் கால்சியம் அதிகம் இருப்பதால் குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்கச் செய்யும். குழந்தைகளுக்கு படிக்கிற விஷயம் மறக்காமல் இருக்கும். பரீட்சையில் கடித்ததை சரியான நேரத்தில் ஞாபகப்படுத்தி சிறப்பாக எழுதுவார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

exam fear: how to improve memory power of your kids

There’s a need to understand the span of attention of students and their capacity to store information in their working memory. It is not educationally sound to impose on the students huge amount of information for long period of time, this will leave them confused and clueless.
Story first published: Monday, March 25, 2019, 15:23 [IST]
Desktop Bottom Promotion