ஆண் துணை இன்றி தனி ஆளாக தங்கள் குழந்தைகளை சிறப்பாக வளர்த்து ஆளாக்கிய நடிகைகள்!

Posted By: Staff
Subscribe to Boldsky

நடிகைகளாக இருந்தாலும் சரி, சாதாரண பெண்களாக இருந்தாலும் சரி தனி ஆளாக நின்று தங்கள் குழந்தைகளை வளர்க்க முடியாது என்று தான் இந்த சமூகம் கூறி வருகிறது.

அது திருமணமாகாமல் குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கும் பெண்களாக இருக்கட்டும், விவாகரத்தான பெண்களாக இருக்கட்டும்., அல்லது கணவனை இழந்த பெண்களாக இருக்கட்டும். எப்படி இருந்தாலும் பெண்களுக்கு வாழ்நாள் முடியும் வரை ஒரு ஆண் துணை வேண்டும் என்று காலம் காலமாக கூறி வருகிறது இந்த சமூகம்.

ஆனால், ஆண் துணை இல்லாமலேயே தனியாக இந்த சமூகத்தில் வாழ முடியும். குழந்தைகளையும் வளர்த்து பெரிய ஆட்களாக ஆக்க முடியும் என்று இந்த இந்திய நடிகைகள் நிரூபித்து வருகிறார்கள். இவர்களது வாழ்க்கை கதையானது ஒவ்வொரு சாமானிய பெண்ணுக்கும் ஒரு பாடமாகவும், முன்னுதாரணமாகவும் அமையும் என்பது எள்ளளவும் சந்தேகம் இல்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சுஷ்மிதா சென்!

சுஷ்மிதா சென்!

தனக்கு ஆண் துணை தேவையில்லை என்று, தனி ஆளாக தத்தெடுத்து இரண்டு பெண் குழந்தைகளை வளர்த்து வருகிறார் முன்னாள் பிரபஞ்ச அழகி சுஷ்மிதா சென். சமூகத்தின் அத்தனை கட்டுப்பாடுகளையும் தகர்த்து தனது குழந்தைகளை ஒரு வீராங்கனை போல கம்பீரமாக வளர்த்து வருகிறார் சுஷ்மிதா.

முன்னுதாரணமாக...

முன்னுதாரணமாக...

சுஷ்மிதா சென்னின் குடும்பம் ஒரு மிஸ் பர்பெக்ட் ஃபேமிலி. ஒவ்வொரு தனி பெண்மணிக்கும் சுஷ்மிதா சென் ஒரு முன்மாதிரியாக திகழ்ந்து வருகிறார். முக்கியமாக குழந்தைகளை தத்தெடுத்து வளர்ப்பதிலும், ஒரு பெண்ணால் தனி நபராக இந்த சமூகத்தில் நின்று குழந்தைகளை வளர்க்க முடியும் என்றும் ஒரு முன்னுதாரணமாக இருந்து வருகிறார் சுஷ்மிதா சென்.

கரிஷ்மா கபூர்!

கரிஷ்மா கபூர்!

அபிஷேக் பச்சனுடன் நிச்சயம் செய்து திருமணம் நின்று போனவர் கரிஷ்மா கபூர். இவரது சகோதரி கரீனா கபூரும் பாலிவுட் நடிகை தான். இவருக்கு ஒரு பெண் குழந்தை மற்றும் ஆண் குழந்தை. ஆனால், ஒரு மோசமான பிரச்சனையால் இவர் தனது கணவர் சஞ்சய் கபூரை விவாகரத்து செய்துவிட்டார்.

தேவையில்லை...

தேவையில்லை...

ஆனால், தனி ஆளாக தனது குழந்தைகளை கரிஷ்மா தான் வளர்த்து வருகிறார். நிறைய பெண்கள் எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும் கணவனுடன் சேர்ந்து வாழ்வதற்கு காரணம் என்று கூறுவது தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் தான். ஆனால், இது இனிமேல் தேவையில்லை. பெண்களாலும் தனி ஆளாக குழந்தைகளை நல்லப்படியாக வளர்க்க முடியும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கிறார் கரிஷ்மா கபூர்.

ஊர்வசி தோலக்கியா!

ஊர்வசி தோலக்கியா!

நிறைய பேருக்கு இவருக்கு இரட்டையர் குழந்தைகள் இருப்பது தெரியாது. ஊர்வசி ஒரு சிறந்த நடிகை. இவரது கதை மிகவும் ஊக்கமளிக்கும் வகையிலானது. இவருக்கு 16 வயதிலேயே திருமணம் ஆகிவிட்டது. 17 வயதிலேயே இவர் இரட்டையர் குழந்தை பெற்றேடுத்துவிட்டார். ஆனால், எதிர்பாராத விதமாக ஊர்வசி மிக குறுகிய காலக்கட்டத்திலேயே தனது கணவரை விட்டு பிரிந்துவிட்டார்.

பதின் வயதில் இருந்தே...

பதின் வயதில் இருந்தே...

அதன் பிறகு தனி ஆளாக இருந்து தனது இரட்டையர் குழந்தைகளை வளர்த்து வருகிறார் ஊர்வசி. மற்றவர்களாவது கொஞ்சம் முதிர்ச்சியான வயதில் இருந்து இப்படி இருக்கிறார்கள். ஆனால், தனது பதின் வயதுகளில் இருந்து தனது குழந்தைகளை தனி ஆளாக இருந்து வளர்த்து வருகிறார் ஊர்வசி. இவர் நிஜமாகவே ஒரு முன்னுதாரணமான பெண்மணி தான்.

ஸ்வேதா திவாரி!

ஸ்வேதா திவாரி!

சில பிரச்சனைகள் காரணமாக ஸ்வேதா திவாரி விவாகரத்து செய்துவிட்டார். அது ஊடகங்கள் எங்கிலும் பரவியது. தனது முன்னாள் கணவருடன் கசப்பான அனுபவம் கொண்டிருந்த ஸ்வேதா திவாரி சென்ற ஆண்டு தான் மீண்டும் திருமணம் செய்துக் கொண்டார். ஆனால், அதன் முன்பு வரை தனது மகளை தனி ஆளாக இருந்து வளர்த்து வந்தார் ஸ்வேதா.

பொருளாதார சிக்கல்!

பொருளாதார சிக்கல்!

பொருளாதார ரீதியாக பல பிரச்சனைகள் வந்தாலும் கூட, டிவிகளில் தோன்றி நடித்து தனது குழந்தையை காப்பாற்றி வந்தார். இல்லறத்தில் நடக்கும் கொடுமைகளை தாண்டி, ஸ்வேதா திவாரி போன்றவர்கள் சமூகத்தில் தனி ஆளாக இருந்து குழந்தையை வளர்த்து சாதித்து காட்டியிருப்பது மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும்.

காம்யா பஞ்சாபி

காம்யா பஞ்சாபி

காம்யா பஞ்சாபியை அறிந்த பலருக்கு அவர் ஒரு சிங்கிள் பேரண்ட் என்பது தெரியாது. இவர் பிக் பாஸ் ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்குபெறும் முன்னரே தனது கணவர் பண்டி நேகியிடம் இருந்து விவாகரத்து பெற்றுக் கொண்டு தான் வந்தார். இப்போது தனது மகள் ஆராவுடன் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார் காம்யா பஞ்சாபி.

நீனா குப்தா!

நீனா குப்தா!

திருமணத்திற்கு முன்பே குழந்தையா என்பது இப்போதும் ஆச்சரியமாக இருக்கும் போது, 1989லேயே திருமணம் செய்துக் கொள்ளாமல் குழந்தை பெற்றவர் நீனா குப்தா. இவருக்கும் மேற்கிந்திய தீவுகள் அணி வீரருக்கும் தான் குழந்தை பிறந்தது. அந்த காலத்தில் இது மிகவும் மோசமானதாக காணப்பட்ட சமாச்சாரம். இப்போதும் கூட தான்.

ஆயினும் தனது மகள் மசாபாவை வளர்க்க தனக்கென ஒரு துறையை தேர்வு செய்து அதில் நிலையாக இருந்து வெற்றிக் கண்டார் நீனா குப்தா. இப்போது நீனா குப்தாவின் மகளான மாசபா ஃபேஷன் துறையில் காலூன்றி பெரும் நபராக திகழ்ந்து வருகிறார்.

அம்ரிதா சிங்!

அம்ரிதா சிங்!

சயப் அலிகானின் முன்னாள் மனைவி அம்ரிதா சிங். இவர்கள் இருவருக்கும் விவாகரத்து ஆகிவிட்டது. விவாகரத்துக்கு பிறகு குழந்தைகள் சாரா மற்றும் இப்ராஹீம் அம்ரிதா சிங்குடன் தான் வாழ்ந்து வருகிறார்கள். விவாகரத்துக்கு பிறகு இவர் மீண்டும் திரையில் நடிக்க வந்து தனது குழந்தைகளை காப்பாற்றி வருகிறார்.

சரிகா!

சரிகா!

70-80களில் இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் சரிகா. நான்கு வயதில் நடிக்க வந்தார். சொந்த அம்மாவாலேயே ஏமாற்றப்பட்டவர் சரிகா. தான் உச்ச நட்சத்திரமாக இருக்கும் போது தென்னிந்தியா சுப்பர்ஸ்டார் நடிகரான கமல் ஹாசனை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.

விவாகரத்து!

விவாகரத்து!

ஆனால், அவருக்கும் வேறு நடிகைக்கும் தொடர்பு இருக்கிறது என்று அறிய வந்த பிறகு, இவர்கள் இருவரும் விவாகரத்து செய்துவிட்டனர். விவாகரத்துக்கு பிறகு மகள்கள் இருவரும் சரிகாவுடன் மும்பையில் தான் வளர்ந்து வந்தனர். ஸ்ருதி மற்றும் அக்ஷராவை மிகவும் பத்திரமாக வளர்த்து வந்தார் சரிகா.

ஒருக்கட்டதிற்கு பிறகு ஸ்ருதி தென்னிந்தியா சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டி சென்னைக்கு வந்தார். அக்ஷரா எப்போதுமே அம்மா மகளாக அவருடனேயே இருந்து வருகிறார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

The Proud Single Parent Celebrities, Who Raising Their Kids Like a Boss!

Here is a List of Proud Single Parent Celebrities, Who Raising Their Kids Like a Boss!