Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடை இருமடங்கு வேகத்துல குறையும்! -
செப்டம்பர் 25, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப சோதனையான நாளாக இருக்குமாம் -
அக்டோபர் தொடக்கத்தில் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
சனிபகவான் மீன ராசியில் நேரடி இயக்கத்தைத் தொடங்குவதால் உச்சத்தைத் தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹோட்டல் பரோட்டா சால்னா ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
1 கப் பாசிப்பருப்பு இருந்தா இந்த பெங்காலி ஸ்டைல் கிச்சடி ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமா, டேஸ்ட்டா இருக்கும் -
செப்டம்பர் 26-ல் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்! -
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம் -
1 கப் பச்சை பயறு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத பசங்களுக்கு செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன?
குழந்தைகள் நன்கு சாப்பிட்டும் எடை அதிகரிக்காமல் இருக்க காரணங்கள்
அம்மாக்களுக்கு இருக்கும் கவலைகளில் முக்கியமான கவலைகளில் ஒன்று குழந்தைகளின் எடை பற்றியது. ஏனெனில் குறைவான எடை அவர்களின் ஆரோக்கிய குறைபாட்டின் அறிகுறி ஆகும்.
பெண்களின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குவது குழந்தை வரம்தான். என்னதான் குழந்தை மகிழ்ச்சியான விஷயமாக இருந்தாலும் குழந்தை உருவானது முதலே அம்மாக்களுக்கு கவலையும் தொற்றிக்கொள்ளும் ஒன்றுதான். ஏனெனில் குழந்தையை பத்திரமாக பெற்றெடுப்பதில் இருந்து அதன் பின் அவர்களை பத்திரமாகவும், ஆரோக்கியமாகவும் வளர்ப்பது என அவர்களின் கவலைகள் நீண்டு கொண்டே செல்லும்.

அம்மாக்களுக்கு இருக்கும் கவலைகளில் முக்கியமான கவலைகளில் ஒன்று குழந்தைகளின் எடை பற்றியது. ஏனெனில் குறைவான எடை அவர்களின் ஆரோக்கிய குறைபாட்டின் அறிகுறி ஆகும். நீங்கள் என்னதான் ஆரோக்கியமான உணவுகளை கொடுத்தாலும் குழந்தைகளின் எடை அதிகரிக்காமல் இருக்க சில காரணங்கள் உள்ளது.

காரணம் 1
குழந்தைகள் எடை அதிகரிக்காமல் இருக்க முக்கிய காரணம் போதுமான அளவு கலோரிகள் எடுத்துக்கொள்ளதுதான். குழந்தைகள் பல்வேறு காரணங்களால் சாப்பாடு மீது வெறுப்பு காட்டுவதும் பெற்றோர்கள் அதனை புரிந்து கொள்ளாமல் இருப்பதும் குழந்தைகளுக்கு தேவையான கலோரிகள் கிடைப்பதில்லை. குறிப்பாக குழந்தைகள் தாய்ப்பால் சரியாக குடிக்காமல் இருப்பதுதான் முக்கிய காரணம்.

காரணம் 2
குழந்தைகளின் வாய் ஆரோக்கியம் மற்றும் சில நரம்பியல் கோளாறுகளும் குழந்தையின் வளர்ச்சியை பாதிக்கும். இத்தகைய பிரச்சினைகள் குழந்தைகளின் விழுங்கும் திறனை பாதிக்கிறது.

காரணம் 3
சிலசமயம் குழந்தைகள் அதிகப்படியான வாந்தி பிரச்சினையால் போதுமான உணவை எடுத்துக்கொள்வதில்லை. இதற்கு காரணம் குழந்தைகளுக்கு ஏற்படும் அமிலப்பிரச்சினைகள் ஆகும். இது குழந்தைகளின் தசைகளை பலவீனமாக்குவதோடு அவர்கள் எடையிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

காரணம் 4
கணைய செயல்பாடு சரியாக இல்லாத குழந்தைகளின் எடை அதிகரிக்க வாய்ப்பு இல்லை. இது போன்ற பிரச்சினைகளால் தளர்வான தசைகள், மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.

காரணம் 5
சில நோய்களும் குழந்தைகளின் எடை அதிகரிப்பதை தடுக்கிறது. செலியாக் அல்லது க்ரோன் போன்ற குடல் நோய்கள் குழந்தைக்கு இருக்கும்போது அது எடை அதிகரிப்பை தடுக்கும். க்ளட்டன் உள்ள உணவுகளை உணவில் சேர்த்துக்கொள்வதுதான் இதற்கு முக்கிய காரணம்.

காரணம் 6
சில குழந்தைகளின் சுறுசுறுப்பாக இருப்பதே அவர்கள் எடைஅதிகரிப்பை தடுக்கும். கலோரிகள் அதிகம் எரிக்கப்படும்போது குழந்தைகளின் எடை அதிகரிக்காது. ஹைப்பர் ஆக்டிவ் இருக்கும் குழந்தைகள் பெரும்பாலும் ஒல்லியாகத்தான் இருப்பார்கள்.

காரணம் 7
சிலசமயம் சிறுநீரக கோளாறுகள் கூட குழந்தையின் எடையில் பிரச்சினைகளை ஏற்படுத்தும். சிறுநீரக கற்கள் மற்றும் கோளாறுகள் எடை மட்டுமின்றி குழந்தைகளின் மற்ற வளர்ச்சிகளிலும் தடங்கல் ஏற்படும்.

காரணம் 8
குழந்தைகளின் மரபணுக்களும் அவர்களின் எடையில் முக்கியப்பங்கு வகிக்கிறது. அவர்களின் மரபணுக்களில் உள்ள சில மூலக்கூறுகள் அவர்களின் எடை அதிகரிப்பை தடுக்கக்கூடும்.



Click it and Unblock the Notifications
